கால்பந்துக்கு உலக கோப்பை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் டென்னிஸ் விளையாட்டிற்கு விம்பிள்டென்(WIMBLEDON) போட்டி. விம்பிள்டென் போட்டி மிகவும் பழமை வாய்ந்த, மிகவும் புகழ்பெற்ற புல் டென்னிஸ் போட்டி ஆகும். விம்பிள்டென் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் உள்ள விம்பிள்டென் என்னும் இடத்தில் இன்று துவங்க உள்ளது. இது அடுத்த மதம் நான்காம் தேதி வரை நடைபெறவுள்ளது. விம்பிள்டென் போட்டியில் வெற்றி பெறுபவறுக்கு பரிசு தொகை 153 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணிக்கப்பட்டுள்ளது. இதன் இந்தியா மதிப்பு 700 கோடிகள். விம்பிள்டென் டென்னிஸ் போட்டியில் பல பிரிவுகள் உள்ளது ஆடவர் ஒற்றையர் பிரிவு (MENS SINGLES) , மகளிர் ஒற்றையர் பிரிவு (WOMENS SINGLES) , ஆடவர் ரெட்டையர் பிரிவு (MENS DOUBLES) , மகளிர் ரெட்டையர் பிரிவு (WOMENS DOUBLES) மற்றும் கலப்பு ரெட்டையர் பிரிவு ( MIXED DOUBLES) . டென்னிஸ் விளையாட்டில் உள்ள நான்கு கிரான்ட் ஸ்லாம் (GRANDSLAM) போட்டிகளில் ஒன்று. பீட் சாம்ப்ராஸ் (PETE SAMPRAS) என்னும் அமெரிக்க வீரர் அதிகபட்சமாக ஏழு முறை விம்பிள்டென் பட்டதை வாங்கி உள்ளார். இவரை அடுத்து ரோகர் பெடேரர் (ROGER FEDERER) என்னும் சுவிட்சர்லாந்து வீரர் ஆறு முறை வாங்கி உள்ளார். மேலும் பெடேரர் (FEDERER) இந்த ஆண்டும் வெற்றி பெற்றால் சாம்ப்ராஸ் உடைய சாதனையை சமன் செய்வார்.
- ஜாஸிம் புஹாரி
0 Comments:
Post a Comment