அமெரிகாக்கவில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான ஆப்பிள் கம்பெனியின் மாநாட்டில் ஆப்பிளின் புதிய மாடலான ஐ-போன் 4 என்கிற புதிய மாடலை ஆப்பிளின் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் அறிமுக படுத்தி வைத்தார். இந்த மாநாடு ஜூன் ஏழு முதல் ஜூன் பதினொன்றாம் தேதி வரை நடக்கிறது. அனைவரும் எதிர் பார்த்தது போல் 4G என்கிற நான்காம் தலைமுறை போனாக இல்லாமல் 3G என்கிற மூன்றாம் தலைமுறையிலே ஐ-போன் 4 என்கிற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த மாடலில் பல புதிய வசதிகளுடன் மார்க்கெட்டில் இருக்கும் மற்ற மொபைல் போன்களுக்கு கடுமையான போட்டியாக அமையும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது.
இதன் மற்ற சிறப்பு அம்சங்கள்
கேமரா (பேஸ் டைம்)டிஸ்ப்ளே
மிகவும் துல்லியமான, அதிநுட்ப வண்ணங்கள் கொண்ட இந்த டிஸ்ப்ளே 960X640 resolution களை கொண்டது. 3.5" கொண்ட இந்த டிஸ்ப்ளேவில் புகைப்படங்கள், காட்சிகள் மற்றும் எழுத்துக்களை மற்ற எந்த மொபைல்களை விட மிக தெளிவாக பார்க்கலாம். இதை பார்க்கலாம். இதை retine display என்று அழைக்கிறார்கள்.Multi Tasking (மல்டி டாஸ்கிங்)
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான applications-ஐ பயன்படுத்தும் வசதி தற்போதுள்ள ஐ-போனில் இல்லை. ஆனால் இதில் நான்கு, ஐந்து அப்ளிகேஷன்ஸ் பயன்படுத்தி கொண்டிருந்தால் கூட வேகம் குறையாமலும், பேட்டரியின் ஆயுள் குறையாமலும் பயன்படுத்த முடியும். ஆனால் மென்பொருளை மாற்றி கொண்டால் தற்போதுள்ள 3ஜி மாடலில் பயன்படுத்தி கொள்ள முடியும்.கேமரா
LED ஃப்ளாஷ் வெளிச்ச வசதிக் கொண்ட 5 மெகா பிக்ஷல் கேமரா வசதி இருப்பதால் ர்னு வீடியோ ரெகார்டிங் செய்து கொள்ளலாம். இந்த வீடியோ காட்சிகளை உடனுக்குடன் படத்தொகுப்பு செய்துக் கொள்ள முடிவதுடன் சுலபமாக மற்றவர்களுக்கு பகிர்ந்தும் கொள்ளலாம்.மற்ற வசதிகள்
இதில் பொருத்தப்பட்டுள்ள ஆப்பிள் 4ஜி ப்ராசஸர; ஐபோன்களிலே மிக வேகமாக செயல்படக்கூடியது. இது ஆப்பிளின் முந்தைய வெளியீடான ஐபேடிலும் உபயோகிக்கப்பட்டுள்ளது.பேட்டரி
Builtin Rechargable Lithium Ion பேட்டரி வசதிக் கொண்ட இது மற்ற ஐபேன் பேட்டரிகளை விட சிறந்தது.பேசுவதற்கு 2ஜி: 14 மணி நேரங்கள்
3ஜி: 7 மணி நேரங்கள்
ஓலி கேட்டபதற்கு: 40 மணி நேரங்கள்
காட்சிகளுக்கு 10 மணி நேரங்கள்
இன்டர்நெட் பயன்படுத்த.. 3ஜி: 6 மணி நேரங்கள்
WIFI பயன்படுத்த: 10 மணி நேரங்கள்
கலர் :
இது கருப்பு மற்றும் வௌ;ளை நிறங்களில் கிடைக்கிறது.Capacity: 16GB/32GB
OS: I OS4
இதில் முக்கியமான ஒன்று மற்ற ஆப்பிள் மொபைல்களை விட வடிவத்தில் முற்றிலும் மாறுபட்டு தட்டையாக அமைந்துள்ளது.
-ஜாஸிம் புஹாரி, ஜாஃபர் ஷாதிக்
0 Comments:
Post a Comment