அதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள் எது என்று ஒவ்வொரு வருடமும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டிற்கான பட்டியலை நேற்று போஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் வெளியிட்டது. உலக பொருளாதாரம் 11.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்த பட்டியல் தெரிவிக்கின்றது. பண முதலீடு, பொருளாதார சந்தையின் தொகை மற்றும் பலவிதமான சொத்துகளின் மதிப்புகளை வைத்து உலக பொருளாதாரத்தின் மதிப்பு 111.5 ட்ரில்லியன் என்று இதனுடன் வெளியிட்டு உள்ளனர். உலக பொருளாதார வீழ்ச்சியில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தும் அமெரிக்கவே இந்த பட்டியலில் வழக்கம்போல முதல் இடத்தில இருக்கிறது. அதிக மில்லினியர்களை கொண்ட முதல் பத்து நாடுகளை பற்றி இங்கே பார்போம்.
1. அமெரிக்கா
1. அமெரிக்கா
அமெரிக்காவில் மட்டும் நாப்பத்தி ஏழு லட்சத்தி பதினைந்து ஆயிரம் குடும்பங்கள் மில்லினியராக வாழ்வதாக இந்த பட்டியல் சொல்கிறது. இவர்களின் சொத்து மதிப்பு அமெரிக்காவின் பொருளாதரத்தில் ஐம்பத்தி ஆறு சதவீதம் இருக்கிறதாம். இது 15.1 சதவீதம் உயர்ந்து உள்ளது.
2. ஜப்பான்
2. ஜப்பான்
ஜப்பானில் பனிரெண்டு லட்சத்தி முப்பதாயிரம் குடுமங்கள் மில்லினயராக வாழ்கிறார்களாம். இது 5.9 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு 21 சதவீதம
3. சீனா
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் மிக அதிக சதவீத வளர்ச்சியான 30.7 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு சீனாவின் ஐம்பது சதவீதம் உள்ளது.
4. ஐக்கிய ராஜ்ஜியம்:
ஐக்கிய ராஜ்ஜியம் (யுனிடட் கிங்டம்) - நான்கு லட்சத்தி எம்பத்தி ஐந்தாரியரம் மில்லினியர்கள் இருக்கிறார்கலாம். இது கடந்த ஆண்டின் 11.5 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி மூன்று சதவீதம்.
5. ஜெர்மனி:
நான்கு லட்சத்தி முப்பதாயிரம் குடும்பங்களை கொண்டு ஜெர்மனி இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தில உள்ளது. இது கடந்த ஆண்டின் 23.1 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ரெண்டு சதவீதம்.
6. இத்தாலி
5. ஜெர்மனி:
நான்கு லட்சத்தி முப்பதாயிரம் குடும்பங்களை கொண்டு ஜெர்மனி இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தில உள்ளது. இது கடந்த ஆண்டின் 23.1 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ரெண்டு சதவீதம்.
6. இத்தாலி
மூன்று லட்சம் மில்லினிய குடும்பங்கள் கொண்ட இத்தாலி இதில் ஆறாவது இடம். இது 7.6 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ஏழு சதவீதம்.
8. பிரான்ஸ்
பிரான்ஸ் மில்லினிய குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தி எம்பதாயிரம். இது 11.2 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதாரம் பிரான்சின் பொருளாதாரத்தில் பத்தொன்பது சதவீதம் இருக்கிறதாம்.
9. தைவான்
இரண்டு லட்சத்தி முப்பதாயிரம் மில்லினிய குடும்பங்கள். வளர்ச்சி 21.1 சதவீதம். இவர்களின் பங்கு முப்பத்தி ஏழு சதவீதம்.
10. ஹாங்காங்
இரண்டு லட்சத்தி ஐந்தாயிரம் குடும்பங்கள் கொண்ட ஹாங்காங் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில இருக்கிறது. வளர்ச்சி 16.2 சதவீதம். இந்த மில்லினிய குடும்பங்களின் பொருளாதார பங்கு எழுபத்தி மூன்று சதவீதம்.
- ஜாஃபர் ஷாதிக் | நன்றி: ஜாஸிம் புஹாரி, ஜவ்சிக்
0 Comments:
Post a Comment