JASH PHOTOGRAPHY

Wednesday, June 23, 2010

அதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள்


அதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள் எது என்று ஒவ்வொரு வருடமும்  கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டிற்கான பட்டியலை நேற்று போஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் வெளியிட்டது. உலக பொருளாதாரம் 11.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்த பட்டியல் தெரிவிக்கின்றது. பண முதலீடு, பொருளாதார சந்தையின் தொகை மற்றும் பலவிதமான சொத்துகளின் மதிப்புகளை வைத்து உலக பொருளாதாரத்தின் மதிப்பு 111.5 ட்ரில்லியன் என்று இதனுடன் வெளியிட்டு உள்ளனர். உலக பொருளாதார வீழ்ச்சியில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தும் அமெரிக்கவே இந்த பட்டியலில் வழக்கம்போல முதல் இடத்தில இருக்கிறது. அதிக மில்லினியர்களை கொண்ட முதல் பத்து நாடுகளை பற்றி இங்கே பார்போம்.

1. அமெரிக்கா   
             அமெரிக்காவில் மட்டும் நாப்பத்தி ஏழு லட்சத்தி பதினைந்து ஆயிரம் குடும்பங்கள் மில்லினியராக வாழ்வதாக இந்த பட்டியல் சொல்கிறது. இவர்களின் சொத்து மதிப்பு அமெரிக்காவின் பொருளாதரத்தில் ஐம்பத்தி ஆறு சதவீதம் இருக்கிறதாம். இது 15.1 சதவீதம் உயர்ந்து உள்ளது.

2. ஜப்பான்  
                ஜப்பானில் பனிரெண்டு லட்சத்தி முப்பதாயிரம் குடுமங்கள் மில்லினயராக வாழ்கிறார்களாம். இது 5.9 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு 21 சதவீதம

3. சீனா   
               உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் மிக அதிக சதவீத வளர்ச்சியான 30.7 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு சீனாவின் ஐம்பது சதவீதம் உள்ளது.

4. ஐக்கிய ராஜ்ஜியம்:
              ஐக்கிய ராஜ்ஜியம் (யுனிடட் கிங்டம்) - நான்கு லட்சத்தி எம்பத்தி ஐந்தாரியரம் மில்லினியர்கள் இருக்கிறார்கலாம். இது கடந்த ஆண்டின் 11.5 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி மூன்று சதவீதம்.

5. ஜெர்மனி:
                 நான்கு லட்சத்தி முப்பதாயிரம்   குடும்பங்களை கொண்டு ஜெர்மனி இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தில உள்ளது. இது கடந்த ஆண்டின் 23.1 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ரெண்டு சதவீதம்.
 
6. இத்தாலி   
                  மூன்று லட்சம் மில்லினிய குடும்பங்கள் கொண்ட இத்தாலி இதில் ஆறாவது இடம்.  இது 7.6 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ஏழு சதவீதம்.
 
7. சுவிட்ஸர்லாந்து   
                  இரண்டு லட்சத்தி எம்பத்தி மூன்று ஆயிரம் நபர்களை கொண்ட சுவிட்ஸர்லாந்தின் வளர்ச்சி 8.4 சதவீதம். ஆனால் இவர்களின் பொருளாதாரம் அந்த நாட்டின் நாப்பத்தி நாலு சதவீதம்.


8. பிரான்ஸ்   
                  பிரான்ஸ் மில்லினிய குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தி எம்பதாயிரம். இது 11.2 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதாரம் பிரான்சின் பொருளாதாரத்தில் பத்தொன்பது சதவீதம் இருக்கிறதாம்.
9. தைவான்   
                 இரண்டு லட்சத்தி முப்பதாயிரம் மில்லினிய குடும்பங்கள். வளர்ச்சி 21.1 சதவீதம். இவர்களின் பங்கு முப்பத்தி ஏழு சதவீதம்.
 
10. ஹாங்காங்   
                இரண்டு லட்சத்தி ஐந்தாயிரம் குடும்பங்கள் கொண்ட ஹாங்காங் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில இருக்கிறது. வளர்ச்சி 16.2 சதவீதம். இந்த மில்லினிய குடும்பங்களின் பொருளாதார பங்கு எழுபத்தி மூன்று சதவீதம்.
 - ஜாஃபர் ஷாதிக் | நன்றி: ஜாஸிம் புஹாரி, ஜவ்சிக்


Sunday, June 13, 2010

ஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை சுமக்கிறது..!


ஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை சுமக்கிறது..!
முதலில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சீன மருத்தவர்கள் நம்பவில்லை பின்பு நேரடியாக சென்று பார்த்த பிறகு அதிர்ச்சியில் உறைந்து போயினர்..!
Kang Mengru  - என்று அழைக்கப்படும் அந்த குழந்தை ஒரு அனாதையாகும், ஒரு சீன தம்பதிகள் அந்த குழந்தை எடுத்து வளர்க்க ஆரம்பித்த போது அந்த குழந்தையின் வயிறு ஆனது பெரிதாகி கொண்டே போனது முதலில் இதை தீய சக்தி என்று கருதிய  தம்பதிகள் பின்பு மருத்தவரிடம் கொன்று காண்பித்த போது தான் தெரிந்தது அந்த குழந்தையின் வயற்றில் இரண்டுசிசு வளர்வது தெரிய வந்தது..,
முதலில் மருத்தவர்கள் கருத்தடை செய்ய முயற்சித்தனர். ஆனால் சில சமயங்களில் கருத்தடை மிகவும் ஆபத்தானது என்று கருதிய மருத்தவர்கள் பின்பு அறுவை  சிகிச்சை மேற்கொண்டு அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த சிசுவை எடுத்து விட்டனர்..கடவுளின் கருணை அந்த குழந்தை இப்போது நலமுடன் இருப்பதாக மருத்தவர்கள் குறியுள்ளனர்...இந்த உலகம் எதையோ நோக்கி பொய் கொண்டிருகிறது என்பது மட்டும் மறக்க முடியாத உண்மையாகும்.. 
Recovering ... tiny 
Kang had surgery to remove parasitic twin குழந்தை குணமாகி வரும் படம் இது. பூர்ண குணமாக வேண்டிகொள்வோம். 
- முஹம்மத் சாதிக்


Wednesday, April 14, 2010

சீனாவில் பயங்கர பூகங்கம்


சீனாவில் இன்று காலையில் நடந்த பயங்கர பூகம்பத்தில் தற்போதைய (இதை எழுதும் போது) செய்தியின் படி 300 பேர் பலியாகி உள்ளனர் என்றும் 8000  (எட்டாயிரம்) பேர் காயம் பட்டிருக்க கூடும் என்று உலகின் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவிகின்றன. ஹைத்தி, சிலி, துருக்கி என சமீபத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் பூகங்கள் எப்போதையும் விட மிக அதிகமாக நடந்து வருகிறது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களுக்காக பிராத்தனை செய்து கொள்வோம். (தற்போதைய தகவல்: இறப்பு: 400௦௦, காயம்: 10,000 க்கு மேல்௦௦. இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டில் இதே சீனாவில் நடந்த பூகம்பத்தில் 90,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நான் தங்கி  இருக்கும் அபு தாபியிலும் இன்று காலை அதிகமான காற்றோடு சிறு மழையும் பெய்தது. புகைப்படங்கள் பார்க்க 




Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha