JASH PHOTOGRAPHY

Saturday, August 7, 2010

உலகத்திரை: புதிதாக ஒரு ப்ளாக்


இன்று புதிதாக ஒரு ப்ளாக் ஆரம்பித்து உள்ளேன். உலகத் திரை என்று உலக சினிமாவை பற்றிய செய்திகள். இது உலகெங்கும் உள்ள நல்ல சினிமா மற்றும் கலைஞர்களை பற்றியதாக இருக்கனும் என்று நினைத்து இருக்கேன்..

http://ulagathirai.blogspot.com/


Monday, April 26, 2010

அபு தாபி முசப்பாஹ்வில் எனக்கு பிடித்த பத்து உணவகங்கள் (MY FAVOURITE TEN RESTAURENTS OF MUSSAFAH, ABU DHABI )


ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்த வரையில் முக்கிய நகரங்களான துபாய் மற்றும் அபு தாபியில் உலகத்தின் முக்கியமான எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும் உணவகங்கள் ஏராளம் இருக்கின்றது. அதிலும் துபையில் தமிழ் நாட்டு உணவுகளுக்கென்றே ஒரு ஊரே இருக்கின்றது எனலாம் போல. சரவணா பவன், ஆப்பக்கடை, செட்டிநாடு ஆரம்பித்து மதுரை அப்பு, புஹாரி வரை எல்லா விதமான உணவகங்களும் இங்கு ஒரு கிளை தொடங்கி வைத்திருப்பார்கள். துபாய் அளவு இல்லை என்றாலும் அபு தாபியில் ஓரளவு வகைகள் உண்டு, அதிலும் முசப்பாஹ்வில் இன்னும் கொஞ்சம் கம்மி தான். ஆனால் வெறும் முசப்பாஹ்வை மட்டும் பார்த்தாலே எண்ணற்ற உணவகங்கள். இந்திய, அரபி ஆரம்பித்து பல வைகள் உண்டு, முசப்பாஹ்வில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் உணவகங்கள் இருக்கின்றது. அவை மெரிட், சென்னை, வாபா, சவுத் இந்தியன், டாரின் என்று பெரிய லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். 

கடந்த மூன்று வாரத்திற்கு மேலே இந்த முசப்பாஹ்வில் வசித்து வரும் நான் அதிகம் செல்லும் மற்றும் எனக்கு அதிகம் பிடித்த முதல் பத்து உணவகங்கள் இங்கே உங்களுடன் பகிர்த்து கொள்ள இருக்கிறேன். 

10  அபு நசியாஹ் ரெஸ்டாரெண்ட் 
(ABU NAZIYAH RESTAURENT):
 நான் முசப்பாஹ் வந்த புதிதில் அதிகம் ரசித்த உணவகம் இது. மிஸ்ரிகாரரின் கடை (இங்கே எகிப்து நாட்டவரை இவ்வாறு அழைப்பதே வழக்கம்). மூன்று வருடத்திற்கு முன்பு இந்த கடையை தேடியே முசப்பாஹ் வரும் அளவு இந்த கடையை இஷ்டமா இருந்தது அப்போது. இன்று வரை பிலாபில் (FALAFEL)க்கு சிறந்த கடை இது எனலாம். இங்கு கிடைக்கும் பிலாபில் ஒரு மாதிரி கீரை கலந்த மாதிரி இருக்கும். பிலாபில் பற்றி தெரியாதவர்களுக்கு... பிலாபில் என்பது நம்ம ஊரு வடை மாதிரி, சாதரணமா தெருவில் கிடைக்கும் பொருள். சில கடைகளில் பார்சல் வாங்க வந்தாலே சும்மா வெயிட் பண்ணுற வரை உண்ண தருவார்கள். அரபிக் உணவில் பிரபலமடைத்த இந்த பிலாபில் பின்னர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவிலும் பிரபலம் அடைந்தது. எந்தவித அசைவமும் கலக்காத முழு சைவம் இது.  

9 மெரிட் ரெஸ்டாரெண்ட் 
(MERIT RESTAURENT): 
நான் தங்கி இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் தமிழ் நாட்டு உணவகம் இது. நாகபட்டினத்தை சேர்த்தவர்கள் நடத்தும் இந்த உணவகம் கடந்த சில வருடங்களாக தமிழர்களுக்கு மத்தியில் ரொம்ப பிரபலம். நம்ம ஊரில் கிடைக்கும் சுவையை இங்கு தேடலாம். கொத்து பரோட்டா, ஊத்தப்பம், இட்லி, தோசை, பொங்கல், வடை, இடியாப்பம் என்று எல்லா தமிழக உணவகத்தில் கிடைக்கும் சுவை இங்கே உண்டு. ஆனால் இங்கே மலையாளிகள், வட இந்திர்யர்கள் மற்றுமின்றி மற்ற நாட்டவர்களும் அதிகம் உண்டு. நான் இங்கு அடிக்கடி செல்லவது எதற்கு என்றால், ஊரை போல இங்கு அக்கௌன்ட் (கணக்கு) வைத்து கொண்டு சாப்பிட்டு மொத்தமாக கொடுத்து விடலாம் பில்களை. 

8 . அல் ஷாம் பேலஸ் கபேதேரியா 
(AL SHAAM PALACE CAFETERIA): 
இது ஒரு  சூரி உணவகம். சிரியா நாட்டவர்களை சூரி என்று தான் அரபியர்கள் அழைப்பார்கள். இந்த கடையில் கிடைக்கும் ஷவர்மா(Shawarma) கொஞ்சம் வித்தியாசமான சுவையாக இருக்கும். 


7. ஹாட் ப்ளேட் 
(HOT PLATE):  

அமீரக இந்தியர்களில் மலையாளிகள், தமிழர்களுக்கு போட்டியாக இங்கே மங்களூர்காரர்களும் அதிகம் உண்டு.   இது ஒரு மங்களூர்காரரின் உணவகம் தான். இங்கே அரபிக், சீனா மட்டும் இந்திய உணவகள் கிடைக்கும் என்று எழுதி இருக்கும். ஆனால் இந்திய உணவுகளே அதிகம் விற்பனையாகும். பெரிய கம்பனிகளின் பார்ட்டிகளும் இங்கே அதிகம் நடைபெறும். 

6. மாடர்ன் அபாமியா அல் ஷாம் ரெஸ்டாரென்ட் 
(MODERN AFAMIA AL SHAAM RESTAURENT)

இதுவும் ஒரு சூரி (சிரியா நாட்டவர்) யின் உணவகம். சில வருடங்களுக்கு முன்பு இதே கடையை ஒரு பாலஸ்தானியார் வேறு பெயரில் நடத்தி வந்ததாக ஞாபகம். நான் பல முறை இங்கே சாப்பிட்டு இருக்கேன், ஆனால் சில மாதம் முன்பு இந்த கடை புது மாதிரியாக மாற்றப்பட்டு அழகாக காட்சி அளித்தது. ருசியும் மிகபெரிய மாற்றம், முன்பை விட ரொம்ப நான்றாக இருந்தது. ஷவர்மா புத்தி விதமான ஒரு சுவை. கோழி போன்று பெரிய ஆர்டர் இருந்தால் பிலாபில் இலவசம், இலையேல் ரெண்டு திர்ஹம் முதல் கிடைக்கும். 

5 . புட் லேன்ட் 
(FOOD LAND): 

அமீரகத்தில் புகழ் பெற்ற இந்திய பிசினஸ்மேன்களில் ஒருவரான பி.ஆர்.ஷெட்டி (B.R.Shetty) ஒரு சராசரி மனிதராக  இந்த நாட்டிற்கு வந்து இன்று பல துறைகளில் ஜொலித்தி வருகிறார். யூ.ஏ.ஈ. எக்சேன்ஞ் (UAE Exchange), நியோ பார்மசி (Neo Pharmacy), என்.எம்.சி மருத்துவமனைகள் (MNC Hospitals) இன்னும் பல துறைகளில் கொடிகட்டி வரும் இந்த நிறுவத்தின்   புட் லேன்ட் உணவகலத்தில் எல்லா விதமான  இந்திய உணவுகள் ரொம்ப சுவையுடன், ரொம்ப அழகான சுழலுடன் பரிமாறப்படும். குடும்பத்துடன் போக நினைகிற சிறந்த இந்திய உணவகம் முசப்பாஹ்வில் இது தான். 

4. அல் அக்கவி ப்ளவேர் கிரில் 
(Al Akkawi flower Grills): 
முசப்பாஹ்வில் இரண்டு வருடம் முன்பு இந்த பெயரில் ஒரு உணவகம் கூட கிடையாது. இன்று ஆறு இடங்களில் இருக்கிறது என்றால் இதோட வளர்ச்சி பற்றி சொல்லவேண்டும். எல்லா விதமான அராபிய உணவுகளும் இங்கே கிடைக்கும். 

3. அல் அக்கவி ப்ளவேர் கபேதேரியா  
(Al Akkawi flower Cafeteria): 
அல் அக்கவியின் முதல் கடை முசப்பாஹ்வில் இது தான். ஒன்றரை வருடத்திற்கு முன்பு புதிதாய் ஒரு கடை துவங்கி இருகிறார்கள் என்று இங்கு சென்றால் இதன் சுவை தினமும் எண்ணெய் இழுக்க ஆரம்பித்தது. அப்போது மதியம் கூட இங்கே வந்து சாப்பிடும் அளவு ரொம்ப நன்றாக இருந்தது. பொறித்த உருளை, கத்திரிக்காய், காலிபிளவர், பிலாபில், ஷவர்மா என இங்கே பிரபலமான உணவு வகைகள் ஏராளம். இங்கு வெறும் பார்சல் மட்டுமே கொடுக்க பட்டது. அதன் பின்பு ஒரே ஒரு மேஜையில் இரு நாற்காலிகள் மட்டுமே இருந்தது, பார்சலை மாட்டுமே நம்பி துவங்க பட்டது போல, இங்கே டேபிள் போடா கூட இடம் இல்லை. பக்கத்தில் ரோட்டில் நாற்காலிகள் போடா தனியாக பணம் கேட்ட வேண்டும். ஆனால் மதியம், இரவு என எப்போது வந்தாலும் நிற்க கூட இடமில்லாத அளவு கூட்டம் இருக்கும். அப்புறம் கடைக்கு வெளியே ரெண்டு மேஜைகள் போட்டாங்க, அப்புறம் நாலைந்து ஆச்சு. அப்படியே நெறைய வந்து இப்போ ஆறு கடைகள், எல்லாமே ரொம்ப பெரிய கடையாக வந்துவிட்டது. இருந்தும் இந்த கடை அப்படியே இருந்தாலும் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. 

2. அல் ஷப் ஷப் ரெஸ்ட் ரெஸ்டாரென்ட் 
(AL SAF SAF RESTAURENT): 

முசப்பாஹ்விலேயே எனக்கு ரொம்ப பிடித்த உணவகமாக பல மாதம் இருந்த இந்த உணவகம் கடந்த மாதம் தான் இரண்டாவதாக வந்தது. சிறந்தவற்றிருக்கு தனித்தனி சிறந்த விஷயங்கள் ஏராளம் உண்டு. எல்லா விதத்துலயும் ரொம்ப அழகான இந்த உணவகம் சமீபத்தில் அதிகம் maintenance  இல்லை. ருசியை பற்றி சொல்ல தேவை இல்லை. இங்கு கண்ணை மூடிக்கொண்டு என்ன வேணாலும் ஆர்டர் பண்ணலாம். உங்கள் நாவிற்கு எந்த குறையும் இருக்காது. முக்கியமான ஒரு விஷயம், முசப்பாஹ்விலே காஸ்ட்லியான உணவகம் இது தான். லெபனானி கடை, பொதுவா லெபனானி உணவகளும், பேக்கரிகளும் தான் சிறந்ததாக இருக்கும் எங்கு சென்றாலும், முசப்பாஹ்வில் லெபனானி உணவகங்கள் ஏன் அதிகம் இல்லை என்கிற குறையை இந்த ஒரு கடையே பூர்த்தி செய்திடும் எனலாம். 

1. லயாலி அல் ஷாம் ரெஸ்டாரென்ட் 
(LAYALI AL SHAM RESTAURENT)

இந்த வருடம் பெப்ரவரியில் தான் இந்த கடை துவங்கப்பட்டது என்றாலும் இன்று வரை எல்லா வியாழன் இரவு இங்கு தான் சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது. மற்ற நாட்களிலும் அவ்வபோது வருவது பழக்கம் என்றாலும் இங்கு ஒரு நாள் மதியம் சாப்ட்டு பார்த்தால் மற்ற உணவகத்துக்கு போக மனம் வராது. பிலாபில் (Falafel)  இங்கு ரொம்ப அழகா குறிப்பா எண்ணெய் இல்லாமல் இருக்கும். ஒரு நட்சத்திர உணவகத்தின் தரம் உணவில் இருப்பதை உணரலாம்.  இங்கு தரும் தூம் (Thoom) அதாவது வெள்ளைபூண்டு கூட எந்த வித மனம் இல்லாமல் ரொம்ப அழகா இருக்கும். அராபிய உணவகத்தில் முக்கியான ஷவர்மா இங்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லை என்றாலும் மற்றவை எல்லாம் நன்றாக இருக்கும். சூப், சாலட், துருக்கி காப்பி என நெறைய சொல்லும் படியான உணவு வகைகள். ஹாமூர் மீனின் சுவை இங்கே ரொம்ப ஸ்பெஷல். எல்லா விதத்துலயும் சிறந்த எனக்கு ரொம்ப பிடித்த உணவகம் முசப்பாஹ்வில் இது தான். 


Photographed & Written by Jaffer Shadiq.Z


Monday, April 19, 2010

மஷ்யாத் மால்




ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபி மாநிலம் தான் அந்த  நாட்டின் 86 .7 சதவீதம் நிலபரப்பை கொண்டு இருந்தாலும் அபு தாபி நகர் துபாய் அளவு பெரியது அல்ல. அபு தாபியை தவிர்த்த மற்ற பகுதிகள், ஏன் 95 % பாலைவனமாகத் தான் இன்னும் உள்ளது. ஆனால் இப்போது யாஸ், சாதியத், பூ தினா, சமாலியா, அல் ரீம் என பல ஐலாண்டுகள் வருகின்றது. ஆனால் இப்பொது அபு தாபியை அடுத்து கொஞ்சம் பிரபலம் (அதாவது மக்கள் அதிகம் புழங்கும் இடம்) என்றால் முச்சப்பாஹ் தான். இதை ஓட்டியுள்ள மதினாத் சய்யத், கலிபா சிட்டி போன்றவை மிக வேகமா பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஷாப்பிங் மால்கள் வருவதில் போட்டி இல்லாமல் இருக்குமா? 'மஷ்யாத் மால்' என்கிற பெயரில் முச்சபாஹ் லேபர் கேம்ப் பக்கமான பாத்திமா சூப்பர் மார்க்கெட் மட்டுமே அறிந்திருந்த இடத்தில இப்போது ஒரு நட்சத்திர ஹோட்டல், மால் என்று பல கட்டிடங்கள் வந்துகொண்டே இருக்கிறது. முன்பு சபீர் மால் மட்டுமே அறிந்திருந்த முச்சப்பாஹ் அதை சுற்றி இப்போது கட்டிடங்கள்  சூழ்ந்து உள்ள நிலையில் டெல்மா மால் என்று புதிதாய் ஒரு மால் கேர்ரிபோர் உடன் சேர்த்து வருவதால் மஷ்யாத் மாலில் உள்ள லூ லூவிற்கும் போட்டி. லூ லூ அமைத்துள்ள அதே கட்டிடத்தில் தான் எத்திஹாத் போன்ற பெரிய கம்பெனி ஆட்களும் தங்கியுள்ள இடம் என்பதால் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்த வரை சூப்பர் மார்க்கெட்டில் மிகப்பெரிய இரண்டு கம்பெனிகளில் ஒன்றான லூ லூ அமைத்துள்ள மஷ்யாத் மால் அழகான விளக்குகளால் அலங்கரிக்க படுவதை மேலேயுள்ள படத்தில் பார்க்கலாம். நேற்று இரவு மஷ்யாத் மால் சென்ற பாத்து நான் எடுத்த படங்கள் இவை.


Thursday, April 15, 2010

சாஹிப் ஷாசத் கான் நினைவுகள்


நிந்தவூர் ஷிப்ல்யின் பெயர் இடப்படாத ஒரு கவிதை தொகுப்பு நூலை பிளின்ட் பதிப்பகத்தில் வெளியிடுவதற்கு இருந்த ஒரு காலகட்டத்தில் நான் தொடர்பு கொண்ட நபர்களில் ஒருவர் 'சாஹிப் ஷாசத் கான் (Zohaib Shahzad khan) பாகிஸ்தானியர். இலங்கையை சேர்த்த நிந்தவூர் ஷிப்லியின் எழுத்துக்கு ஜெர்மனியின் பாலினோ தோரோபீவ் தான் எல்லா படங்களும் வரைவதாக இருந்து பின்னர் சில படங்கள் மட்டுமே வரைய முடிந்த நிலையில் சாஹிப்பை முன் அட்டையை வடிவமைக்க தொடர்பு கொண்டு இருந்தேன். அவரும் என்னை போல அபு தாபியில் தான் வசித்து வந்தாலும் நாங்கள் சந்தித்தது இல்லை. எப்படி அவர் பழக்கம் கிடைத்தது என்று சரியாய் ஞாபகம் இல்லை. நாங்களும் பெயரை சரியாய் முடிவு பண்ணாத காலம் என்பதால் எழுத்தாளர் பெயரான நிந்தவூர் ஷிப்ல்யின் பிளின்ட் புக் என்றே சொல்வர் அவர். சில முறை தொலைபேசியில் பேசி இருப்போம், மற்றதெல்லாம் இமெயிலில் தான் பேசி கொள்வோம். கடைசில் அவர் வெறும் முன் அட்டைக்கு மட்டும் வடிவமைக்க பெரிய தொகை கேட்டதால் அவரை நானும் ஷிப்ல்யும் இந்த புத்தகத்திற்கு வேண்டாம் என்று விட்டு விட்டோம். ஆனாலும் அவர் வரும்காலங்களில் வரும் புத்தகமோ  அல்லது ஒரு குறும்படத்திருக்கோ சேர்த்து பனி செய்யலாம் என்று இருந்து விட்டார். பிறகு நங்கள் ஷிப்ல்யின் அந்த தொகுப்புக்கு தற்கொலை குறிப்பு என்று பெயர் இட்டு இன்றுவரையும் வெளிவராமல் விரைவில் வெளியிட ஏற்படுள்ள இந்த நிலையும் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் விண்டோஸ் லைவ் மெசன்ஜெரில் தொடர்பு கொண்டார். ஷிப்லியின் பிளின்ட் புக் என்ன ஆச்சு? நன்றாக வெளியானதா என்றார், எனக்கு சரியாக நினைவிற்கு வரவில்லை அவர் யார் என்று. அவரை சுத்தமாக மறந்து விட்டேன். ஏனென்றால் இரு வருடம் நிறைவடைந்து விட்டது இந்த புத்தகம் வெளியிடும் வேலை தொடங்கி. அதுவும் புத்தகத்தின் எல்லா பணிகளும் முடிந்தும் கூட வெளியிடாமல் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. கொஞ்ச நேரத்திற்கு பிறகே கண்டுபிடித்தேன் அவரும் கூட நாம் அதிகம் பேசியதில்லை உங்களுக்கு உடனே தெரிஞ்சிருக்க வாய்ப்பும் இல்லை என்றார். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு இனிமே உங்களை ஞாபகம் இருக்கும் கண்டுபிடித்து விடலாம் என்றேன். சில உரையாடல்களில் பெரிதாக பேசாமல் சென்று விட்டேன் எதோ ஒரு வேலையால். சரி என்று சில நாள் கழித்து பேஸ்புக் சென்று அவர் ப்ரோபைல் சென்று  'உங்கள் வடிவைக்கும் பனி எப்படி போகுது என்று மெசேஜ் அனுப்பினேன். ஏதோ ஒரு உறுத்தல் மறுபடியும் அவர் ப்ரோபைல் சென்றேன், நெறைய வால் வந்து குமிந்து இருந்தது, அதிலெல்லாம் ஒரே அதிர்ச்சி எல்லாரும் 'நீ என் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்", "உன் சிரிப்பை மிஸ் பண்றோம்", "உனக்கு அமைதி நிலவட்டும்", "மறுபடியும் வா, வந்து என்ன அச்சுன்னு சொல்லு", "உன்னை என்றும் மறக்க முடியாது" இவ்வாறு நிறைய மெசேஜ். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது. ஒருவர் "உன் திடீர் மரணத்தை நாங்கள் எதிர் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் பதில் சாஹைபிடம் இருந்து வந்து இருந்தது, அவரின் நெருங்கியவர யாரும் இருந்து இருப்பாங்களா இல்லை இவருக்கே ஏதும் ஆனதா, ஒன்றும் புரியவில்லை. 




ஏன்னா சிலவற்றிருக்கு அவரிடமே பதிலும் வந்து இருந்த்தது. நான் மறுபடியும் அவருக்கு என்ன அச்சு என்று மெசேஜ் அனுப்பினேன். யாரவது பதில் சொல்வார்கள் என்று. மறுநாள் பதில் வந்தது அவர் கடந்த மாதம் இறந்துவிட்டார், ஹார்ட் அட்டாக் என்று. அதிர்ச்சி அடைந்த நான் சொன்னேன் அவர் கூட சமீபத்தில் பேசினேன் என்று, அதற்கும் பதில் வந்தது மறுநாள் என் வாலில் 'மார்ச் 7 , 2010  இல் அவர் இறந்து விட்டார், நான் அவர் மனைவி என்று. இன்று வரை அவர் வாலில் அடிக்கடி நெறைய மெசேஜ் வருது "என் வாழ்வில் வந்தமைக்கு நன்றி" என்று. அவர் திருமணம் முடிந்து வாழ்த்த ஒரே வருடத்தில் அவருக்கு ஒரு குழதையும் பிறந்து இருக்கிறது, அதற்கு அங்கே மெசேஜ் இருந்தது, "என் வாழ்வில் வந்தமைக்கும், அதற்கு பரிசு தந்து விட்டு போனதற்கும்" என்று. இது தான் உண்மையான காதல். அவரிடம் மேலும் விசாரிக்க மனம் இல்லை எனக்கு. ஆனால் சென்று விட்ட அன்பை நினைத்து வாழும் அவருக்கு இறைவன் வாழ்கையில் அமைதியும் சந்தோசமும் தருவான் என்று பிராத்தனை செய்வோம். சாஹைபிற்காகவும் பிராத்தனை செய்வோம். 
-ஜாஃபர் ஷாதிக்  



Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha