எதையும் திட்டமிட்டு தெளிவாக செய்பவர்களுக்கு என்றுமே ஒரு இறுக்கம் இருப்பதில்லை. ஆனால் நானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிட்டு இருந்து விடுவிடுகிறேன்.
இந்த வலைப்பதிவு எப்போது ஏன் துவங்கினேன் என்று தெரியவில்லை, இத்தனை நாள் ஏன் எதுவுமே பதிவிடாமல் இருந்து விட்டேன் என்றும் தெரியவில்லை.
நான் கூட மாதக்கணக்கில் திறந்து விடாத இந்த பக்கத்தை வேறு யார் பார்த்து இருக்க முடியும்? அதை எப்படி யோசிக்க வேண்டுமென்று கூட அறிந்திருக்கவில்லை நான்.
முதலில் நான் யார் என்று எனக்கே தெரியாத நான் என்னை பற்றிய அடையாளங்கள் இல்லாமலே புலம்ப நினைக்கிறேன். ஆனால் இங்கே எனது பக்கங்கள், பெயர் என எல்லாமே இருக்கிறது. முடிந்த வரை அழித்து விட்டு புலம்ப நினைக்கிறன். அப்போது தான் நிறைய உண்மை பேச முடியுமென்று. புதிதாக ஒரு வலைபதிவு துவங்கலாம், ஆனால் துவங்குவது மட்டுமே பணியாக இருக்கிறது. அதை தொடருவதே இல்லை. இந்த வலைபதிவில் எனது பெயர் இருக்கிறது.. இருந்துட்டு போகட்டும்.
இனிமேல் இதை ஒரு நாட்குறிப்பாக வைத்தி விட நினைக்கிறன். சில அனுபவங்களை பகிர்ந்ததுக் கொள்ள நினைகிறேன். நான் சுய நினைவோடு இந்த பூமியில் இன்னும் சில காலம் சுற்றி திரிந்தால் அடுத்த பதிவை இன்னும் சில வருடங்கள் கழித்து கூட பதிவிடலாம். என் திட்டமிடலை பற்றி தான் சொல்லி இருந்தேனே.. லொள்
0 Comments:
Post a Comment