JASH PHOTOGRAPHY

Tuesday, June 29, 2010

அமீரகத்தில் அன்லாக் பண்ணிய ஆப்பிள் ஐ-போன் 4 விற்பனை


ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஐ-போன் 4 மாடலை அமீரகத்தில் வெளியிட இன்னும் ஒரு மாதங்கள்  இருக்கும் நிலையில் துபாயை சேர்ந்த தனியார் நிறுவனம் அன்லாக் செய்யப்பட ஐ-போன்களை  விற்பனைக்கு செய்ய துவங்கியுள்ளது. அல்ஷாப்.காம் என்னும் இந்த வியாபாரியிடம் ஐ-போன் 4 16gb மற்றும் 32gb மாடல்கள் இருக்கின்றன. இந்த போன்கள் அன்லாக் செய்யபட்டுள்ளதால் எந்த ஒரு சிம் கார்டும்  உபயோகித்து கொள்ளலாம். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ரிஸ்வான் கூறுகையில் ஐரோப்பியா, ஆசியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து இந்த போன்களை  இறக்குமதி செய்யப்படுவதாக கூறுகிறார். ஆப்பிள் ஐ-போன்களுக்கு உலகமெங்கும் மிகுந்த வரவேற்பு இருப்பதால் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டு உள்ளார். நேற்று  மட்டும் 100 போன்கள் முன்பதிவு செய்யப்பட்ட போன்கள் விற்றுள்ளார், இதற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளதாக தெரிவிக்கிறார்.ஆனால் விலை மட்டும் ரொம்பவே அதிகம். 16GB மாடல் 5,500 திர்ஹமிர்க்கும், 32GB மாடல் 6,200 திர்ஹமிர்க்கும் கிடைக்கிறது. இதே போன் அமெரிக்காவில் 16GB மாடல்730 திர்ஹமிர்க்கும், 32GB மாடல் 1,097 திர்ஹமிர்க்கும் கிடைக்கிறது.
.


Monday, June 21, 2010

சிறந்த ஐ-போன் அப்ளிகேஷன்கள்


ஆப்பிள் ஐ-போன் தனக்கென்று தனிப்பட்ட பல அப்ளிகேஷன்கள் கொண்டது. ஆப்பிள் நிறுவனம் இதற்காக அப்ளிகேஷன் ஸ்டோர் என்னும் இடத்தில் ஐ-போன் பயன்படும் அப்ளிகேஷன் அனைத்தையும் பதிவுசெய்து வருகிறது. அதில் சில அப்ளிகேஷன் இலவசமாகவும், சில அப்ளிகேஷன்களுக்கு பணமும் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் நிறைய அப்ளிகேஷன் தனியாரால் தயாரிக்கப்படுகிறது.

ஆப்பிள் ஹக்கர் இயக்கம் பல அப்ளிகேஷன் தயாரித்துள்ளது . ஆனால் இந்த வகை அப்ளிகேஷன்கள் பெறுவதற்கு ஐ-போன் மென்பொருளை சரக் செய்திருக்க வேண்டும்.
ஐ-போன் அப்ளிகேஷன் மிகவும் உபயோகமானவை சி:

ஐ-ப்ளு-டூத்( IBLUETOOTH ):

ஆப்பிள் ஐ-போனில் ப்ளு-டூத் உண்டு ஆனால் எந்த ஒன்றும் மற்ற ப்ளு-டூத் போன்களுக்கு அனுப்ப முடியாது. இந்த அப்ளிகேஷன் மூலம் எந்த ஒரு இசை,படம் பிறருக்கு அனுப்ப முடியும். இந்த அப்ளிகேஷன் பெறுவதற்கு ஐ-போனில் சைடியா (cydia) என்னும் அப்ளிகேஷன் தேவை. சைடியாவில் http://cydia.xsellize.com/ என்னும் இந்த சோர்ஸ்-ஐ (source) புதிதாக சேர்க்க வேண்டும்.


ஐ-பைல் (IFILE):
இந்த அப்ளிகேசன் மிகவும் சிறந்த ஒன்று. இந்த அப்ளிகேஷன் மூலம் ஐ-போனுடைய எந்த ஒரு இயக்கத்தையும் மாற்ற முடியும். இந்த அப்ளிகேசன் பெறுவதற்கு சைடியா (CYDIA) தேவை. சைடியாவில் http://sinfuliphonerepo.com/ என்னும் இந்த சோர்ஸ்-ஐ (source) சேர்த்தல் இந்த அப்ளிகேசன் கிடைக்கும்.

குளோபல் ஏ.க்யு.லைட் (GLOBAL AQ LITE ) :
குளோபல் என்னபடும் இந்த அப்ளிகேஷன் மூலம் உலகெங்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும். இந்த அப்ளிகேஷன், அப்ளிகேஷன் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும். அப்ளிகேஷனில் ஒரு நாளைக்கு ஏழு SMS இலவசமாகு எந்த நாட்டிற்கும் அனுப்ப முடியும்.

எம்.எக்ஸ்.டூப் (MXTUBE):
யூ-டூப் (YOUTUBE) உடைய வீடியோக்களை நேரடியாக டவுன்லோட் (DOWNLOAD) செய்துகொள்ள இந்த அப்ளிகேசன் உதவும். இந்த அப்ளிகேசன் சைடியா(CYDIA)வில் கிடைக்கும்.

ஹெட்செட்(HEADSET):
ஹெட்செட் என்னும் இந்த அப்ளிகேஷன், அப்ளிகேஷன் ஸ்டோரில் கிடைக்கும். இந்த அப்ளிகேஷன் மூலம் ஐ-போனையும் கணினியையும் இணைத்து ஐ-போனை பேசுவதற்கு ஹெட்போனாக பயன்படுத்தலாம். இதற்கு WIFI வசதி அவசியம் தேவை.
-ஜாஸிம் புஹாரி


Monday, June 14, 2010

காற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்


முன்னால் ஏரோனாடிக் மற்றும் போர்முல ஒன் பொறியாளரும் ஆனா GUY NEGRE என்பவர் அழுத்தமான காற்றினால் இயங்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். மோட்டார் டேவலாப்மென்ட்  இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) என்னும் கம்பெனியை பிரான்ஸ் நாட்டில் லக்சம்பெர்க் (LUXEMBERG) என்னும் ஊரில் உருவாகினார். அதில் இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியை மேம்படுத்தி வந்தனர். இவர்களுடைய படைப்புகளில் ஒன்று ஏர்பாட் (AIRPOD) என்று அழைக்கப்படும் நான்கு சக்கர வாகனம்.

இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடுப்பு ஆகும் . இதில் வாகனத்தை செயல்படுத்த  அழுத்தமான காற்றை கொண்டு பிஸ்டனை (PISTON) செயல் படுத்துகின்றனர். 5.45 HP வேகத்தில் கம்புச்தியன் என்ஜின் (COMBUSTION ENGINE) செயல் படுத்த முடிகிறது. இதில் ஒரு சிலிண்டரில் காற்று அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் , மேலும் ஒரு சிறிய மோட்டார் வெளியில் உள்ள காற்றை அழுத்தி டேங்கை எப்போதும் முழுமையாக வைத்துகொள்ள உதவும். இதனுடைய கம்ப்றேச்சொர் (COMPRESSOR) டீஸல் , எதனால் (ETHANOL) , என்னை மற்றும் மின்சாரம் போன்ற வற்றல் இயங்கும் ஆற்றல் உடையது . மேலும் 200 KM தொலைவு செல்ல வெறும் 0.5 EURO செலவாகிறது.
 ஏற்பாட் (AIRPOD) வாகனத்தில் மூன்று நபர்கள் செல்ல முடியும். இது குறைந்த விளையும், எந்த ஒரு தீங்கும் இல்லா வாகனமாகும் .

இது தற்போது பாரிஸ் விமானநிலையத்தில் உபயோக படுத்தபடுகிறது.
மோட்டார் தேவேலோப்மேன்ட் இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) நிறுவனம் ஆனது இந்திய நாட்டின் டாட்டா நிறுவனத்துடன் ஒபந்தம் செய்துள்ளது. இந்தியாவில் டாட்டா ஒனேகாட் (TATA ONECAT) என்னும் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
ஜாஸிம் புஹாரி


Sunday, June 13, 2010

ஸ்மார்ட்போன் - அன்று முதல் இன்று வரை




ஸ்மார்ட்போன் என்பது சாதாரண மொபைல்களை  விட வேகமான, அதிகமான கூடுதல் வசதிகளை கொண்டது. சாதாரண போன்கள் ஜாவா மற்றும் BREW போன்ற சில பிளாட்போர்ம்களை தான் பயன்படுத்த முடியும், ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் அதிகமான விசயங்களை உபயோகிக்க முடியும். இது அப்பரேடிவ் சிஸ்டம்களை முழுவதுமாக பயன்படுத்த முடியும். இது போன்ற ஸ்மார்ட்போன்கள் பிரபலான முக்கிய காரணம் நல்லா ப்ரோசெச்சொர்(Processor), அதிகமான மெமரி மற்றும் நேரடி அப்பரேடிவ் சிஸ்டம் பயன்படுத்த முடியும் 



2010  ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் மார்கெட் நிலவரம்:

சிம்பியன்:          44 சதவீதம்
ரிம்:                     19 சதவீதம்
ஆப்பிள்:             15 சதவீதம்
ஆண்ட்ரியாட்:  10 சதவீதம்
விண்டோஸ்:     7 சதவீதம்
லினக்ஸ்:            4 சதவீதம்
மற்றவை:           1 சதவீதம்

பிரபல போன்களின் அப்பரேடிவ் சிஸ்டங்கள்:
நோக்கியா - சிம்பியன்
சோனி எரிக்சன் - சிம்பியன்
ப்ளாக்பெர்ரி - ரிம்
ஆப்பிள் - IOS 
ஹெட்.டி.சி ட்ரீம் மற்றும் நெக்சஸ் (கூகுள்) - ஆண்ட்ரியாட்
ஐ-மேட், ஹெட்.டி.ச, ஓ 2  - விண்டோஸ்
நோக்கியா 900 - MAEMO 
சாம்சங் - லினக்ஸ்

ஸ்மார்ட்போன் - சில குறிப்புகள்:

          முதல் ஸ்மார்ட்போன் 1992 ஆம் ஆண்டு IBM கம்பெனி தயாரித்து. அதன் பெயர் சிமோன்.
          நோக்கியா கம்பனின் முதல் ஸ்மார்ட்போன்: நோக்கியா 9000. இது 1996 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.
            ப்ளாக்பெர்ரியின் ரிம் 2002 லும், ஆப்பிள் 2007 லும் துவங்கப்பட்டது  
- ஜாஸிம் புஹாரி, ஜாஃபர் ஷாதிக் 


Tuesday, June 8, 2010

ஆப்பிளின் புதிய மொபைல், ஐ-போன் 4


அமெரிகாக்கவில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான ஆப்பிள் கம்பெனியின் மாநாட்டில் ஆப்பிளின் புதிய மாடலான ஐ-போன் 4 என்கிற புதிய மாடலை ஆப்பிளின் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் அறிமுக படுத்தி வைத்தார். இந்த மாநாடு ஜூன் ஏழு முதல் ஜூன் பதினொன்றாம் தேதி வரை நடக்கிறது. அனைவரும் எதிர் பார்த்தது போல் 4G என்கிற நான்காம் தலைமுறை போனாக இல்லாமல் 3G என்கிற மூன்றாம் தலைமுறையிலே ஐ-போன் 4 என்கிற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த மாடலில் பல புதிய வசதிகளுடன் மார்க்கெட்டில் இருக்கும் மற்ற மொபைல் போன்களுக்கு கடுமையான போட்டியாக அமையும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது.
 

இதன் மற்ற சிறப்பு அம்சங்கள்  
கேமரா (பேஸ் டைம்)
பார்த்து கொண்டே பேசுவது போன்ற இரண்டு கேமரா வசதி கொண்ட முதல் மொபைலில், இருவரும் ஐ-போன் 4 மற்றும் WIFI வசதி இருந்தால் எந்த ஒரு கட்டனும் இன்று பார்த்து கொண்டே இருக்கலாம்.

டிஸ்ப்ளே
மிகவும் துல்லியமான, அதிநுட்ப வண்ணங்கள் கொண்ட இந்த டிஸ்ப்ளே 960X640 resolution களை கொண்டது. 3.5" கொண்ட இந்த டிஸ்ப்ளேவில் புகைப்படங்கள், காட்சிகள் மற்றும் எழுத்துக்களை மற்ற எந்த மொபைல்களை விட மிக தெளிவாக பார்க்கலாம். இதை பார்க்கலாம். இதை retine display என்று அழைக்கிறார்கள்.

Multi Tasking (மல்டி டாஸ்கிங்)
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான applications-ஐ பயன்படுத்தும் வசதி தற்போதுள்ள ஐ-போனில் இல்லை. ஆனால் இதில் நான்கு, ஐந்து அப்ளிகேஷன்ஸ் பயன்படுத்தி கொண்டிருந்தால் கூட வேகம் குறையாமலும், பேட்டரியின் ஆயுள் குறையாமலும் பயன்படுத்த முடியும். ஆனால் மென்பொருளை மாற்றி கொண்டால் தற்போதுள்ள 3ஜி மாடலில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

கேமரா
LED ஃப்ளாஷ் வெளிச்ச வசதிக் கொண்ட 5 மெகா பிக்ஷல் கேமரா வசதி இருப்பதால் ர்னு வீடியோ ரெகார்டிங் செய்து கொள்ளலாம். இந்த வீடியோ காட்சிகளை உடனுக்குடன் படத்தொகுப்பு செய்துக் கொள்ள முடிவதுடன் சுலபமாக மற்றவர்களுக்கு பகிர்ந்தும் கொள்ளலாம்.

மற்ற வசதிகள்
இதில் பொருத்தப்பட்டுள்ள ஆப்பிள் 4ஜி ப்ராசஸர; ஐபோன்களிலே மிக வேகமாக செயல்படக்கூடியது. இது ஆப்பிளின் முந்தைய வெளியீடான ஐபேடிலும் உபயோகிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி
Builtin Rechargable Lithium Ion பேட்டரி வசதிக் கொண்ட இது மற்ற ஐபேன் பேட்டரிகளை விட சிறந்தது.

பேசுவதற்கு   2ஜி: 14 மணி நேரங்கள்
                         3ஜி:   7 மணி நேரங்கள்

ஓலி கேட்டபதற்கு: 40 மணி நேரங்கள்

காட்சிகளுக்கு 10 மணி நேரங்கள்

இன்டர்நெட் பயன்படுத்த.. 3ஜி: 6 மணி நேரங்கள்
WIFI பயன்படுத்த:  10 மணி நேரங்கள்

கலர் :
இது கருப்பு மற்றும் வௌ;ளை நிறங்களில் கிடைக்கிறது.

Capacity: 16GB/32GB

OS:  I OS4

இதில் முக்கியமான ஒன்று மற்ற ஆப்பிள் மொபைல்களை விட வடிவத்தில் முற்றிலும் மாறுபட்டு தட்டையாக அமைந்துள்ளது.

-ஜாஸிம் புஹாரி, ஜாஃபர் ஷாதிக்


Monday, April 26, 2010

ஒன்பது வயதில் நான்கு மைக்ரோசாப்ட் சான்றிதழ் வென்று சாதனை


இந்த தலைமுறையின் மிகப்பெரிய வளர்ச்சி கணிபொறியும், மொபைல் போன்களும். இந்த இரண்டும் இன்றைய மக்களின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் பேஸ்புக் கூட இந்த இந்த இடத்திற்கு வந்துவிடும் போல, லொள். மீட் மார்கோ கலாசன் (Meet Marko Calason) என்கிற ஒன்பது வயது சிறுவன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நான்கு சான்றிதழ் வாங்கி உள்ளார். வெறும் ஏழு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான மாசேடோனியா (Mocedonia) என்கிற நாட்டை சேர்ந்தவரான  இந்த சிறுவன் தனது ஆறாவது வயதில் முதல் மைக்ரோசாப்ட் சான்றிதழை வென்று உலகின் சிறிய வயதில் இந்த சான்றிதழ் வாங்கிய சிறுவன் என்கிற பெருமையை பெற்றார். இப்போது நான்கு முறை வென்று இருக்கிறார் தனது ஒன்பது வயதில் என்பது குறிப்பிடதக்கது. இந்த சிறுவன் தனது மூன்றாவது வயதிலேயே கணிப்பொறியில் சின்ன சின்ன வேலைகள் செய்ய துவங்கினாராம். அதாவது விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது, ரிமோட் டெஸ்க்டாப் போன்றவை பல முறை உபயோக்கிக்க ஆரம்பித்தாராம். இன்றைய சிறு குழந்தைகள் கணிபொறி என்றால் கேம்ஸ் விளையாடுவதும், பேஸ்புக் போன்ற வெப்சைட்களும் தான் அதிகம் பயன்படுத்துவர். ஆனால் இவர் ஈமெயில் பண்ணுவது, பைல்களை ஷேர் பண்ணுவது இன்னும் ரோபோட் தயாரிப்பது போன்றவற்றிலே ஆர்வமாக இருந்தார் என்று சொல்கிறார். MCP, MCDST, MCSA மற்றும் MCSE போன்ற சான்றிதழ் வென்றுள்ள இந்த சிறுவன் தினமும் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் வரை கூட கணிப்பொறியை பயன்படுத்துகிறாராம். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த சிறுவன் இன்று நூற்றுகணக்கானவர்களுக்கு கண்ணிபொறி சொல்லியும் கொடுக்கிறார். 


Tuesday, April 20, 2010

ஐ-பேடில் பயன்படுத்தும் லாக் மீ இன்


ஆப்பிள்-இன் ஐ-பேட் வெளியான சில வாரங்களிலேயே விற்பனையில் சாதனைகளை படைத்தது வந்தாலும் முதலில் வெறும் சதாரண ஐ-பேட், அடுத்து சில தினங்களில் வை-பைவ் கொண்ட ஐ-பேட் என்று வெளிவந்த நிலையில் இப்போது ஐ-பேட்-இன் 3G மாடல் விரைவில் வர இருக்கும் தேதியும் அறிவிக்கப்பட்டது. வருகிற மே மாதம் ஏழாம் தேதி 3G மாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  இதற்காக ஒரு லட்சத்தி ஐம்பத்தயிரம் அப்ளிகேஷன்கள் ஐ-பேட் வெளிவரும் முன்பே பிரபலபடுத்தபபட்டது. 

இப்போது நாம் லாக் மீ இன் என்கிற மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம். லாக் மீ இன் என்கிற இந்த நிறுவனம் 2003 ஆம் ஆண்டு முதல் ரிமோட் மூலம் எங்கிருந்தாலும் நம் கணினியை உபயோகிக்கும் வழியை கொஞ்சம் சுலபமாக இருக்க அறிமுகம் செய்தது. இப்போது இந்த நிறுவனம் ஐ-பேடிற்கென்றே ஒரு எளிய வழியை அறிமுகப்படுத்தி   உள்ளது.  LogMeIn Ignition  என்கிற இந்த மென்பொருளின், Version: 1.1.138


 


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha