JASH PHOTOGRAPHY

Tuesday, June 29, 2010

அமீரகத்தில் அன்லாக் பண்ணிய ஆப்பிள் ஐ-போன் 4 விற்பனை


ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஐ-போன் 4 மாடலை அமீரகத்தில் வெளியிட இன்னும் ஒரு மாதங்கள்  இருக்கும் நிலையில் துபாயை சேர்ந்த தனியார் நிறுவனம் அன்லாக் செய்யப்பட ஐ-போன்களை  விற்பனைக்கு செய்ய துவங்கியுள்ளது. அல்ஷாப்.காம் என்னும் இந்த வியாபாரியிடம் ஐ-போன் 4 16gb மற்றும் 32gb மாடல்கள் இருக்கின்றன. இந்த போன்கள் அன்லாக் செய்யபட்டுள்ளதால் எந்த ஒரு சிம் கார்டும்  உபயோகித்து கொள்ளலாம். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ரிஸ்வான் கூறுகையில் ஐரோப்பியா, ஆசியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து இந்த போன்களை  இறக்குமதி செய்யப்படுவதாக கூறுகிறார். ஆப்பிள் ஐ-போன்களுக்கு உலகமெங்கும் மிகுந்த வரவேற்பு இருப்பதால் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டு உள்ளார். நேற்று  மட்டும் 100 போன்கள் முன்பதிவு செய்யப்பட்ட போன்கள் விற்றுள்ளார், இதற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளதாக தெரிவிக்கிறார்.ஆனால் விலை மட்டும் ரொம்பவே அதிகம். 16GB மாடல் 5,500 திர்ஹமிர்க்கும், 32GB மாடல் 6,200 திர்ஹமிர்க்கும் கிடைக்கிறது. இதே போன் அமெரிக்காவில் 16GB மாடல்730 திர்ஹமிர்க்கும், 32GB மாடல் 1,097 திர்ஹமிர்க்கும் கிடைக்கிறது.
.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha