JASH PHOTOGRAPHY

Wednesday, June 23, 2010

பதினேழு ஆயிரம் கிலோமீட்டர் மிதிவண்டியில் சென்று கால்பந்தை பார்த்த ரசிகர்


சுற்றுச்சுழல் பாதுகாப்பாளர்  மற்றும் புகைப்பட கலைஞருமான  பெடல் ஜோ (PEDAL JOE) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து தென் ஆப்ரிக்கா வரை குழந்தைகளுக்கான மிதியுந்து (GO-KART) மூலம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

52 வயதான ஜோவின்  தாயகம் பிரேசில். இவர் பிரேசில் கால்பந்து அணியின் ரசிகர். தற்போது நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண வேண்டும் என்ற ஆவலுக்குள்ளானார். இவர் இதற்கு முன்னர் இரண்டு உலக கோப்பை போட்டியை மிதிவண்டிமூலம், 56 நாடுகளுக்கு மேல் கடந்து சென்று கண்டவர்.  ஜோ  ஜனவரி 2008 ஆம் ஆண்டு மிதியுந்து மூலம் தென் ஆப்ரிக்கா செல்லும் தன்னுடைய திட்டத்தை தெரிவித்தார். இதற்காக பேர்க் டயஸ் (BERG TOYS) என்னும் டச்சு  நாட்டு  நிறுவனம் பிரத்யேகமாக  வண்டி ஒன்றை தயாரித்து கொடுத்தது. இந்த வண்டி நீண்டு உழைக்கும் சக்கரங்களும், முகப்பு விளக்குகளும், பல அதிநவீன வசதிகளும் கொண்டது. மேலும் சூரிய-மின் தகடு (சோலார் பேணல்) மற்றும் திருட்டு தடுப்பு தொழில்நுட்பங்களும் உள்ளது.

பெடல் ஜோ  10 மே 2008 அன்று பாரிஸ் நகர்  ஈபில் கோபுரம்  முன்பிருந்து தன் பயணத்தை  தொடங்கிய இவர் முறையே போர்த்துகல், ஸ்பெயின், மொரோக்கோ, மேற்கு சஹாரா, மௌரிடானியா, செனகல், மாலி, புர்கினா பாசோ, ஐவரி கோஸ்ட், காணா, டோகோ, பெனிம், நைஜீரியா, கேமரூன், கபொன், கோங்கலீசு குடியரசு, காங்கோ குடியரசு, அங்கோலா, நமிபியா நாடுகளை  கடந்து 1 ஜூன் 2010 அன்று ௦ தென் ஆப்ரிக்காவின்  ஜோஹன்னேச்புர்க்(johannesburg) நகர் சென்றடைந்தார். அங்கு அவர்  பேர்க் டயஸ் நிறுவன மற்றும் பன்னாட்டு அரிமா சங்க (Lions Club) பிரேதிநிதிகளால் வரவேற்கப்பட்டார், பொது மக்களும் அரவரமிட்டு அவரை உற்சாக படுத்தினர்.  இப்பயண தொலைவு 17350 கி.மி , இதனை 752  நாட்களில் கடந்து சாதனை படைத்த இவர் பயணத்தில் இரண்டு முறை மலேரியாவையும் ருசித்தார். மேலும் ஒரு முறை திருட்டுக்கும், இரண்டு முறை கொலை முயற்சிக்கும் உட்படுத்தப்பட்டார்
பல சோதனைகளை கடந்து சாதனை படைத்த ஜோ, தற்போது உலக கோப்பை போட்டிகளை கண்டு மகிழ்கிறார். போட்டிகள் முடியும் வரை தென் ஆப்ரிக்காவில்  தங்கி இருப்பார்.  ஜூலை பிற்பாதியில் தாயகம் திரும்புவார். இடைப்பட்ட காலத்தில் இவர் லெசோதோ, தென் ஆப்ரிக்கா, சுவாசிலாந்து  மற்றும் மொசாம்பிக் நாட்டு  அரிமா சங்க சேவை நடவடிக்கைகளை பார்வையிட திட்டமிட்டுள்ளார். 

பிரேசிலின் சினிமா இயக்குனர்களான ப்ருனோ லிமோ மற்றும் பாப்ரிசியோ, சினிமா தயாரிப்பு நிறுவனமான "அப்பாஸ் பிலிம்ஸ்" உடன் சேர்த்து இந்த பயணத்தை ஒரு குறும் படமாக எடுத்துள்ளனர். பெடல் ஜோவின் இந்த பயணத்தின் குறும் படம் பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு திரையிடப்படும்.
ஜாஸிம் புஹாரி | ஹாஃபில்

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha