உலகின் அனைத்து  மிருகங்களுக்கும் எதாவது ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். அவற்றில் சிலவற்றை இப்போது பார்போம்...

பிம்பம்: யானைகளையும் மனிதர்களோடு பழக்கபட்ட குரங்குகளையும் தவிர, பெரும்பாலான மிருகங்கள் தங்கள் பிம்பங்களை பார்த்து தாமே பயப்படும்..(தூங்கி எழுந்து நம்ப முகத்த பார்த்த நமக்கே பயம் வரும் அல்லவா அதே மாதிரி). ஒரு கண்ணாடியை அவற்றின் முன் வைத்தால் கண்ணாடி உடையும் வரை சண்டை போடும்!..

மழை: நாய் இனத்தை சேர்ந்த அனைத்து மிருகங்களுமே மழைக்கு பயப்படும். அதுவும் அவை வாழ்நாளில் முதல் முறையாக மழையை பார்க்கும் போது பயங்கரமா குறைத்து கொண்டே இருக்குமாம் ..(எங்க ஊர்ல நாய் குலைக்காது ஊள தான் விடும் லேடி டாக் கரெக்ட் பண்ண)..

நீர்: பூனைகளின் திருட்டு தனத்தை அவை தண்ணிரை கடக்கும் போதே தெரிந்து கொள்ளலாம். பூனை தன்னால் முடிந்த அளவு தண்ணீர் படாமல் பார்த்து கொள்ளும்!

தன் மேல் தனக்கே பயம் : டாபர்மேன் நாய்களை நாம் வாலோடு பார்ப்பது கடினம். அதன் உரிமையாளர்கள் அவை குட்டியாக இருக்கும் போதே வாலை ஓட்ட நறுக்கி விடுவார்கள். காரணம் வாழ் அசையும் போது தனக்கு பின்னால் தான் பார்க்கவே முடியாத ஒன்று அசைவதால் பயந்து போகும் டாபர்மேன்கள், அந்த வாலை கடிக்க முயன்று கழுத்து உடைந்து செத்துவிடும். பயம் மனிதர்களை மட்டுமல்ல மிர்கங்களையும் ஆட்டி படைக்கிறது..  
-முஹம்மது சாதிக்