JASH PHOTOGRAPHY

Monday, June 21, 2010

சிறந்த ஐ-போன் அப்ளிகேஷன்கள்


ஆப்பிள் ஐ-போன் தனக்கென்று தனிப்பட்ட பல அப்ளிகேஷன்கள் கொண்டது. ஆப்பிள் நிறுவனம் இதற்காக அப்ளிகேஷன் ஸ்டோர் என்னும் இடத்தில் ஐ-போன் பயன்படும் அப்ளிகேஷன் அனைத்தையும் பதிவுசெய்து வருகிறது. அதில் சில அப்ளிகேஷன் இலவசமாகவும், சில அப்ளிகேஷன்களுக்கு பணமும் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் நிறைய அப்ளிகேஷன் தனியாரால் தயாரிக்கப்படுகிறது.

ஆப்பிள் ஹக்கர் இயக்கம் பல அப்ளிகேஷன் தயாரித்துள்ளது . ஆனால் இந்த வகை அப்ளிகேஷன்கள் பெறுவதற்கு ஐ-போன் மென்பொருளை சரக் செய்திருக்க வேண்டும்.
ஐ-போன் அப்ளிகேஷன் மிகவும் உபயோகமானவை சி:

ஐ-ப்ளு-டூத்( IBLUETOOTH ):

ஆப்பிள் ஐ-போனில் ப்ளு-டூத் உண்டு ஆனால் எந்த ஒன்றும் மற்ற ப்ளு-டூத் போன்களுக்கு அனுப்ப முடியாது. இந்த அப்ளிகேஷன் மூலம் எந்த ஒரு இசை,படம் பிறருக்கு அனுப்ப முடியும். இந்த அப்ளிகேஷன் பெறுவதற்கு ஐ-போனில் சைடியா (cydia) என்னும் அப்ளிகேஷன் தேவை. சைடியாவில் http://cydia.xsellize.com/ என்னும் இந்த சோர்ஸ்-ஐ (source) புதிதாக சேர்க்க வேண்டும்.


ஐ-பைல் (IFILE):
இந்த அப்ளிகேசன் மிகவும் சிறந்த ஒன்று. இந்த அப்ளிகேஷன் மூலம் ஐ-போனுடைய எந்த ஒரு இயக்கத்தையும் மாற்ற முடியும். இந்த அப்ளிகேசன் பெறுவதற்கு சைடியா (CYDIA) தேவை. சைடியாவில் http://sinfuliphonerepo.com/ என்னும் இந்த சோர்ஸ்-ஐ (source) சேர்த்தல் இந்த அப்ளிகேசன் கிடைக்கும்.

குளோபல் ஏ.க்யு.லைட் (GLOBAL AQ LITE ) :
குளோபல் என்னபடும் இந்த அப்ளிகேஷன் மூலம் உலகெங்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும். இந்த அப்ளிகேஷன், அப்ளிகேஷன் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும். அப்ளிகேஷனில் ஒரு நாளைக்கு ஏழு SMS இலவசமாகு எந்த நாட்டிற்கும் அனுப்ப முடியும்.

எம்.எக்ஸ்.டூப் (MXTUBE):
யூ-டூப் (YOUTUBE) உடைய வீடியோக்களை நேரடியாக டவுன்லோட் (DOWNLOAD) செய்துகொள்ள இந்த அப்ளிகேசன் உதவும். இந்த அப்ளிகேசன் சைடியா(CYDIA)வில் கிடைக்கும்.

ஹெட்செட்(HEADSET):
ஹெட்செட் என்னும் இந்த அப்ளிகேஷன், அப்ளிகேஷன் ஸ்டோரில் கிடைக்கும். இந்த அப்ளிகேஷன் மூலம் ஐ-போனையும் கணினியையும் இணைத்து ஐ-போனை பேசுவதற்கு ஹெட்போனாக பயன்படுத்தலாம். இதற்கு WIFI வசதி அவசியம் தேவை.
-ஜாஸிம் புஹாரி

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha