தக்காளியை வைத்து ரசம் வைக்கலாம் ஏன் முட்டை பொறியல் கூட செய்யலாம் . திருவிழா கொண்டாட முடியுமா? அது தான் ஸ்பெயினின் ஸ்பெஷல் திருவிழா.

valencia மாகாணத்தில் உள்ள புனால் நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் லா டோமொடினா என்ற தக்காளி சண்டை திருவிழா நடைபெறுகிறது. லாரி லாரியாக குவிக்கப்பட்ட தக்காளியை ஆளாளுக்கு ஒருவர் மீது ஒருவர் விச, ரோட்டில் தக்காளியை கொட்டி அதில் உருள சிலர் அதில் குளிக்க.. என அந்த ஊரே சிவந்து போகிறது., சாலை எங்கும் தக்காளி வெள்ளம் (நாம ஊர்ல சாக்கடை வெள்ளம் மட்டும்தான் ஓடுது)..
 
உள்ளூர் வாசிகள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சேர்ந்து கொள்வதால், தக்காளி வீசும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்த படியே போகிறது.
1945-இல் ஒரு திருவிழா ஊர்வலத்தின் போது சில கிராமத்து சிறுவர்களுக்கு இடையே தகராறு.. பக்கத்தில் இருந்த காய்கறி கடையின் தக்காளியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டார்கள். அது அன்றோடு முடிந்துவிட்டது. ஆனால் அடுத்த வருடம் அதே இடத்தில் ஒரு தக்காளி வண்டி சரிந்து விழ, சூழ்ந்து நின்ற பொது மக்கள் விளையாட்டாக எடுத்து கொண்டு அடித்து கொள்ள துவங்கினர்..
 
இப்படியே இது பழக்கமாக.. அடுத்தடுத்த வருடங்களில் மக்களே கைக்காசு போட்டு தக்காளி வாங்கி அடித்து கொண்டனர். படிபடியாக அது ஒரு திருவிழாவாக மாறியது.. இடையில் ஒரு முறை ஸ்பெயின் அரசு இந்த விழாவுக்கு தடை போட்டது..மக்கள் தக்காளியை பெட்டியில் வைத்து சவ ஊர்வலம் நடத்தினர், பிறகு அரசு தானே முன் வந்து இந்த திருவிழாவுக்கு உரிமை அளித்தது..ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவில் பயன்படுத்தப்படும் தக்காளியின் ஏஎடை எவ்வளவு தெரியுமா 125 டன்...! விழா முடிந்த பிறகு அந்த தெருவை சுத்த படுத்தவார்கலாம்..
- முஹம்மத் சாதிக்