JASH PHOTOGRAPHY

Friday, June 25, 2010

உலகின் பாதுகாப்பான ரயில் சேவையாக துபாய் மெட்ரோ


உலகின் பாதுகாப்பான ரயில் நிலையமாக துபாய் மெட்ரோ ரயில் தேர்வாகியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் பதினொன்றாம் தேதி துவங்கிய வளைகுடாவின் முதல் ரயில் சேவையான துபாய் மெட்ரோ இன்னும் முழுமையாக சில ரயில் நிலையங்கள் துவங்காத நிலையில் தினமும் ஒரு லட்சத்தி பனிரெண்டு ஆயிரம் பயணிகளை சுமந்து இன்னும் சில சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் மிகுந்த குறைவான குற்றங்களை கொண்ட ரயில் நிலையமாக உள்ளதாக துபாய் காவல் துறையின் பாதுகாப்பு மற்றும் அவரசப்பிரிவின் துணை நிர்வாகி கோலாநெல் அப்துல்லாஹ் அல் கைத் (Colanel Abdullah Al Ghaith) நேற்று செய்தியாளர்களுடன்   தெரிவித்தார். அதாவது பத்து லட்சம் பயணிகளுக்கு 1.6 பயணிகளே திருட்டுக்கு உள்ளாகப் படுவதாக அவர் தெரிவித்தார். இது மிகுந்த வளர்ச்சியடைந்த மற்ற பெரிய நகரங்களை விட மிகக் குறைவானதாம்.  அதாவது பத்து லட்சம் பயணிகளில் பிரிட்டனில் பதிமூன்று பேருக்கும், சிகாக்கோவில் 12.3 பேருக்கும், அட்லாண்டாவில் 7.5 பேருக்கும், போஸ்னியாவில் 5.8 பேருக்கும் திருட்டுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
துபாய் மெட்ரோ ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இரண்டு திருட்டுகள் (இரண்டுமே பிக் பாக்கெட்) நடந்து இருக்கிறது. இந்த இரண்டு சம்பவமும் மிகுந்த கூட்ட நெருக்கடியில் மால் ஆஃப் எமிரேட்ஸ் மற்றும் புர்ஜ் கலிஃபா ரயில் நிலையங்களில் நடந்துள்ளது. ஆனால் சமிபத்தில் எந்த ஒரு தவறும் நடைபெறாததால் மக்கள் மிகுந்த பாதுகாப்பாக கருதுகிறார்கள். துபாய் மெட்ரோவில் திருட்டு போன்ற குற்றங்களை தடுக்க மட்டும் மூவாயிரம் காமெராக்கள் பயன்படுத்தப்படுகிறது.


Thursday, June 24, 2010

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலர்ட்


மூன்று வருடம் முன்பு நடைபெற்ற தேர்தலில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சியை சேர்ந்த கெவின் ரூட் என்பவரே இதுவரை ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்து வந்தார். ஆனால் அவர் மீது அந்த கட்சியினரின் நம்பிக்கையின்மை அதிகரிக்கவே அவர் பதவி விலக நேரிட்டது. இதனை அடுத்து ஜூலியா கிலர்ட் போட்டியின்றி பிரதமராக தேர்வு செய்யபட்டார். இவரே ஆஸ்திரேலியா வரலாற்றில் முதல் பெண் பிரதமர்.

தனது கேபினெட் அமைச்சர்களை இன்னும்  தேர்வு செய்யாத நிலையில் வருகிற வெள்ளி அன்று கனடாவில் ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ளவும் இருக்கிறார். பதினொன்று வருடம் எதிர் கட்சியாக இருந்த இந்த ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி
2007 ஆம் ஆண்டே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. அதிலும் இப்போது பிரதமர் மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜூலியா கிலர்டின் கணவர்  டிம் மத்திஷன் ஒரு முடி திருத்துபவர். 


Wednesday, June 23, 2010

அதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள்


அதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள் எது என்று ஒவ்வொரு வருடமும்  கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டிற்கான பட்டியலை நேற்று போஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் வெளியிட்டது. உலக பொருளாதாரம் 11.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்த பட்டியல் தெரிவிக்கின்றது. பண முதலீடு, பொருளாதார சந்தையின் தொகை மற்றும் பலவிதமான சொத்துகளின் மதிப்புகளை வைத்து உலக பொருளாதாரத்தின் மதிப்பு 111.5 ட்ரில்லியன் என்று இதனுடன் வெளியிட்டு உள்ளனர். உலக பொருளாதார வீழ்ச்சியில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தும் அமெரிக்கவே இந்த பட்டியலில் வழக்கம்போல முதல் இடத்தில இருக்கிறது. அதிக மில்லினியர்களை கொண்ட முதல் பத்து நாடுகளை பற்றி இங்கே பார்போம்.

1. அமெரிக்கா   
             அமெரிக்காவில் மட்டும் நாப்பத்தி ஏழு லட்சத்தி பதினைந்து ஆயிரம் குடும்பங்கள் மில்லினியராக வாழ்வதாக இந்த பட்டியல் சொல்கிறது. இவர்களின் சொத்து மதிப்பு அமெரிக்காவின் பொருளாதரத்தில் ஐம்பத்தி ஆறு சதவீதம் இருக்கிறதாம். இது 15.1 சதவீதம் உயர்ந்து உள்ளது.

2. ஜப்பான்  
                ஜப்பானில் பனிரெண்டு லட்சத்தி முப்பதாயிரம் குடுமங்கள் மில்லினயராக வாழ்கிறார்களாம். இது 5.9 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு 21 சதவீதம

3. சீனா   
               உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் மிக அதிக சதவீத வளர்ச்சியான 30.7 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு சீனாவின் ஐம்பது சதவீதம் உள்ளது.

4. ஐக்கிய ராஜ்ஜியம்:
              ஐக்கிய ராஜ்ஜியம் (யுனிடட் கிங்டம்) - நான்கு லட்சத்தி எம்பத்தி ஐந்தாரியரம் மில்லினியர்கள் இருக்கிறார்கலாம். இது கடந்த ஆண்டின் 11.5 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி மூன்று சதவீதம்.

5. ஜெர்மனி:
                 நான்கு லட்சத்தி முப்பதாயிரம்   குடும்பங்களை கொண்டு ஜெர்மனி இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தில உள்ளது. இது கடந்த ஆண்டின் 23.1 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ரெண்டு சதவீதம்.
 
6. இத்தாலி   
                  மூன்று லட்சம் மில்லினிய குடும்பங்கள் கொண்ட இத்தாலி இதில் ஆறாவது இடம்.  இது 7.6 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ஏழு சதவீதம்.
 
7. சுவிட்ஸர்லாந்து   
                  இரண்டு லட்சத்தி எம்பத்தி மூன்று ஆயிரம் நபர்களை கொண்ட சுவிட்ஸர்லாந்தின் வளர்ச்சி 8.4 சதவீதம். ஆனால் இவர்களின் பொருளாதாரம் அந்த நாட்டின் நாப்பத்தி நாலு சதவீதம்.


8. பிரான்ஸ்   
                  பிரான்ஸ் மில்லினிய குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தி எம்பதாயிரம். இது 11.2 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதாரம் பிரான்சின் பொருளாதாரத்தில் பத்தொன்பது சதவீதம் இருக்கிறதாம்.
9. தைவான்   
                 இரண்டு லட்சத்தி முப்பதாயிரம் மில்லினிய குடும்பங்கள். வளர்ச்சி 21.1 சதவீதம். இவர்களின் பங்கு முப்பத்தி ஏழு சதவீதம்.
 
10. ஹாங்காங்   
                இரண்டு லட்சத்தி ஐந்தாயிரம் குடும்பங்கள் கொண்ட ஹாங்காங் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில இருக்கிறது. வளர்ச்சி 16.2 சதவீதம். இந்த மில்லினிய குடும்பங்களின் பொருளாதார பங்கு எழுபத்தி மூன்று சதவீதம்.
 - ஜாஃபர் ஷாதிக் | நன்றி: ஜாஸிம் புஹாரி, ஜவ்சிக்


Monday, June 21, 2010

சதாம்


ஈராக்கின் சர்வாதிகாரி, ஈராக்கில் உள்ள ஷியா, குர்து இன மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றொழித்த கொடுங்கோலன்'' இவைதான் மேற்குலக நாடுகள் சதாமை வர்ணித்த வார்த்தைகள். சதாம் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்திருந்தது. அதற்கு வசதியாக பேரழிவு ஆயுதங்கள் பலவற்றை ஈராக் வைத்திருக்கிறது என்ற குற்றம் சுமத்தப்பட்டது.ஆனால் சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு கூறப்பட்ட குற்றச் சாட்டு சற்றும் எதிர்பாராதது. 1982ஆம் ஆண்டு 148 ஷியா இன மக்களைக் கொலை செய்ததாலேயே சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

1988ஆம் ஆண்டு விஷவாயு மூலம் 5 ஆயிரம் பேரைக் கொலைசெய்தது, குவைத்தை ஆக்கிரமித்தது, மதச்சார் பற்ற மதரீதியான கட்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டது, வடக்கு ஈரானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களைத் துரத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம், அவை பற்றிய விசாரணைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக்குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்பட முன்னரே சதாம் ஹுசைனுக்கு அவசர அவசரமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்கப் படையினால் கைதுசெய்யப்பட்ட சதாம் ஹுசைனை ஈராக்கிய நீதிமன்ற
ம் விசாரிக்கும் என்ற அறிவிப்பு வெளிவந்த உடனேயே சதாமின் மரணதண்டனை
ஊர்ஜிதமானது. சர்வதேச நீதிமன்றத்தின் முன் சதாம் ஹுசைனை நிறுத்தியிருந்தால் அவருக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும். அப்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்திருப்பார். அந்தப் பதில் சில வேளையில் அமெரிக்காவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கும்.

இரண்டாவது உலகப் போரின் பின்னர் ஹிட்லரின் நாஜி படைத்தலைவர்களின் போர்க் குற்றங்களை விசாரித்த நூசெம்பர்க் நீதிமன்றம் குற்றவாளிகள் தமது தரப்பு நியாயத்தைக்கூற சந்தர்ப்பமளித்தது. ஈராக்கில் அதற்கெல்லாம் சந்தர்ப்பம் வழங்கப்படவில்ல. சதாமின் வாதத்தையைச் கேட்பதற்கு ஈராக் நீதிமன்றம் தயாராக இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதிலேயே ஈராக் நீதிமன்றம் உறுதியாக இருந்தது.

ஈராக் மீதான படையெடுப்பு அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. பிரதமர் பிளேயர் பதவி விலகும் நிலையை ஈராக் படையெடுப்பு உருவாக்கியது. அதேபோல் புஷ்ஷின் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியடையவும் ஈராக் படையெடுப்பு காரணமானது. சதாமின் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட மிகமோசமான நிலையில் இன்று ஈராக் உள்ளது.

ஈராக்கில் தினமும் சராசரியாக 100 பேர் மரணமடைகின்றனர். எப்போது குண்டு வெடிக்கும், எப்போது கைது செய்யப்படுவோம் என்ற மரண அச்சத்துடனேயே ஈராக் மக்கள் வாழ்கின்றனர்.

சர்வாதிகாரி சதாமிடமிருந்து ஈராக்கை மீட்கப் புறப்பட்ட அமெரிக்காவின் தலைமையிலான படை ஈராக்கைச் சுடுகாடாக மாற்றியுள்ளது. சதாம் மரணமானால் வன்செயல் அதிகரிக்கும் என்பது வெளிப்படை.

ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படைகளை வாபஸ் பெறவேண்டும் என்று
அமெரிக்காவில் கோசம் எழுந்துள்ளது. ஈராக்கில் அமெரிக்கப் படை நிலைத்து
நிற்கவேண்டுமானால் அங்கு வன்செயல்கள் அதிகளவில் நடைபெறவேண்டும். சதாமின் மரணம் ஈராக்கில் வன்செயலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்ல. சதாமின் எதிரி
யான ஷியா இன மக்களின் முன்னிலயிலேயே அவர் தூக்கிலிடப்பட்டார். தனது ஆட்சிக்காலத்தில் தனது எதிரிகளை தூக்கில் போட்ட அதே சிறைக்கூடத்திலேயே தானும் ஒருநாள் தூக்கில் தொங்குவேன் என சதாம் ஹுசைன் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

அமெரிக்காவின் துணையுடன் ஈரானில் அட்டூழியம் புரிந்த சதாமுக்கு அதே அமெரிக்காவின் துணையுடன் அவரது பரம எதிரிகள் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். அமெரிக்காவிடம் அடிமைப்பட்டிருக்கும் ஈராக்கில் தனது உடல் புதைக்கப்படக்கூடாது என்று சதாம் விரும்பினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேற்றப்படவில்லை. சதாமின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட ஷியா குர்துஇன மக்களின் உறவினர்கள் சதாம் தூக்கில் தொங்கி உயிரிழப்பதைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.ஷியா மக்களின் வலிமைமிக்க தலைவரான "முக்டதா'என்பவரின் பெயர் சதாமுக்கு முன்னால் உச்சரிக்கப்பட்டது. ஈராக்கின் மூலைமுடுக்கெல்லாம் தனக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டு அழித்தொழித்த சதாம் தன் முன்னால் தனது அரசியல் எதிரியான முக்டதாவின் ஆட்கள் இருப்பதை அப்போது தான் அறிந்து கொண்டார். ஈராக்கை கட்டியாண்ட சதாமின் கரங்களில் இறுதிவரை இருந்த குரானும் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதியின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டன. தன்னைஎதிர்த்தவர்களை அடக்கி ஒடுக்க உத்தரவு போட்ட கரங்கள் செயலிழந்தன.மரணப் பாதையை துணிந்து தேர்ந்தெடுத்த சதாம் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகி "யா அல்லா' என்றார். ஷகாதாவை உச்சரித்தபடி அவரது உயிர் பிரிந்தது.

மரணதண்டனை கைதியின் முகத்தை மூடுவதுதான் வழமை. தனது மரணத்தின்போதும் முகத்தை மூடக்கூடாது என்று சதாம் ஹுசைன் கூறியதால் அவரது முகம் மூடப்படவில்லை. மரணதண்டனையை நிறைவேற்றியவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.
விசைப் பலகை இழுக்கப்பட்டதும் அவரது கால்களைத் தாங்கி இருந்த பலகை விலகியது. கை, கால்களில் சிறு அசைவுகூட இல்லாமல் உயிர் பிரிந்தது.அரபு உலகில் வெள்ளிக்கிழமைதான் மரணதண்டனை வழங்கப்படும். சட்டப் பிரச்சினைகள் காரணமாக வெள்ளிக்கிழமை தண்டனை வழங்க முடியவில்லை. சதாமின் சொந்த ஊரான அவ்ஜாவில் அவரது உடலை அடக்கம் செய்ய ஈராக் அரசு முடிவு செய்தது. சனிக்கிழமை இரவு 11.45 மணியளவில் சதாமின் உடல் ஹெலிகொப்டர் மூலம் திக்ரிக் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த நகரின் அருகில்தான் அவ்ஜா நகர் உள்ளது. சதாமின் ஆட்சிக் காலத்தில் மதப்பண்டிகைகளுக்காக கட்டப்பட்ட எண்கோண மண்டபத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஞாயிறு காலையில் பொழுது விடியத்தொடங்கியதும் அணி அணியாகத் திரண்ட மக்கள் கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்தனர். சதாமின் கல்லறை புண்ணிய ஸ்தலமாக மாறியது. ஈராக்கில் நுழைந்த அமெரிக்காதான் நினைத்ததை தனது பொம்மை அரசைக் கொண்டு செய்து முடித்துள்ளது.
- அம்ஜத் அலி கான்


Wednesday, June 16, 2010

பிரான்சில் கடும் புயல், மழை. 19 பேர் பலி, 7 காணவில்லை


பிரான்சில் தென் பகுதியில் பெய்ந்த பலத்த மழை மற்றும் புயல் காற்று வீசியதால் பத்தொன்பது பேர் பலியாகி உள்ளதோடு ஏழு பேரை காணவில்லை என்று அந்த நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது. முன்னூற்றி ஐம்பது மில்லி மீட்டர் பெய்த இந்த மழை 1827 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரான்சில் நடக்கும் கடுமையான பாதிப்பு என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஒரு லட்சம் வீடுகள் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் பிரிக் ஹோர்டேபெவ்ஸ் (Brice Hortefeux)   செய்தியாளர்களுடன்    தெரிவித்தார்.  இந்த புயல் மழையால் நூற்றுகணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்து, பல வீடுகள் தண்ணீரால் மூழ்கியும் கிடக்கிறது. அங்குள்ள மக்கள் நகரமெங்கும் பாறைகள், கற்கள் மற்றும் சேற்றுகள் நிறைந்துள்ளதாகவும், வாகனங்களால் சாலைகள் அனைத்தும் அடைக்க பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்


குரங்கும் குவாட்டரும்


 என் இனிய தமிழ் மக்களே குரங்களிடம் அடி வாங்கும் ஒரு கிராமத்தின் கதை இது (உண்மையான கதை பா).. ஒரிசாவின் புவனேஸ்வர் அருகே இருக்கிறது  பாத்ரா கிராமம். ஒரு நாள் குரங்கு குரூப் ஒன்று அந்த கிராமத்தின் மூன்று இளைஞர்களை தாக்கியது..கடுப்பான கிராம மக்கள் குரங்குகளை துரத்தி அடித்தனர். பல குரங்குகள் படுகாயமடைய, இரக்கப்பட்ட கிராம மக்கள் சிலர் அவற்றை மருத்தவமனையில் சேர்த்தனர். சிகிச்சை காலத்தில் ஆல்கஹால் கலந்த டானிக்கை கொடுத்து குரங்குகளை தொடர் மயக்கத்த்லேயே வைத்திருந்தனர். குணமான பிறகும் குரங்குகளுக்கு அந்த போதை தேவைப்பட்டது. இதனால் கிராமத்தில் இருந்த மதுக்கடைக்குள் புகுந்துவிட்டன அந்த குரங்குகள். ஆரம்பித்தது வினை. தினம் மது கடைக்கு குரங்குகள் படையெடுக்க கடையே மூடிவிட்டார்கள். போதை பழக்கமான குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பாட்டில்களை அள்ளிசெல்ல ஆரம்பித்தன. வீட்டில் பாட்டில் ஏதும் இல்லையென்றால், ஆட்களையும் கோபத்தில் அடி பின்னி எடுகின்றனவாம்.. இதனால் கட்டிங் பிளஸ் மிக்ஸ்சிங்கோடு வீட்டு வாசலில் பாட்டிலை வைத்துவிடுகிறார்கள் பாத்ரா மக்கள். செலவு கட்டுபடியாகதால் அங்கே இப்போது போதை தரக்குடிய பச்சிலை ஒன்றை அரைத்து, தண்ணீர் கலந்து விட்டு முன் வைக்கிறார்கள். இப்போது பச்சிலை சாற்றை சாப்பிட்டு போதையில் குரங்குகள் டான்ஸ் வேற ஆடுகிறதாம் (இந்த கொடுமையை நான் எங்கே பொய் சொல்ல).. 
முஹம்மத் சாதிக் 


Monday, June 14, 2010

காற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்


முன்னால் ஏரோனாடிக் மற்றும் போர்முல ஒன் பொறியாளரும் ஆனா GUY NEGRE என்பவர் அழுத்தமான காற்றினால் இயங்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். மோட்டார் டேவலாப்மென்ட்  இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) என்னும் கம்பெனியை பிரான்ஸ் நாட்டில் லக்சம்பெர்க் (LUXEMBERG) என்னும் ஊரில் உருவாகினார். அதில் இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியை மேம்படுத்தி வந்தனர். இவர்களுடைய படைப்புகளில் ஒன்று ஏர்பாட் (AIRPOD) என்று அழைக்கப்படும் நான்கு சக்கர வாகனம்.

இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடுப்பு ஆகும் . இதில் வாகனத்தை செயல்படுத்த  அழுத்தமான காற்றை கொண்டு பிஸ்டனை (PISTON) செயல் படுத்துகின்றனர். 5.45 HP வேகத்தில் கம்புச்தியன் என்ஜின் (COMBUSTION ENGINE) செயல் படுத்த முடிகிறது. இதில் ஒரு சிலிண்டரில் காற்று அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் , மேலும் ஒரு சிறிய மோட்டார் வெளியில் உள்ள காற்றை அழுத்தி டேங்கை எப்போதும் முழுமையாக வைத்துகொள்ள உதவும். இதனுடைய கம்ப்றேச்சொர் (COMPRESSOR) டீஸல் , எதனால் (ETHANOL) , என்னை மற்றும் மின்சாரம் போன்ற வற்றல் இயங்கும் ஆற்றல் உடையது . மேலும் 200 KM தொலைவு செல்ல வெறும் 0.5 EURO செலவாகிறது.
 ஏற்பாட் (AIRPOD) வாகனத்தில் மூன்று நபர்கள் செல்ல முடியும். இது குறைந்த விளையும், எந்த ஒரு தீங்கும் இல்லா வாகனமாகும் .

இது தற்போது பாரிஸ் விமானநிலையத்தில் உபயோக படுத்தபடுகிறது.
மோட்டார் தேவேலோப்மேன்ட் இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) நிறுவனம் ஆனது இந்திய நாட்டின் டாட்டா நிறுவனத்துடன் ஒபந்தம் செய்துள்ளது. இந்தியாவில் டாட்டா ஒனேகாட் (TATA ONECAT) என்னும் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
ஜாஸிம் புஹாரி


யாஸ் மரினா சர்கிட், நான்கு சக்கர வாகன போட்டி மைதானம்


யாஸ் மரினா உலக அளவு நான்கு சக்கர வாகன போட்டி ( FORMULA 1 GRAND PRIX ) நடைபெறும் ஒரு இடம் ஆகும் . இது UAE நாட்டின் அபுதாபி நகரில் யாஸ் தீவில் அமைந்துள்ளது. யாஸ் மரினா வளைகுடா நாடுகளில் இரண்டாவது போட்டி இடம் ஆகும் , முதலாவது பஹ்ரைன் நாட்டில் உள்ளது. யாஸ் மரினா ஹெர்மன் டில்கே என்னும் ஜேர்மன் நாட்டு கட்டிடகளை நிபுணரால் வடிவமைக்க பட்டது. இது மொனாகோ ( MONTE CARLO ) பந்தய இடத்தின் அரேபிய மாதிரியாக வடிவமைக பட்டுள்ளது. மொனாகோ பந்தயம் உலகின் மிகசிறந்த நான்கு சக்கர வாகன பந்தய இடம் ஆகும். யாஸ் மரினா செயற்கையாக மற்றும் அழகாக உருவான இடம்.

யாஸ் மரினா சர்கிட் அபுதாபி அரசாங்கத்திற்கு சொந்தமானது . இது அக்டோபர் மாதம் 2009 இல் திறந்து வைக்கபட்டது. இந்த மரினா சர்கிட்இல் 21 கடினமான வளைவுகள் உள்ளது அது பந்தயகாரர்களுக்கு மிகவும் சவாலாக விளங்குகிறது. அகவே இது உலகின் மிக சிறந்த நான்கு சக்கர வாகன பண்டைய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

எதிஹாத் விமான அமைப்பு இதன் ச்போன்செர் ஆகும்.
மக்கள் கொள்ளவு - 41,093
நீளம் - 5.554 KM
வளைவுகள் - 21
பார்முலா 1 அமைப்பு அபுதாபி யாஸ் மரினா வில் எட்டு வருடம் பந்தயம் நிகழ்த்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதை தொடர்ந்து முதல் பார்முலா 1 FORMULA 1 ETIHAD AIRWAYS ABU DHABI GRAND PRIX  போட்டி 30 அக்டோபர் முதல் 01 நவம்பர் 2009வரை நிகழ்ந்தது. அந்த வருடத்தின் கடைசி போட்டியும் அதுவே . இந்த போட்டியில் செபஸ்டியன் வேட்டல் ( SEBASTIAN VETTAL ) என்னும் ரெனால்ட் ( RENAULT ) அணியை சேர்ந்த வீரர் முதல் இடம் பிடித்தார் . இவரை தொடர்ந்து மார்க் வேப்பர் ( MARK WEBBER ) அதே ரெனால்ட் ( RENAULT ) அணி இரண்டாவது இடத்தையும் , ஜசோன் பட்டன் ( JASON BUTTON ) மெர்செடெஸ் ( BRAWN MERCEDES ) அணியை சேர்ந்தவர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 2009 ஆம் வருததின் சாம்பியன் ஆக ஜசோன் பட்டன் தேர்ந்தேடுகபட்டார்.

இந்த வருடத்திற்கான போர்முல 1 எடிஹாத் ஐர்வய்ஸ் அபுதபி கரண்ட் பிரிக்ஸ் ( FORMULA 1 ETIHAD AIRWAYS ABU DHABI GRAND PRIX 2010 ) போட்டி 12 நவம்பர் முதல் 14 நவம்பர் வரை நடக்க உள்ளது .
 -ஜாஸிம் புஹாரி


Sunday, June 13, 2010

ஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை சுமக்கிறது..!


ஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை சுமக்கிறது..!
முதலில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சீன மருத்தவர்கள் நம்பவில்லை பின்பு நேரடியாக சென்று பார்த்த பிறகு அதிர்ச்சியில் உறைந்து போயினர்..!
Kang Mengru  - என்று அழைக்கப்படும் அந்த குழந்தை ஒரு அனாதையாகும், ஒரு சீன தம்பதிகள் அந்த குழந்தை எடுத்து வளர்க்க ஆரம்பித்த போது அந்த குழந்தையின் வயிறு ஆனது பெரிதாகி கொண்டே போனது முதலில் இதை தீய சக்தி என்று கருதிய  தம்பதிகள் பின்பு மருத்தவரிடம் கொன்று காண்பித்த போது தான் தெரிந்தது அந்த குழந்தையின் வயற்றில் இரண்டுசிசு வளர்வது தெரிய வந்தது..,
முதலில் மருத்தவர்கள் கருத்தடை செய்ய முயற்சித்தனர். ஆனால் சில சமயங்களில் கருத்தடை மிகவும் ஆபத்தானது என்று கருதிய மருத்தவர்கள் பின்பு அறுவை  சிகிச்சை மேற்கொண்டு அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த சிசுவை எடுத்து விட்டனர்..கடவுளின் கருணை அந்த குழந்தை இப்போது நலமுடன் இருப்பதாக மருத்தவர்கள் குறியுள்ளனர்...இந்த உலகம் எதையோ நோக்கி பொய் கொண்டிருகிறது என்பது மட்டும் மறக்க முடியாத உண்மையாகும்.. 
Recovering ... tiny 
Kang had surgery to remove parasitic twin குழந்தை குணமாகி வரும் படம் இது. பூர்ண குணமாக வேண்டிகொள்வோம். 
- முஹம்மத் சாதிக்


ஸ்பெயினின் தக்காளி திருவிழா


தக்காளியை வைத்து ரசம் வைக்கலாம் ஏன் முட்டை பொறியல் கூட செய்யலாம் . திருவிழா கொண்டாட முடியுமா? அது தான் ஸ்பெயினின் ஸ்பெஷல் திருவிழா.

valencia மாகாணத்தில் உள்ள புனால் நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் லா டோமொடினா என்ற தக்காளி சண்டை திருவிழா நடைபெறுகிறது. லாரி லாரியாக குவிக்கப்பட்ட தக்காளியை ஆளாளுக்கு ஒருவர் மீது ஒருவர் விச, ரோட்டில் தக்காளியை கொட்டி அதில் உருள சிலர் அதில் குளிக்க.. என அந்த ஊரே சிவந்து போகிறது., சாலை எங்கும் தக்காளி வெள்ளம் (நாம ஊர்ல சாக்கடை வெள்ளம் மட்டும்தான் ஓடுது)..
 
உள்ளூர் வாசிகள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சேர்ந்து கொள்வதால், தக்காளி வீசும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்த படியே போகிறது.
1945-இல் ஒரு திருவிழா ஊர்வலத்தின் போது சில கிராமத்து சிறுவர்களுக்கு இடையே தகராறு.. பக்கத்தில் இருந்த காய்கறி கடையின் தக்காளியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டார்கள். அது அன்றோடு முடிந்துவிட்டது. ஆனால் அடுத்த வருடம் அதே இடத்தில் ஒரு தக்காளி வண்டி சரிந்து விழ, சூழ்ந்து நின்ற பொது மக்கள் விளையாட்டாக எடுத்து கொண்டு அடித்து கொள்ள துவங்கினர்..
 
இப்படியே இது பழக்கமாக.. அடுத்தடுத்த வருடங்களில் மக்களே கைக்காசு போட்டு தக்காளி வாங்கி அடித்து கொண்டனர். படிபடியாக அது ஒரு திருவிழாவாக மாறியது.. இடையில் ஒரு முறை ஸ்பெயின் அரசு இந்த விழாவுக்கு தடை போட்டது..மக்கள் தக்காளியை பெட்டியில் வைத்து சவ ஊர்வலம் நடத்தினர், பிறகு அரசு தானே முன் வந்து இந்த திருவிழாவுக்கு உரிமை அளித்தது..ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவில் பயன்படுத்தப்படும் தக்காளியின் ஏஎடை எவ்வளவு தெரியுமா 125 டன்...! விழா முடிந்த பிறகு அந்த தெருவை சுத்த படுத்தவார்கலாம்..
- முஹம்மத் சாதிக்


Sunday, June 6, 2010

பெர்முடா முக்கோணம்



பெர்முடா முக்கோணம் : இது சைத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது, பெர்முடா முக்கோணம் என்பது வட அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பிராந்தியமாகும், இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும்,கடற்கொள்ளை, எந்திர கோளாறு, அல்லது இயற்கை சீற்றங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த மறைதல்களுக்கு அமானுட சக்தி, அதாவது இயற்பியல் விதியை உடைத்து, பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஜீவன்களின் நடவடிக்கையை காரணமாக பொதுமக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்

முக்கோணப் பகுதி: இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.பல எழுத்து படைப்புகளில் மிகவும் பிரபலமான முக்கோண எல்லைகளாக இருப்பது, புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒரு இடம்; சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு, விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா ஜலசந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது. இந்த பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது, இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன.சொகுசுக் கப்பல்கள் ஏராளமாய் உள்ளன, பொழுதுபொக்கு விமானங்கள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஏராளமான வர்த்தக மற்றும் தனியார் விமானங்கள் செல்கின்றன.






இம்முக்கோண பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேர் எழிலுடன் காணப்பட்டாலும் நீரின் அடிபகுதி ஒரு சுழல் போல் உள்ளது.,இது வரைக்கும் 40 க்கும் மேற்பட்ட விமானகள் கப்பல்கள் பாய் மாற படகுகள் மாயமாய் மறைந்துள்ளன.,விஞ்ஞானிகளின் kutru படி இப்படி மறைந்த கப்பல்கள் யாவும் வேறு ஒரு பரினமாதில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். வேறு சில ஆய்வாளர்கள் இது வேற்று கிரத்தின் வாழும் aliens எனப்படும் உயிரினத்தின் மாயா வேலை என்று கூறுகிறார்கள். வேறு சில அறிவியல் ஆய்வாளர்களோ படிகம்ளிருந்து உருவாகும் காந்த இருப்பு விசை(due to ultra maganetic force) காரணமாக தான் விமானகளும் கப்பல்களும் ஈர்க்கபடுகிறது என்று கூறுகிறார்கள்.



பெர்முடா முக்கோணத்தின் மறு பகுதியில் உள்ள (பூமி உருண்டையில் மறுமுனை பகுதி) ஜப்பான் நாட்டு கிழக்கு கடற்கரை பகுதி பிசாசு கடல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது இங்கயும் பல கப்பல்கள் மயமாய் மறைந்துள்ளன., இந்த இரண்டு முனைகளிலும் காந்த ஈர்ப்பு விசையானது அதிகமாக இருக்கிறது ஆய்வாளர்களின் கருது படி இந்த இரண்டு கடல் பகுதிக்கும் எதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள்.,



அண்மைய கால ஆய்வின் படி எல்லா திட பொருள்களும் தமகுள்ளடகிய சக்தியை பெற்றிருக்கும், திட பொருள்கள் யாவும் இந்த சக்தியின் மறுவடிவம். (congealed energy)., எல்லா அணு முலக்குருகளும் இந்த சக்தியை பெற்றிருக்கும். எல்லா அணு முலக்குருகளுகுள்ளும் ஏலேக்ட்ரோன் ப்ரோடான் neutron இருக்கும் இதில் ஏலேக்ட்ரோன் என்ற முலக்குரனாது முந்திய நிலைக்கு செல்வதாக வைத்து கொண்டால் அது முலக்குரனாது காற்றில் கலந்து விடும்., நம்ம scintist thalayan என்ன சொல்ல வரான கப்பல் விமானம் எல்லாத்திலும் அலுமினியம் இரும்புனு நெறய முலகுருகளால்

1872-ஆம் ஆண்டு செசல்டி என்னும் பெயருடய பாய்மற கப்பல் மறைந்த நிகழ்ச்சியே முதல் முதலில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும்..
                                                      -முஹம்மத் சாதிக்


Sunday, May 30, 2010

அமீரகத்தில் உடம்பை குறைக்கும் கிரீன் டீ, காபிகளுக்கு தடை


ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுசூழல் மற்றும் சுகாதார அமைச்சவையில் உடம்பை குறைக்கும் கிரீன் டீ மற்றும் காபிகளுக்கு இன்று (மே 30, 2010) முதல் தடை விதித்து உள்ளது. லிப்டன் கம்பனின் இவ்வகை டீ, அதன் லேபிளில் குறிப்பிடாத பொருட்கள் அதில் சேர்க்க பட்டுள்ளது என்று இந்த தடையை விதித்து உள்ளது. லாபில் சோதனை செய்து கண்டிபித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 ஓபைத் ஜுமா அல் மற்றௌஷி (Obaid Juma Al Matroushi) , தற்காலிக சுற்றுசூழல் மற்றும் சுகாதார அமைச்சர் இந்த தடையை வெளியிட்டு இதை ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள எல்லா கடைகளிலும் விற்க தடை விதித்து உள்ளார். லேபிளில் குறிப்பிடாத Sibutramine என்கிற கலவையால் உடல் சீக்கிரம் குறைவதோடு பலவிதமான cardiovascular நோய்கள் வர அதிகமாக வாய்ப்புள்ளதாம். அமெரிக்கா லிப்டன் நிறுவனத்தில் தாரிக்கபடும் இந்த வகை டீ, கடந்த வாரம் சவுதி அரேபியாவிலும் இதே போன்று லேபிலில் இல்லாதவைகள் இருந்ததாக தடை விதிக்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அமீரகத்தில் தடை விதித்துள்ள இரு பொருட்கள்: 
லிப்டன் காபி 800

லிப்டன் ஸ்லிம்மிங் பாக் கிரீன் டீ 


Saturday, May 29, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் அதிகரிப்பு




இன்று (மே 29, 2010) சனிக்கிழமை துபாயில் வெளியிட்டுள்ள செய்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் 3.2 சதவீதம் அதிகரித்து உள்ளதாக நாட்டின் நிதி அமைச்சர் சுல்தான் பின் சாயத் அல் மன்சூரி (Sultan bin Saeed Al mansuri) அவர்கள் பத்திரிக்கையாளர்களுடன் தெரிவித்தார். கடந்த ஆண்டு இது 1.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது இருந்தது. இந்த பொருளாதார வளர்ச்சியில் எண்ணெய் இரண்டு முதல் இரண்டரை சதவீதம் உதவியாக இருந்தாக அவர் மேலும் தெரிவித்தார். ஒரு பெரல் 85 அமெரிக்க டாலராக இருந்த எண்ணெயின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 95 அமெரிக்க டாலர் வரை உயர கூடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தில் 29.4 சதவீதம் எண்ணெய் மூலமாகவும்,  71.6 சதவீதம் மற்ற துறையின் மூலம் வருமானம் வருவதாக தெரிவித்தார். 

எண்ணெய் இல்லாத மற்ற துறையால் வருமான சதவீதம்:
16.2 சதவீதம் : உற்பத்தி 
10.7 சதவீதம் : கட்டிடவியல் 
9 சதவீதம் :  மொத்த வியாபாரம், வணிகம்           
8.2 சதவீதம் : ரியல் எஸ்டேட்     
8 சதவீதம் : அரசு  துறைகள்  
7.1 சதவீதம் : போக்குவரத்து, சேமித்தல் மற்றும் தொலைதொடர்பு 
5.8 சதவீதம் : வங்கி மற்றும் மற்ற பொருளாதார துறைகள்   
1.8 சதவீதம் : ஹோட்டல் மற்றும் உணவாக துறைகள் 
1.7 சதவீதம் : விவசாயம், மீன் பிடித்தல் போன்ற துறைகள்  
1.6 சதவீதம் : மின்சாரம், தண்ணீர் போன்ற துறைகள்  


துருக்கியின் அணுமின் நிலைய ஒப்பந்தத்தில் ரஷ்யா



ரஷ்யா ஜனாதிபதி டிமிட்ரி மெத்வெதேவ் துருக்கி தலைநகர் அங்காராவில் துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லை கடந்த புதன் அன்று சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையே ஆன ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டது. அது சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கு இடையே ஆன உறவுகளை பலப்படுத்தும் பேச்சுக்களாக இருந்தது.
டிமிட்ரி மெத்வெதேவ் துருக்கி செல்லும் முதல் சந்திப்பான இதில் இரு நாடுகளில் உள்ளவர்கள் விசா வசதி இலகுவக்கபட்டு எண்ணெய் பைப்களை போடுவதற்க்கான வேலைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக துருக்கியின் முதல் அனுமின் ஆலயத்தை கட்டி தரும் பணியிலும் ரஷ்யா கையெழுத்து இடப்பட்டது.


Wednesday, May 26, 2010

ஜெர்மனி-ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிதாக நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்து


ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபு தாபியில் அரசுக்கு சொந்தமான ஏழு நட்சத்திர ஹோட்டல் 'எமிரேட்ஸ் பேலஸ்' (அமீரக மாளிகை என்று பொருள்) வைத்து ஜெர்மானிய சான்ஸளர் ஏஞ்சலா மேர்கேல் அவர்கள் அபு தாபியில் மணிமுடி இளவரசர் ஷேய்க் முஹம்மத் பின் சய்யத்அல் நஹ்யான் அவர்களை கடந்த திங்கள் அன்று (மே 24, 2010) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டிற்க்கும் இடையே நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. கல்வி, மின்சாரம், கலாச்சாரம், பெட்ரோல், அரசியல், சுற்றுலா, பொருளாதாரம் என்று பல துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் இருந்தது என்று தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த இரு நாட்டுக்கும் இடையே உள்ள உறவு இன்னும் பலமாகி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். வளைகுடா நாடுகளின் அமைதி, தொடர்பு மற்றும் உலக நிலவரங்களை பற்றியும் பேசியுள்ளனர். ஜெர்மனி இந்த ஒப்பந்தங்களால் சந்தோஷ படுவதாக தெரிவித்த ஏஞ்சலா மேர்கேல் அமீரகத்தில் தான் தனது நாடு அதிகம் வணிக தொடர்புகள் வைத்துள்ளதை அவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் எண்ணூறு ஜெர்மானியர்கள் தொழில் செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Tuesday, May 25, 2010

பதிமூன்று வயதில் மவுண்ட் எவரெஸ்ட் சென்று அமெரிக்க சிறுவன் சாதனை


அமெரிக்காவை சேர்ந்த ஜோர்டான் ரோமெரோ என்ற பதிமூன்று வயது சிறுவன் மவுண்ட் எவரெஸ்ட் சென்று உலகத்திலேயே சிறு வயதில் இங்கு சென்ற பெருமையை பெறுகிறார். இவர் சென்ற உயரம் 29,035 அடி, இதற்க்கு முன்பு இந்த சாதனையை நேபாளை சேர்ந்த டெம்ப ட்ஷேரி என்ற பதினாறு வயது சிறுவன் செண்டு இருந்தார். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது எனது வாழ்வின் மிகப்பெரிய இலக்கை அடையா போகிறேன் என்று நினைத்து கொண்டு சென்றேன் என்று ஜோர்டான் ரோமெரோ கூறுகிறார். 

இவரின் கனவு நினைவாகி இருக்கிறது என்று தனது ப்ளோகில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரது ப்ளாக்-ஐ பார்க்க இங்கே சொடுக்கவும். 


Monday, May 24, 2010

கென்யாவில் சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே போட்டி



கென்யாவின் வட பகுதியில் இருக்கும் மசை மாரா என்கிற இடத்தில ஒரு விவசாயி தனது மூன்று மாடுகளை சிங்கம் கொண்டு தின்றதை பலி தீர்க்கும் விதமாக மூன்று சிங்களுக்கு விஷம் வைத்து கொன்று இருக்கிறார். இதை கேள்விப்பட்டதும் இவரை கென்யா போலீசார் கைது செய்துள்ளனர். கென்யாவில் சிங்கங்களை கொல்வது மிகப்பெரிய குற்றம்.   ஆப்ரிக்காவின் பல நாடுகள் இதுபோன்ற விலங்குளால் பெருதும் சம்பாதிக்கின்றனர். உலகெங்கும் இதுபோன்ற விலங்குகளை அதிகம் ஆப்பிரிக்காவில் தான் அதிகம் சிற்றுலா பயணிகள் வருகின்றனர். 
கென்யா மக்கள் தொகை நான்கு கோடி என்றால், அதன் விலங்குளின் எண்ணிக்கையும் அதே நான்கு கோடியாம். எனவே மக்களுக்கும், விலங்குகளுக்கும் அங்கே பெரிய போட்டியாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருபதாயிரம் இருந்த சிங்கத்தின் எண்ணிக்கை இப்போது இரண்டாயிரம் தான் இருக்கிறதாம். எனவே இது போன்ற கொலைகள் மற்றும் வேட்டையாடுவதை அந்த அரசு கடுமையாக தடுத்து வருகிறது. இதற்காக எண்ணற்ற கருத்தரங்கள் நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். 


Friday, May 21, 2010

துபாயிலிருந்து மங்களூர் சென்ற விமானம் கடும் விபத்து, 160க்கும் அதிகமானோர் பலி


 துபாயிலிருந்து மங்களூர் சென்ற போயிங்  737 என்கிற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை இந்தியா நேரம் 7.30 மணிக்கு மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது தீ பிடித்ததில் விமானம் இரண்டாக உடைந்து 160 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். விமான நிலையத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்தாக கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்தார். விமானம் ரெண்டாக உடைந்து, கடுமையாக தீ பிடித்ததாக விமானத்தில் இருந்து வெளியே குதித்து தப்பித்த 'அப்துல்லா' என்கிற பயணி மருத்துவமனையில் இருந்து TV9 என்கிற தொலைகாட்சிக்கு அளித்த பெட்டியில் தெரிவித்தார். டயரில் இருந்து கடுமான சத்தம் வந்ததாகவும் முன் கதவு தீ பிடித்தால் பின் கதவில் இருந்து தப்பிதாகவும் தெரிவித்தார். மேலும் இருவர் விமானத்தில் இருந்து தப்பித்து வெளியே குதித்தை அவர் பார்த்தாக தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான விமானம் தன் கிராமத்தில் விழுந்து நொறுங்கியதில் தன் கிராமத்தில் இந்த அனைவரும் வெளியே வந்துவிட்டதாகவும், என் கால் பக்கத்தில் விமானத்தின் ரெக்கை தீ பற்றி எரிந்ததாகவும் மொஹிதீன் பாவா என்ற கிராமவாசி CNN -IBN என்கிற தொலைகாட்சியில் தெரிவித்தார்.
விபத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்க படும் என்று இந்தியா பிரதமர் மன்மோகன் சிங்க் அறிவித்து உள்ளார்.
 
டெல்லி விமான நிலையத்தின் அவசர பிரிவு எண்கள் - 011-2565-6196 & 011-2560-3101
மங்களூர் விமான நிலையத்தின் அவசர பிரிவு எண் - 0824-2220422


Monday, May 17, 2010

சாலையில் பணக்கட்டுகளை வீசியதால் ஜப்பானியர கைது.


உலகத்தில் விசித்திரமான சில சம்பவங்கள் எப்படியெல்லாம் நடக்கிறது பாருங்கள். ஜப்பானில் ஒரு பரப்பரப்பான நெடுஞ்சாலையில் ஒருவர; பததாயிரம் ஜப்பானிய யேன் நோட்டு கட்டுகளை பறக்க விட்டு இருக்கிறார;. மொத்தம் 2.77 மில்லியன் மதிப்புள்ள ஜப்பானிய யேன்கள் (இந்திய மதிப்பு: 14 லட்சம் ரூபாய்). 49 வயதான அந்த மனிதர; ஜப்பானிலுள்ள சூபு என்கிற மாநிலத்திலுள்ள அய்ஸி ப்ரேபக்ஷர; என்கிற இடத்தில் தனது காரில் சென்று இவ்வாறு செய்து இருக்கிறார;.

அவர; வீட்டிலிருந்து ஏழு மில்லியன் யேன்னுடன் சென்றதாக அவர; குடும்பத்தினர; சொன்னதாக ஜப்பானின் கியேடோ நியு+ஸ் செய்தி வெளியிட்டது.

இது நம்மூரில் நடந்து இருந்தால் என்ன நடந்திருக்கும்? இவரை ஜப்பானிய போலீஸ் கைது செய்து விசாரனை நடத்தி வருகிறது. இவருக்கு கோர;ட் தண்டனை வழங்கும் என்று கூறப்படுகிறது.


Sunday, May 16, 2010

லிபியா விமான விபத்தில் உயிர் பிழைத்த சிறுவனும் அவன் தந்தை கடைசியா போஸ்ட் செய்த ப்ளாக் போஸ்டும்



மே 12 , 2010 (புதன்) GMT நேரம் காலை 4 10 க்கு (லிபியா நேரம்: 6.10), தென் ஆபிரிக்க தலைநகர் ஜோஹன்ஸ்பேர்க் இருந்து லிபியா தலைநகர் திரிபோலி சென்ற விமான நிலையம் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த அத்தனை பெரும் பலியாகி ஒரே ஒரு சிறுவன் மட்டும் உயிர் தப்பி உள்ளார். 
103 பேரை பலிகொண்ட இந்த விபத்தில் ரூபன் வான் அச்சௌவ் (Ruben Van Assouw) என்கிற ஒன்பது வயசு டட்ச் சிறுவன் மட்டுமே உயிர் பிழைத்தது கண்டு பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சிறுவன் தனது ௧௧ வயது அண்ணன் மற்றும் பெற்றோருடன் தனது தந்தையின் பனிரெண்டரை வயசு திருமணத்தை கொண்டாட தென் ஆபிரிக்கா சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நடைபெற்றது. (பனிரெண்டரை ஆண்டு திருமண கொண்டாட்டம் டட்ச் மக்களின் வழக்கம்) . 
இவர்கள் பயணம் செய்த ஆஃப்ரிகிய விமானம் ஒரு குறைந்த விலை விமான நிலையம். ஆப்பிகவில் இருந்து ஐரோப்பிய செல்லும் பயணிகள் எல்லாம் லிபியாவில் தொர்பு விமானம் பிடித்து செல்வது வழக்கம். இந்த பயணத்திலும் இவ்வாறு பலர் பயன் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து, லிபியா, பிரிட்டன், ஜெர்மனி, பின்லாந்த், ஜிம்பாப்வே, பிலிபன்ஸ, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ் நாட்டில் வசிபவர்கள் இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக லிபியாவின் போக்குவரத்து அமைச்சர் முஹம்மத் அலி ஜிடான் தெரிவிக்கின்றார்.  விமானத்தில் பனி புரியும் பதினோரு பெரும் கூட இதில் அடங்கும். 

விபத்து நடக்கும் சில கனங்களுக்கு முன்பு அதன் பைலட் அவசர முகாமிற்கு தொர்பு விமானத்தில் சில கோளாறுகள் உள்ளது உடனே உதவி வேண்டும் என்று கேட்டு கொண்டும் எந்த பலனும் இல்லை என்று லிபியா நாளேடு 'குறியிநா' (Quryna) தெரிவித்தது, ஆனால் இது மற்ற எந்த ஊடக செய்துகளும் உறுதி படுத்தவில்லை. 

உயிர் தப்பிய சிறுவன் காலில் ஏற்பட்ட படுகாயத்தில் நாலரை மணி நேரம் ஆபரேஷன் நடைபெற்று குணமாகி வருவதாக லிபியா தொலைகாட்சிகள் செய்தி தெரிவிக்கின்றன. அந்த சிறுவனின் அண்ணன் மற்றும் பெட்ட்றோர் இறந்த செய்தியை இன்னும் தெரிய படுத்த நிலையில் அந்த சிறுவனின் மாமா மற்றும் அத்தை ஹாலந்தில் இருந்து வந்து அந்த சிறுவனையும் அங்கு கொண்ட செல்ல இருகின்றனர். 

தென் ஆப்ரிக்கா சென்றதும் அங்கு சந்தோசமாக கொண்டாடியதும் அந்த சிறுவனின் தந்தை தனது ப்ளோகில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் கடைசியாக மே பத்தாம் தேதி போஸ்ட் செய்துள்ளார். அவரின் ப்ளாக்-ஐ இங்கே கிளிக் செய்து பார்க்கவும்

லிபியா நாளேட்டின் செய்தி (அரபி) _ இங்கே சொடுக்கவும் 


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha