JASH PHOTOGRAPHY

Thursday, July 1, 2010

சபிக்கப்பட்ட விளம்பரம்?


"write the future" என்னும் நைக் நிறுவனத்தின் கால்பந்து விளம்பரம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விளம்பரத்தில் வந்த காலபந்து நட்சத்திர வீரர்கள் அனைவரும் சபிக்கப்பட்டுவிட்டனர் என்று பத்திரிகைகள் தெரிவிகின்றன. இந்த விளம்பரத்தில் வந்த அனைத்து வீரர்களும் உலக கோப்பையில் சரியாக விளையாடாமல் வெளியேறி உள்ளனர்.



இந்த விளம்பரத்தில் உள்ள வீரர்கள்:
-ரொனால்டினோ (பிரேசில்)
-ரிபரி (பிரான்ஸ்)
-துரோக்பா (ஐவோறி கோஸ்ட்)
-ரூனி (இங்கிலாந்த்)
-கேன்னவேரோ (இத்தாலி)
-ரொனால்டோ (போர்துகள்)
-பெடரர் (டென்னிஸ்)
-கோபே பிரயன் ( கூடைபந்து)


உண்மையே , பிரேசில் அணியை சேர்ந்த ரொனால்டினோவை உலக கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்படவே இல்லை.பிரான்க் ரிபரி மற்றும் பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு  கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இங்கிலாந்த் அணி மிகவும் நம்பி இருந்த ரூனி , தன்னுடைய மோசமான ஆட்டத்தால் இங்கிலாந்த் அணி வெளியேறியது. செல்சே அணியின் சிறந்த வீரரான துரோக்பா தன்னுடைய தாய்நாட்டை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்ல  முடியவில்லை.தற்போதைய உலக சாம்பியன் இத்தாலி அணியின் வீரர் கேன்னவேரோ தன்னுடைய மோசமான தடுப்பு ஆட்டம் காரணமாக வெளியேறினர் (இவர் உலகின் மிகச்சிறந்த தடுப்பு ஆட்டகரர்களில் ஒருவர் ஆவார்).
மற்றும் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பற்ற கிறிஸ்டினா ரொனால்டோ ஸ்பெயின் உடனான ஆட்டத்தின்மூலம் உலக கோப்பையில் இருந்து வெளியேறி உள்ளார்.

அது மட்டும் அல்லாது விளம்பரத்தில் பங்கு பெற்ற டென்னிஸ் வீரர் ரோகேர் பெடரர் தற்போது நடைபெறும் விம்ப்ளேடன் போட்டியில் தோல்வி அடைந்துள்ளார். கூடைபந்து வீரர் கோபே பிரயன் மோசமான  உடல்நிலை காரணமாக தற்போது போட்டிகளில் பங்கேற்க வில்லை.ஏதாவது ஒரு ரூபத்தில் இந்த விளம்பரத்தில் பங்கேற்ற வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த விளம்பரத்தை சபிக்கப்பட்ட (curesed ad) விளம்பரம் என்று அனைவரும் விமர்சிக்கின்றனர்.

-ஜாஸிம் புஹாரி

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha