JASH PHOTOGRAPHY

Sunday, August 8, 2010

படமாகிறது இந்திய, அமீரகக் கலாச்சார உறவு, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் இயக்குனர்



ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் மிக அதிகமான பங்கு இந்தியர்களே என்ற போதிலும் இதுவரை வந்த எந்த இந்தியத் திரைப்படங்களிலும் துபாய் உறவு பற்றி பெரிதாக காண்பித்து விடவில்லை. பாலிவுட் படங்களில் கூட பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் இருக்குமே தவிர படத்தில் இடம் பெரும் காட்சிகள் துபாய் வாழ் இந்தியா மக்களை பற்றி பெரிதாக காட்டிவிடவில்லை. சமீபத்தில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டாலும் சண்டை காட்சிகள், விமான கடத்தல் போன்ற காட்சிகள் தான் அதிகம். அமீரகத்தில் தமிழ் வானொலி மற்றும் எப்.எம் இயங்கி வந்தும், நெறைய தமிழ் சங்கங்கள் இருந்தும் தமிழ் படங்களில் துபையின் முகத்தை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. இது ஒரு புறம் இருக்கையில் இந்தியாவிற்கு வந்து ஒரு அரேபியப் படம் எடுத்தால் எப்படி இருக்கும், அதுவும் இரு நாட்டு நல்வுறவை வளர்க்கும் படம் எடுக்க இருகிறார்கள்.

கடந்த சில வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தின் திரைப்படத்துறை மிகவேகமாக வளர்ந்து வருகிறது. அமீரகத்தை சேர்ந்த நய்லா அல் ஹாஜா என்கிற ஒரு பெண் 'மல்லால்' என்கிற ஒரு படத்தை தென் இந்தியாவில் எடுக்க இருக்கிறார். அரபிய மொழியில் மல்லால் என்றால் போர் (boring) என்று அர்த்தமாம். அமீரகத்தில் திருமணம் ஆன ஒரு பெண் தனது தேன்நிலவு பயணமாக கேரளாவின் மூணாறு பகுதிக்கு செல்கிறாள். சென்ற வருடம் துபாய் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான முதல் பரிசை வென்ற இந்த கதையை அபு தாபியின் டூ போர் 54 (Two four 54) என்கிற நிறுவனம் தாயரிக்க இருக்கிறது. இதை பற்றி அதன் இயக்குனர் கூறுகையில் "இந்திய அமீரகத்தின் கலாசார உறவுகளை பற்றி இதுவரை எந்த படமும் காட்டவில்லை, அமீரகத்தின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு ரொம்ப அதிகம்" என்று கூறுகிறார்.

இது பற்றி நய்லா அல் ஹாஜாவை தொடர்பு கொண்டு பேசுகையில் இதன் படப்பிடிப்பு புனித ரமலான் மாதத்தில் (ஆகஸ்ட் பாதியில்) துவங்கி வரும் டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்

LINK


Friday, June 25, 2010

உலகின் பாதுகாப்பான ரயில் சேவையாக துபாய் மெட்ரோ


உலகின் பாதுகாப்பான ரயில் நிலையமாக துபாய் மெட்ரோ ரயில் தேர்வாகியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் பதினொன்றாம் தேதி துவங்கிய வளைகுடாவின் முதல் ரயில் சேவையான துபாய் மெட்ரோ இன்னும் முழுமையாக சில ரயில் நிலையங்கள் துவங்காத நிலையில் தினமும் ஒரு லட்சத்தி பனிரெண்டு ஆயிரம் பயணிகளை சுமந்து இன்னும் சில சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் மிகுந்த குறைவான குற்றங்களை கொண்ட ரயில் நிலையமாக உள்ளதாக துபாய் காவல் துறையின் பாதுகாப்பு மற்றும் அவரசப்பிரிவின் துணை நிர்வாகி கோலாநெல் அப்துல்லாஹ் அல் கைத் (Colanel Abdullah Al Ghaith) நேற்று செய்தியாளர்களுடன்   தெரிவித்தார். அதாவது பத்து லட்சம் பயணிகளுக்கு 1.6 பயணிகளே திருட்டுக்கு உள்ளாகப் படுவதாக அவர் தெரிவித்தார். இது மிகுந்த வளர்ச்சியடைந்த மற்ற பெரிய நகரங்களை விட மிகக் குறைவானதாம்.  அதாவது பத்து லட்சம் பயணிகளில் பிரிட்டனில் பதிமூன்று பேருக்கும், சிகாக்கோவில் 12.3 பேருக்கும், அட்லாண்டாவில் 7.5 பேருக்கும், போஸ்னியாவில் 5.8 பேருக்கும் திருட்டுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
துபாய் மெட்ரோ ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இரண்டு திருட்டுகள் (இரண்டுமே பிக் பாக்கெட்) நடந்து இருக்கிறது. இந்த இரண்டு சம்பவமும் மிகுந்த கூட்ட நெருக்கடியில் மால் ஆஃப் எமிரேட்ஸ் மற்றும் புர்ஜ் கலிஃபா ரயில் நிலையங்களில் நடந்துள்ளது. ஆனால் சமிபத்தில் எந்த ஒரு தவறும் நடைபெறாததால் மக்கள் மிகுந்த பாதுகாப்பாக கருதுகிறார்கள். துபாய் மெட்ரோவில் திருட்டு போன்ற குற்றங்களை தடுக்க மட்டும் மூவாயிரம் காமெராக்கள் பயன்படுத்தப்படுகிறது.


Monday, June 14, 2010

யாஸ் மரினா சர்கிட், நான்கு சக்கர வாகன போட்டி மைதானம்


யாஸ் மரினா உலக அளவு நான்கு சக்கர வாகன போட்டி ( FORMULA 1 GRAND PRIX ) நடைபெறும் ஒரு இடம் ஆகும் . இது UAE நாட்டின் அபுதாபி நகரில் யாஸ் தீவில் அமைந்துள்ளது. யாஸ் மரினா வளைகுடா நாடுகளில் இரண்டாவது போட்டி இடம் ஆகும் , முதலாவது பஹ்ரைன் நாட்டில் உள்ளது. யாஸ் மரினா ஹெர்மன் டில்கே என்னும் ஜேர்மன் நாட்டு கட்டிடகளை நிபுணரால் வடிவமைக்க பட்டது. இது மொனாகோ ( MONTE CARLO ) பந்தய இடத்தின் அரேபிய மாதிரியாக வடிவமைக பட்டுள்ளது. மொனாகோ பந்தயம் உலகின் மிகசிறந்த நான்கு சக்கர வாகன பந்தய இடம் ஆகும். யாஸ் மரினா செயற்கையாக மற்றும் அழகாக உருவான இடம்.

யாஸ் மரினா சர்கிட் அபுதாபி அரசாங்கத்திற்கு சொந்தமானது . இது அக்டோபர் மாதம் 2009 இல் திறந்து வைக்கபட்டது. இந்த மரினா சர்கிட்இல் 21 கடினமான வளைவுகள் உள்ளது அது பந்தயகாரர்களுக்கு மிகவும் சவாலாக விளங்குகிறது. அகவே இது உலகின் மிக சிறந்த நான்கு சக்கர வாகன பண்டைய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

எதிஹாத் விமான அமைப்பு இதன் ச்போன்செர் ஆகும்.
மக்கள் கொள்ளவு - 41,093
நீளம் - 5.554 KM
வளைவுகள் - 21
பார்முலா 1 அமைப்பு அபுதாபி யாஸ் மரினா வில் எட்டு வருடம் பந்தயம் நிகழ்த்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதை தொடர்ந்து முதல் பார்முலா 1 FORMULA 1 ETIHAD AIRWAYS ABU DHABI GRAND PRIX  போட்டி 30 அக்டோபர் முதல் 01 நவம்பர் 2009வரை நிகழ்ந்தது. அந்த வருடத்தின் கடைசி போட்டியும் அதுவே . இந்த போட்டியில் செபஸ்டியன் வேட்டல் ( SEBASTIAN VETTAL ) என்னும் ரெனால்ட் ( RENAULT ) அணியை சேர்ந்த வீரர் முதல் இடம் பிடித்தார் . இவரை தொடர்ந்து மார்க் வேப்பர் ( MARK WEBBER ) அதே ரெனால்ட் ( RENAULT ) அணி இரண்டாவது இடத்தையும் , ஜசோன் பட்டன் ( JASON BUTTON ) மெர்செடெஸ் ( BRAWN MERCEDES ) அணியை சேர்ந்தவர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 2009 ஆம் வருததின் சாம்பியன் ஆக ஜசோன் பட்டன் தேர்ந்தேடுகபட்டார்.

இந்த வருடத்திற்கான போர்முல 1 எடிஹாத் ஐர்வய்ஸ் அபுதபி கரண்ட் பிரிக்ஸ் ( FORMULA 1 ETIHAD AIRWAYS ABU DHABI GRAND PRIX 2010 ) போட்டி 12 நவம்பர் முதல் 14 நவம்பர் வரை நடக்க உள்ளது .
 -ஜாஸிம் புஹாரி


Sunday, May 30, 2010

அமீரகத்தில் உடம்பை குறைக்கும் கிரீன் டீ, காபிகளுக்கு தடை


ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுசூழல் மற்றும் சுகாதார அமைச்சவையில் உடம்பை குறைக்கும் கிரீன் டீ மற்றும் காபிகளுக்கு இன்று (மே 30, 2010) முதல் தடை விதித்து உள்ளது. லிப்டன் கம்பனின் இவ்வகை டீ, அதன் லேபிளில் குறிப்பிடாத பொருட்கள் அதில் சேர்க்க பட்டுள்ளது என்று இந்த தடையை விதித்து உள்ளது. லாபில் சோதனை செய்து கண்டிபித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 ஓபைத் ஜுமா அல் மற்றௌஷி (Obaid Juma Al Matroushi) , தற்காலிக சுற்றுசூழல் மற்றும் சுகாதார அமைச்சர் இந்த தடையை வெளியிட்டு இதை ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள எல்லா கடைகளிலும் விற்க தடை விதித்து உள்ளார். லேபிளில் குறிப்பிடாத Sibutramine என்கிற கலவையால் உடல் சீக்கிரம் குறைவதோடு பலவிதமான cardiovascular நோய்கள் வர அதிகமாக வாய்ப்புள்ளதாம். அமெரிக்கா லிப்டன் நிறுவனத்தில் தாரிக்கபடும் இந்த வகை டீ, கடந்த வாரம் சவுதி அரேபியாவிலும் இதே போன்று லேபிலில் இல்லாதவைகள் இருந்ததாக தடை விதிக்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அமீரகத்தில் தடை விதித்துள்ள இரு பொருட்கள்: 
லிப்டன் காபி 800

லிப்டன் ஸ்லிம்மிங் பாக் கிரீன் டீ 


Saturday, May 29, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் அதிகரிப்பு




இன்று (மே 29, 2010) சனிக்கிழமை துபாயில் வெளியிட்டுள்ள செய்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் 3.2 சதவீதம் அதிகரித்து உள்ளதாக நாட்டின் நிதி அமைச்சர் சுல்தான் பின் சாயத் அல் மன்சூரி (Sultan bin Saeed Al mansuri) அவர்கள் பத்திரிக்கையாளர்களுடன் தெரிவித்தார். கடந்த ஆண்டு இது 1.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது இருந்தது. இந்த பொருளாதார வளர்ச்சியில் எண்ணெய் இரண்டு முதல் இரண்டரை சதவீதம் உதவியாக இருந்தாக அவர் மேலும் தெரிவித்தார். ஒரு பெரல் 85 அமெரிக்க டாலராக இருந்த எண்ணெயின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 95 அமெரிக்க டாலர் வரை உயர கூடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தில் 29.4 சதவீதம் எண்ணெய் மூலமாகவும்,  71.6 சதவீதம் மற்ற துறையின் மூலம் வருமானம் வருவதாக தெரிவித்தார். 

எண்ணெய் இல்லாத மற்ற துறையால் வருமான சதவீதம்:
16.2 சதவீதம் : உற்பத்தி 
10.7 சதவீதம் : கட்டிடவியல் 
9 சதவீதம் :  மொத்த வியாபாரம், வணிகம்           
8.2 சதவீதம் : ரியல் எஸ்டேட்     
8 சதவீதம் : அரசு  துறைகள்  
7.1 சதவீதம் : போக்குவரத்து, சேமித்தல் மற்றும் தொலைதொடர்பு 
5.8 சதவீதம் : வங்கி மற்றும் மற்ற பொருளாதார துறைகள்   
1.8 சதவீதம் : ஹோட்டல் மற்றும் உணவாக துறைகள் 
1.7 சதவீதம் : விவசாயம், மீன் பிடித்தல் போன்ற துறைகள்  
1.6 சதவீதம் : மின்சாரம், தண்ணீர் போன்ற துறைகள்  


Wednesday, May 26, 2010

ஜெர்மனி-ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிதாக நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்து


ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபு தாபியில் அரசுக்கு சொந்தமான ஏழு நட்சத்திர ஹோட்டல் 'எமிரேட்ஸ் பேலஸ்' (அமீரக மாளிகை என்று பொருள்) வைத்து ஜெர்மானிய சான்ஸளர் ஏஞ்சலா மேர்கேல் அவர்கள் அபு தாபியில் மணிமுடி இளவரசர் ஷேய்க் முஹம்மத் பின் சய்யத்அல் நஹ்யான் அவர்களை கடந்த திங்கள் அன்று (மே 24, 2010) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டிற்க்கும் இடையே நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. கல்வி, மின்சாரம், கலாச்சாரம், பெட்ரோல், அரசியல், சுற்றுலா, பொருளாதாரம் என்று பல துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் இருந்தது என்று தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த இரு நாட்டுக்கும் இடையே உள்ள உறவு இன்னும் பலமாகி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். வளைகுடா நாடுகளின் அமைதி, தொடர்பு மற்றும் உலக நிலவரங்களை பற்றியும் பேசியுள்ளனர். ஜெர்மனி இந்த ஒப்பந்தங்களால் சந்தோஷ படுவதாக தெரிவித்த ஏஞ்சலா மேர்கேல் அமீரகத்தில் தான் தனது நாடு அதிகம் வணிக தொடர்புகள் வைத்துள்ளதை அவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் எண்ணூறு ஜெர்மானியர்கள் தொழில் செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Monday, May 10, 2010

துபாய் மெட்ரோவின் புதிய சாதனை


கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்பதை தேதி துவங்கப்பட்ட துபாய் மெட்ரோ ரயில் போக்குவரர்த்து கடந்த வாரம் ஒரே நாளில் ஒரு லட்சம் பயணிகளை கொண்டு சென்று சாதனை படைத்து உள்ளது. இந்த மாதம், மே இரண்டாம் தேதி (ஞாயிற்றுகிழமை) மட்டும் ஒரு லட்சத்தி முண்ணூற்றி அறுபத்தெட்டு (1,00,368) பயணிகளை கொண்டு சாதனை படைத்து உள்ளதாக துபாய் போக்குவரத்து துறை நிர்வாகி ராமதான் அப்துல்லாஹ் செய்தி வெளியிட்டு உள்ளார். அரபு நாடுகளிலே துபையில் மட்டுமே இப்போதைக்கு ரயில் இருக்கின்றது என்பது சிறப்பு விஷயம்.


Wednesday, April 28, 2010

சர்க்கரை வியாதி தடுக்கஅமீரக பிரதமர் ஆலோசனை


ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேய்க் மொஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் சர்க்கரை வியாதி நாட்டில் தினமும் அதிகரித்து வருவதாகவும் அதை தடுக்க விளையாட்டு ஒன்றே சரியான தீர்வு என்று கூறுகிறார். இதனால் நாட்டில் இன்னும் அதிகமான விளையாட்டுகளை ஊக்குவிற்க்க வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொரு முறையும் உலகளாவிய விளையாட்டு போட்டிகள் அமீரகத்தில் அதிகம் நடததப்படுவதகவும் இதனால் நாட்டின் பெயர் மற்றும் பொருளாதரத்தில் நல்லா முன்னேற்றம் இருப்பதாக குறிப்பிடுகிறார்.  ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கில் ஒரு நபருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக என்பது குறிப்பிடத்தக்கது.  


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha