ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபு தாபியில் அரசுக்கு சொந்தமான ஏழு நட்சத்திர ஹோட்டல் 'எமிரேட்ஸ் பேலஸ்' (அமீரக மாளிகை என்று பொருள்) வைத்து ஜெர்மானிய சான்ஸளர் ஏஞ்சலா மேர்கேல் அவர்கள் அபு தாபியில் மணிமுடி இளவரசர் ஷேய்க் முஹம்மத் பின் சய்யத்அல் நஹ்யான் அவர்களை கடந்த திங்கள் அன்று (மே 24, 2010) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டிற்க்கும் இடையே நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. கல்வி, மின்சாரம், கலாச்சாரம், பெட்ரோல், அரசியல், சுற்றுலா, பொருளாதாரம் என்று பல துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் இருந்தது என்று தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த இரு நாட்டுக்கும் இடையே உள்ள உறவு இன்னும் பலமாகி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். வளைகுடா நாடுகளின் அமைதி, தொடர்பு மற்றும் உலக நிலவரங்களை பற்றியும் பேசியுள்ளனர். ஜெர்மனி இந்த ஒப்பந்தங்களால் சந்தோஷ படுவதாக தெரிவித்த ஏஞ்சலா மேர்கேல் அமீரகத்தில் தான் தனது நாடு அதிகம் வணிக தொடர்புகள் வைத்துள்ளதை அவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் எண்ணூறு ஜெர்மானியர்கள் தொழில் செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Browse: Home > ஜெர்மனி-ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிதாக நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்து
0 Comments:
Post a Comment