கென்யாவின் வட பகுதியில் இருக்கும் மசை மாரா என்கிற இடத்தில ஒரு விவசாயி தனது மூன்று மாடுகளை சிங்கம் கொண்டு தின்றதை பலி தீர்க்கும் விதமாக மூன்று சிங்களுக்கு விஷம் வைத்து கொன்று இருக்கிறார். இதை கேள்விப்பட்டதும் இவரை கென்யா போலீசார் கைது செய்துள்ளனர். கென்யாவில் சிங்கங்களை கொல்வது மிகப்பெரிய குற்றம். ஆப்ரிக்காவின் பல நாடுகள் இதுபோன்ற விலங்குளால் பெருதும் சம்பாதிக்கின்றனர். உலகெங்கும் இதுபோன்ற விலங்குகளை அதிகம் ஆப்பிரிக்காவில் தான் அதிகம் சிற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கென்யா மக்கள் தொகை நான்கு கோடி என்றால், அதன் விலங்குளின் எண்ணிக்கையும் அதே நான்கு கோடியாம். எனவே மக்களுக்கும், விலங்குகளுக்கும் அங்கே பெரிய போட்டியாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருபதாயிரம் இருந்த சிங்கத்தின் எண்ணிக்கை இப்போது இரண்டாயிரம் தான் இருக்கிறதாம். எனவே இது போன்ற கொலைகள் மற்றும் வேட்டையாடுவதை அந்த அரசு கடுமையாக தடுத்து வருகிறது. இதற்காக எண்ணற்ற கருத்தரங்கள் நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment