JASH PHOTOGRAPHY

Sunday, May 16, 2010

லிபியா விமான விபத்தில் உயிர் பிழைத்த சிறுவனும் அவன் தந்தை கடைசியா போஸ்ட் செய்த ப்ளாக் போஸ்டும்



மே 12 , 2010 (புதன்) GMT நேரம் காலை 4 10 க்கு (லிபியா நேரம்: 6.10), தென் ஆபிரிக்க தலைநகர் ஜோஹன்ஸ்பேர்க் இருந்து லிபியா தலைநகர் திரிபோலி சென்ற விமான நிலையம் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த அத்தனை பெரும் பலியாகி ஒரே ஒரு சிறுவன் மட்டும் உயிர் தப்பி உள்ளார். 
103 பேரை பலிகொண்ட இந்த விபத்தில் ரூபன் வான் அச்சௌவ் (Ruben Van Assouw) என்கிற ஒன்பது வயசு டட்ச் சிறுவன் மட்டுமே உயிர் பிழைத்தது கண்டு பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சிறுவன் தனது ௧௧ வயது அண்ணன் மற்றும் பெற்றோருடன் தனது தந்தையின் பனிரெண்டரை வயசு திருமணத்தை கொண்டாட தென் ஆபிரிக்கா சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நடைபெற்றது. (பனிரெண்டரை ஆண்டு திருமண கொண்டாட்டம் டட்ச் மக்களின் வழக்கம்) . 
இவர்கள் பயணம் செய்த ஆஃப்ரிகிய விமானம் ஒரு குறைந்த விலை விமான நிலையம். ஆப்பிகவில் இருந்து ஐரோப்பிய செல்லும் பயணிகள் எல்லாம் லிபியாவில் தொர்பு விமானம் பிடித்து செல்வது வழக்கம். இந்த பயணத்திலும் இவ்வாறு பலர் பயன் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து, லிபியா, பிரிட்டன், ஜெர்மனி, பின்லாந்த், ஜிம்பாப்வே, பிலிபன்ஸ, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ் நாட்டில் வசிபவர்கள் இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக லிபியாவின் போக்குவரத்து அமைச்சர் முஹம்மத் அலி ஜிடான் தெரிவிக்கின்றார்.  விமானத்தில் பனி புரியும் பதினோரு பெரும் கூட இதில் அடங்கும். 

விபத்து நடக்கும் சில கனங்களுக்கு முன்பு அதன் பைலட் அவசர முகாமிற்கு தொர்பு விமானத்தில் சில கோளாறுகள் உள்ளது உடனே உதவி வேண்டும் என்று கேட்டு கொண்டும் எந்த பலனும் இல்லை என்று லிபியா நாளேடு 'குறியிநா' (Quryna) தெரிவித்தது, ஆனால் இது மற்ற எந்த ஊடக செய்துகளும் உறுதி படுத்தவில்லை. 

உயிர் தப்பிய சிறுவன் காலில் ஏற்பட்ட படுகாயத்தில் நாலரை மணி நேரம் ஆபரேஷன் நடைபெற்று குணமாகி வருவதாக லிபியா தொலைகாட்சிகள் செய்தி தெரிவிக்கின்றன. அந்த சிறுவனின் அண்ணன் மற்றும் பெட்ட்றோர் இறந்த செய்தியை இன்னும் தெரிய படுத்த நிலையில் அந்த சிறுவனின் மாமா மற்றும் அத்தை ஹாலந்தில் இருந்து வந்து அந்த சிறுவனையும் அங்கு கொண்ட செல்ல இருகின்றனர். 

தென் ஆப்ரிக்கா சென்றதும் அங்கு சந்தோசமாக கொண்டாடியதும் அந்த சிறுவனின் தந்தை தனது ப்ளோகில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் கடைசியாக மே பத்தாம் தேதி போஸ்ட் செய்துள்ளார். அவரின் ப்ளாக்-ஐ இங்கே கிளிக் செய்து பார்க்கவும்

லிபியா நாளேட்டின் செய்தி (அரபி) _ இங்கே சொடுக்கவும் 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

2 Comments:

Arun said...

தகவளுக்கு நன்றி ஜாப்.... இரவு நேரம் வேளைக்கு செல்வதால் உலக நிகழ்வுகள் ஒன்றுமே தெரியவில்லை.. உங்கள் இந்த தகவல் மிக உதவியாக இருந்தது....

Flint said...

தங்களின் கருத்துக்கு நன்றி அருண், தொடர்ந்து படித்து வாருங்கள்

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha