ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுசூழல் மற்றும் சுகாதார அமைச்சவையில் உடம்பை குறைக்கும் கிரீன் டீ மற்றும் காபிகளுக்கு இன்று (மே 30, 2010) முதல் தடை விதித்து உள்ளது. லிப்டன் கம்பனின் இவ்வகை டீ, அதன் லேபிளில் குறிப்பிடாத பொருட்கள் அதில் சேர்க்க பட்டுள்ளது என்று இந்த தடையை விதித்து உள்ளது. லாபில் சோதனை செய்து கண்டிபித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓபைத் ஜுமா அல் மற்றௌஷி (Obaid Juma Al Matroushi) , தற்காலிக சுற்றுசூழல் மற்றும் சுகாதார அமைச்சர் இந்த தடையை வெளியிட்டு இதை ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள எல்லா கடைகளிலும் விற்க தடை விதித்து உள்ளார். லேபிளில் குறிப்பிடாத Sibutramine என்கிற கலவையால் உடல் சீக்கிரம் குறைவதோடு பலவிதமான cardiovascular நோய்கள் வர அதிகமாக வாய்ப்புள்ளதாம். அமெரிக்கா லிப்டன் நிறுவனத்தில் தாரிக்கபடும் இந்த வகை டீ, கடந்த வாரம் சவுதி அரேபியாவிலும் இதே போன்று லேபிலில் இல்லாதவைகள் இருந்ததாக தடை விதிக்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் தடை விதித்துள்ள இரு பொருட்கள்:
லிப்டன் காபி 800
லிப்டன் ஸ்லிம்மிங் பாக் கிரீன் டீ
0 Comments:
Post a Comment