கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..
வாரம் தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரோ
உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உடைத்தும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாலே ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
Browse: Home > மணி ரத்னம் + ஏ.ஆர்.ரஹ்மான் + வைரமுத்து
Sunday, May 9, 2010
மணி ரத்னம் + ஏ.ஆர்.ரஹ்மான் + வைரமுத்து
இந்த கூட்டணி இதுவரை இணைத்த எல்லா பாடல்களும் வெற்றி தான். இவர்களின் 'ரோஜா' மற்றும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' சிறந்த பாடல் ஆசிரியர் , சிறந்த இசை அமைப்பாளர் போன்ற பிரிவுகளுக்கு தேசிய விருதுகளை பெற்று தந்தது. இந்த பாடலின் வரிகள் இங்கே...
Labels: ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ், தமிழ் சினிமா, வைரமுத்து, ஸ்ரேயா கோஷல்
0 Comments:
Post a Comment