JASH PHOTOGRAPHY

Tuesday, May 18, 2010

செம்மொழி பாடலை பாடியவர்கள்


செம்மொழி பாடலை பாடியவர்கள்:




A. R. ரஹ்மான்  


T. M. சௌந்தராஜன்  


T. L. மகாராஜன்  


P. சுஷீலா   


ஹரிஹரன்  


நித்யஸ்ரீ  மகாதேவன்  


சின்ன  பொண்ணு  


ஸ்ரீநிவாஸ்  


ப்ளாஷி   


கார்த்திக்  


நரேஷ் ஐயர்   


சின்மயி
சவீதா மோகன்  


ஹரிணி  


ஸ்ருதி  ஹாசன்  


யுவன்  ஷங்கர்  ராஜா  


விஜய் யேசுதாஸ்  


குணசேகரன்  


T. M. கிருஷ்ணன்  


அருணா  சாய்ராம்  


சௌம்யா  


G. V. பிரகாஷ்  


ரைஹானா 


சுஷீலா ராமன்  


காஷ் 

பாம்பே ஜெயஸ்ரீ  


நாகூர் சகோதரர்கள்

பின்ணனி குரல்கள் 



நேஹா  


உஜ்ஜைநீ  


தேவன்  


சரிசி  


நிதின் ராஜ்  


சகித்  


R. விஜய் நாராயண்  


DR. நாராயண்  


பாக்யராஜ்  


சுபிக்ஷா  


அனிதா  


K. ரேணு  


மாயா  ஸ்ரீசரண்  


கல்யாணி 


ரகீப் ஆலம்


Sunday, May 16, 2010

தமிழ் செம்மொழி மாநாடு பாடல்


கலைஞர் கருணாநதி வரிகளுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த உலக தமிழ் செம்மொழி மாநாடு பாடலை டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்.

இந்த பாடலை பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக் , ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன் மற்றும் பலர் .. 


பாடல் வரிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்..  


Sunday, May 9, 2010

மணி ரத்னம் + ஏ.ஆர்.ரஹ்மான் + வைரமுத்து



இந்த கூட்டணி இதுவரை இணைத்த எல்லா பாடல்களும் வெற்றி தான். இவர்களின் 'ரோஜா' மற்றும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' சிறந்த பாடல் ஆசிரியர் , சிறந்த இசை அமைப்பாளர் போன்ற பிரிவுகளுக்கு தேசிய விருதுகளை பெற்று தந்தது. இந்த பாடலின் வரிகள் இங்கே...

ள்வரே கள்வரே
ள்வரே கள்வரே
ண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
ண்கொண்டு சேரீரோ
லை சொல்லி தாரீரோ
உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..
வாரம் தோறும் அழகின்  பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரோ
உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உடைத்தும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாலே ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா
ள்வரே கள்வரே
ள்வரே கள்வரே
ண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
ண்கொண்டு சேரீரோ
லை சொல்லி தாரீரோ
ள்வரே கள்வரே
ள்வரே கள்வரே
ண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
ண்கொண்டு சேரீரோ
லை சொல்லி தாரீரோ


Tuesday, May 4, 2010

வைரமுத்து வரிகளுக்கு ஸ்ரேயா கோஷல்


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய தமிழ் பாடல்.. 


வாலி வரிகளுக்கு முன்பே வா..


தாமரை வரிகளுக்கு மன்னிப்பாயா..


வைரமுத்து வரிகளுக்கு கள்வரே.. 


கள்வரே.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல்


நாளை வெளிவர இருக்கும் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணியின் ராவணன் பட பாடல், இதன் ஹிந்தி பதிப்பான ராவண் ஒரு வாரம் முன்பே வெளியான நிலையில் அதே இசைக்கு தமிழ் வரிகள் கொண்ட பாடல் வெளியாவது நாளை தான். முன்பே வா(Munbe Vaa), மன்னிப்பாயா(Mannipaya) என்று பல வெற்றி பாடல்களை தந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்களை பற்றி இதே ப்ளோகில் நெறைய படித்து இருப்பீர்கள். அதே அனுபவத்தை தருகிறது ராவண் பட பாடலான 'கள்வரே', வைரமுத்துவின் வரிகளை சொல்லவா வேண்டும், சிகரங்கள் தொடவிருக்கும் இந்த இனிய பாடல் விடிந்தால் உலகிற்கு வெளிவர இருக்கிறது. இன்றே என் தூக்கத்தை தூங்க வைத்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் பேஸ்புக்-இல் போட்ட அரை மணி நேரத்தில் இந்த பாடலை பற்றி எழுதி உள்ளேன். நன்றி ஏ.ஆர்.ரஹ்மான்!


Thursday, April 22, 2010

ஐ.பி.எல் இறுதி போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்



உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய விருந்தான ஐ.பி.எல் வருகிற ஏப்ரல் இருபத்தைந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. இறுதி போட்டியின் முடிவில் இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்க இருக்கிறார். ஏற்கனவே அறிவித்த படி மணிரத்னம் இயக்கிய ராவண் படத்தின் இசை ஏப்ரல் இருபத்தி நாலாம் தேதி நவி மும்பையிலுள்ள பட்டில் மைதானத்தில் வெளிவர இருக்கிற நிலையில், அதற்கு மறுநாள்   ஐ.பி.எல்  நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறார். ஏப்ரல் இருபத்தி நாலாம் தேதி நடக்கவிருக்கும் பாடல் வெளியீட்டு விழாவில் ராவண் பட குழுவினர்களும், மொத்த பச்சன் குடும்பமும் கலந்து கொள்ள இருக்கிறது. கடந்த வருடம் ஆஸ்கார் வென்றபின் மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் முதல் நேரடி ஒளிபரப்பு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது இதுவும் ஆஸ்கார் விருதை போல ஒரே நேரத்தில் இரண்டு விருதுகள் அவரின் மும்பை ரசிகர்களுக்கு.


Wednesday, February 3, 2010

ஏ.ஆர்.ரஹ்மானால் தமிழகம் பெருமிதம் கொள்கிறது: கலைஞர் கருணாநதி


இசை துறையில் உலகின் மிகச்சிறந்த விருதான கிராமி விருதை தமிழகத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியதற்கு தமிழக முதலமைச்சர் அமைச்சர் கலைஞர் கருணாநதி வாழ்த்து செய்து அனுப்பி பாராட்டி உள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில்...

"புகழ் மிக்க கிராமி விருதுகளை பெற நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இசைத்துறையின் மிக உயர்ந்த விருதை தமிழகத்தின் புதல்வனான நீங்கள் பெற்றிருக்கும் மகத்தான நிகழ்வை நினைத்து தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

இசைத்துறையில் சிகரத்தை தொட்டு இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அனுப்பி உள்ளார்.


Friday, January 29, 2010

கலைஞர் கருணாநதி பாடல் வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை







கலைஞர் கருணாநதி அவர்கள் தமிழ் செம்மொழி மாநாட்டை விவரிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதயுள்ளர். அந்த பாடலை ஆஸ்கார் மேடையில் தமிழ் பேசி பெருமை சேர்த்த இசை புயல் எ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார். முதல்வர் கலைஞர் கருணாநதியின் இல்லத்தில் இதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் ஒரு புதிய தமிழ் பாடல், அதுவும் தமிழின் பெருமை விவரிக்கும் பாடல் உலக புகழ் பெற இருக்கிறது.


தமிழக முதல்வர் கலைஞர் கருணாநதி எழுதிய அந்த பாடல் வரிகள் இதோ :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha