JASH PHOTOGRAPHY

Friday, January 29, 2010

கலைஞர் கருணாநதி பாடல் வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை







கலைஞர் கருணாநதி அவர்கள் தமிழ் செம்மொழி மாநாட்டை விவரிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதயுள்ளர். அந்த பாடலை ஆஸ்கார் மேடையில் தமிழ் பேசி பெருமை சேர்த்த இசை புயல் எ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார். முதல்வர் கலைஞர் கருணாநதியின் இல்லத்தில் இதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் ஒரு புதிய தமிழ் பாடல், அதுவும் தமிழின் பெருமை விவரிக்கும் பாடல் உலக புகழ் பெற இருக்கிறது.


தமிழக முதல்வர் கலைஞர் கருணாநதி எழுதிய அந்த பாடல் வரிகள் இதோ :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha