உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய விருந்தான ஐ.பி.எல் வருகிற ஏப்ரல் இருபத்தைந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. இறுதி போட்டியின் முடிவில் இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்க இருக்கிறார். ஏற்கனவே அறிவித்த படி மணிரத்னம் இயக்கிய ராவண் படத்தின் இசை ஏப்ரல் இருபத்தி நாலாம் தேதி நவி மும்பையிலுள்ள பட்டில் மைதானத்தில் வெளிவர இருக்கிற நிலையில், அதற்கு மறுநாள் ஐ.பி.எல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறார். ஏப்ரல் இருபத்தி நாலாம் தேதி நடக்கவிருக்கும் பாடல் வெளியீட்டு விழாவில் ராவண் பட குழுவினர்களும், மொத்த பச்சன் குடும்பமும் கலந்து கொள்ள இருக்கிறது. கடந்த வருடம் ஆஸ்கார் வென்றபின் மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் முதல் நேரடி ஒளிபரப்பு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது இதுவும் ஆஸ்கார் விருதை போல ஒரே நேரத்தில் இரண்டு விருதுகள் அவரின் மும்பை ரசிகர்களுக்கு.
0 Comments:
Post a Comment