ஸ்கைட்ரக்ஸ்(SKYTRAX ) - உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் சிறந்து விழங்கும் விமான நிலையங்களில் பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் சுத்தம், மக்கள் அதிகம் வருவது, பாதுகாப்பு, ட்ரான்சிட், உணவு என பல துறைகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த விமான நிலையங்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். இது இன்னும் ஒவ்வொரு நாட்டின், கண்டத்தின் சிறந்த விமான நிலைத்திருக்கும் விருதளித்து வருகிறது. இந்த வருடமான 2010 இல் உலகிலேயே அதிகம் முன்னேறிய, அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக பல வழிகளில் முன்னேறிய சிறந்த மூன்று இடத்தில அபு தாபி முதல் இடத்திற்கான விருதை வென்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 47 புதிய இடங்களுக்கு சேவைகளை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வளைகுடாவில் உள்ள பல்வேறு விமானங்களில் இரண்டாவது சிறந்த விமான நிலையமான அபு தாபியின் இந்த விருதை அபு தாபி விமான நிலையத்தின் Chairman H.E.கலிபா அல் மஸ்ரூயி (H.E.KALIFA AL MAZROUEI) வாங்கினார்.
வளைகுடாவின் சிறந்த விமான நிலையங்கள்(2010):
முதலிடத்தில்... பஹ்ரைன் விமான நிலையம்
இரண்டாவது இடத்தில... அபு தாபி விமான நிலையம்
மூன்றாவது இடத்தில... துபாய் விமான நிலையம்
2010இல் அதிகம் முன்னேறிய விமான நிலையங்கள்:
முதலிடத்தில்... அபு தாபி விமான நிலையம்
இரண்டாவது இடத்தில... ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையம்
மூன்றாவது இடத்தில... கைரோ விமான நிலையம்
0 Comments:
Post a Comment