நிந்தவூர் ஷிப்ல்யின் பெயர் இடப்படாத ஒரு கவிதை தொகுப்பு நூலை பிளின்ட் பதிப்பகத்தில் வெளியிடுவதற்கு இருந்த ஒரு காலகட்டத்தில் நான் தொடர்பு கொண்ட நபர்களில் ஒருவர் 'சாஹிப் ஷாசத் கான் (Zohaib Shahzad khan) பாகிஸ்தானியர். இலங்கையை சேர்த்த நிந்தவூர் ஷிப்லியின் எழுத்துக்கு ஜெர்மனியின் பாலினோ தோரோபீவ் தான் எல்லா படங்களும் வரைவதாக இருந்து பின்னர் சில படங்கள் மட்டுமே வரைய முடிந்த நிலையில் சாஹிப்பை முன் அட்டையை வடிவமைக்க தொடர்பு கொண்டு இருந்தேன். அவரும் என்னை போல அபு தாபியில் தான் வசித்து வந்தாலும் நாங்கள் சந்தித்தது இல்லை. எப்படி அவர் பழக்கம் கிடைத்தது என்று சரியாய் ஞாபகம் இல்லை. நாங்களும் பெயரை சரியாய் முடிவு பண்ணாத காலம் என்பதால் எழுத்தாளர் பெயரான நிந்தவூர் ஷிப்ல்யின் பிளின்ட் புக் என்றே சொல்வர் அவர். சில முறை தொலைபேசியில் பேசி இருப்போம், மற்றதெல்லாம் இமெயிலில் தான் பேசி கொள்வோம். கடைசில் அவர் வெறும் முன் அட்டைக்கு மட்டும் வடிவமைக்க பெரிய தொகை கேட்டதால் அவரை நானும் ஷிப்ல்யும் இந்த புத்தகத்திற்கு வேண்டாம் என்று விட்டு விட்டோம். ஆனாலும் அவர் வரும்காலங்களில் வரும் புத்தகமோ அல்லது ஒரு குறும்படத்திருக்கோ சேர்த்து பனி செய்யலாம் என்று இருந்து விட்டார். பிறகு நங்கள் ஷிப்ல்யின் அந்த தொகுப்புக்கு தற்கொலை குறிப்பு என்று பெயர் இட்டு இன்றுவரையும் வெளிவராமல் விரைவில் வெளியிட ஏற்படுள்ள இந்த நிலையும் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் விண்டோஸ் லைவ் மெசன்ஜெரில் தொடர்பு கொண்டார். ஷிப்லியின் பிளின்ட் புக் என்ன ஆச்சு? நன்றாக வெளியானதா என்றார், எனக்கு சரியாக நினைவிற்கு வரவில்லை அவர் யார் என்று. அவரை சுத்தமாக மறந்து விட்டேன். ஏனென்றால் இரு வருடம் நிறைவடைந்து விட்டது இந்த புத்தகம் வெளியிடும் வேலை தொடங்கி. அதுவும் புத்தகத்தின் எல்லா பணிகளும் முடிந்தும் கூட வெளியிடாமல் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. கொஞ்ச நேரத்திற்கு பிறகே கண்டுபிடித்தேன் அவரும் கூட நாம் அதிகம் பேசியதில்லை உங்களுக்கு உடனே தெரிஞ்சிருக்க வாய்ப்பும் இல்லை என்றார். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு இனிமே உங்களை ஞாபகம் இருக்கும் கண்டுபிடித்து விடலாம் என்றேன். சில உரையாடல்களில் பெரிதாக பேசாமல் சென்று விட்டேன் எதோ ஒரு வேலையால். சரி என்று சில நாள் கழித்து பேஸ்புக் சென்று அவர் ப்ரோபைல் சென்று 'உங்கள் வடிவைக்கும் பனி எப்படி போகுது என்று மெசேஜ் அனுப்பினேன். ஏதோ ஒரு உறுத்தல் மறுபடியும் அவர் ப்ரோபைல் சென்றேன், நெறைய வால் வந்து குமிந்து இருந்தது, அதிலெல்லாம் ஒரே அதிர்ச்சி எல்லாரும் 'நீ என் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்", "உன் சிரிப்பை மிஸ் பண்றோம்", "உனக்கு அமைதி நிலவட்டும்", "மறுபடியும் வா, வந்து என்ன அச்சுன்னு சொல்லு", "உன்னை என்றும் மறக்க முடியாது" இவ்வாறு நிறைய மெசேஜ். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது. ஒருவர் "உன் திடீர் மரணத்தை நாங்கள் எதிர் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் பதில் சாஹைபிடம் இருந்து வந்து இருந்தது, அவரின் நெருங்கியவர யாரும் இருந்து இருப்பாங்களா இல்லை இவருக்கே ஏதும் ஆனதா, ஒன்றும் புரியவில்லை.
ஏன்னா சிலவற்றிருக்கு அவரிடமே பதிலும் வந்து இருந்த்தது. நான் மறுபடியும் அவருக்கு என்ன அச்சு என்று மெசேஜ் அனுப்பினேன். யாரவது பதில் சொல்வார்கள் என்று. மறுநாள் பதில் வந்தது அவர் கடந்த மாதம் இறந்துவிட்டார், ஹார்ட் அட்டாக் என்று. அதிர்ச்சி அடைந்த நான் சொன்னேன் அவர் கூட சமீபத்தில் பேசினேன் என்று, அதற்கும் பதில் வந்தது மறுநாள் என் வாலில் 'மார்ச் 7 , 2010 இல் அவர் இறந்து விட்டார், நான் அவர் மனைவி என்று. இன்று வரை அவர் வாலில் அடிக்கடி நெறைய மெசேஜ் வருது "என் வாழ்வில் வந்தமைக்கு நன்றி" என்று. அவர் திருமணம் முடிந்து வாழ்த்த ஒரே வருடத்தில் அவருக்கு ஒரு குழதையும் பிறந்து இருக்கிறது, அதற்கு அங்கே மெசேஜ் இருந்தது, "என் வாழ்வில் வந்தமைக்கும், அதற்கு பரிசு தந்து விட்டு போனதற்கும்" என்று. இது தான் உண்மையான காதல். அவரிடம் மேலும் விசாரிக்க மனம் இல்லை எனக்கு. ஆனால் சென்று விட்ட அன்பை நினைத்து வாழும் அவருக்கு இறைவன் வாழ்கையில் அமைதியும் சந்தோசமும் தருவான் என்று பிராத்தனை செய்வோம். சாஹைபிற்காகவும் பிராத்தனை செய்வோம்.
-ஜாஃபர் ஷாதிக்
0 Comments:
Post a Comment