இந்த தலைமுறையின் மிகப்பெரிய வளர்ச்சி கணிபொறியும், மொபைல் போன்களும். இந்த இரண்டும் இன்றைய மக்களின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் பேஸ்புக் கூட இந்த இந்த இடத்திற்கு வந்துவிடும் போல, லொள். மீட் மார்கோ கலாசன் (Meet Marko Calason) என்கிற ஒன்பது வயது சிறுவன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நான்கு சான்றிதழ் வாங்கி உள்ளார். வெறும் ஏழு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான மாசேடோனியா (Mocedonia) என்கிற நாட்டை சேர்ந்தவரான இந்த சிறுவன் தனது ஆறாவது வயதில் முதல் மைக்ரோசாப்ட் சான்றிதழை வென்று உலகின் சிறிய வயதில் இந்த சான்றிதழ் வாங்கிய சிறுவன் என்கிற பெருமையை பெற்றார். இப்போது நான்கு முறை வென்று இருக்கிறார் தனது ஒன்பது வயதில் என்பது குறிப்பிடதக்கது. இந்த சிறுவன் தனது மூன்றாவது வயதிலேயே கணிப்பொறியில் சின்ன சின்ன வேலைகள் செய்ய துவங்கினாராம். அதாவது விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது, ரிமோட் டெஸ்க்டாப் போன்றவை பல முறை உபயோக்கிக்க ஆரம்பித்தாராம். இன்றைய சிறு குழந்தைகள் கணிபொறி என்றால் கேம்ஸ் விளையாடுவதும், பேஸ்புக் போன்ற வெப்சைட்களும் தான் அதிகம் பயன்படுத்துவர். ஆனால் இவர் ஈமெயில் பண்ணுவது, பைல்களை ஷேர் பண்ணுவது இன்னும் ரோபோட் தயாரிப்பது போன்றவற்றிலே ஆர்வமாக இருந்தார் என்று சொல்கிறார். MCP, MCDST, MCSA மற்றும் MCSE போன்ற சான்றிதழ் வென்றுள்ள இந்த சிறுவன் தினமும் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் வரை கூட கணிப்பொறியை பயன்படுத்துகிறாராம். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த சிறுவன் இன்று நூற்றுகணக்கானவர்களுக்கு கண்ணிபொறி சொல்லியும் கொடுக்கிறார்.
Browse: Home > ஒன்பது வயதில் நான்கு மைக்ரோசாப்ட் சான்றிதழ் வென்று சாதனை
1 Comment:
thts gr8 kid!!
Post a Comment