ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபி மாநிலம் தான் அந்த நாட்டின் 86 .7 சதவீதம் நிலபரப்பை கொண்டு இருந்தாலும் அபு தாபி நகர் துபாய் அளவு பெரியது அல்ல. அபு தாபியை தவிர்த்த மற்ற பகுதிகள், ஏன் 95 % பாலைவனமாகத் தான் இன்னும் உள்ளது. ஆனால் இப்போது யாஸ், சாதியத், பூ தினா, சமாலியா, அல் ரீம் என பல ஐலாண்டுகள் வருகின்றது. ஆனால் இப்பொது அபு தாபியை அடுத்து கொஞ்சம் பிரபலம் (அதாவது மக்கள் அதிகம் புழங்கும் இடம்) என்றால் முச்சப்பாஹ் தான். இதை ஓட்டியுள்ள மதினாத் சய்யத், கலிபா சிட்டி போன்றவை மிக வேகமா பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஷாப்பிங் மால்கள் வருவதில் போட்டி இல்லாமல் இருக்குமா? 'மஷ்யாத் மால்' என்கிற பெயரில் முச்சபாஹ் லேபர் கேம்ப் பக்கமான பாத்திமா சூப்பர் மார்க்கெட் மட்டுமே அறிந்திருந்த இடத்தில இப்போது ஒரு நட்சத்திர ஹோட்டல், மால் என்று பல கட்டிடங்கள் வந்துகொண்டே இருக்கிறது. முன்பு சபீர் மால் மட்டுமே அறிந்திருந்த முச்சப்பாஹ் அதை சுற்றி இப்போது கட்டிடங்கள் சூழ்ந்து உள்ள நிலையில் டெல்மா மால் என்று புதிதாய் ஒரு மால் கேர்ரிபோர் உடன் சேர்த்து வருவதால் மஷ்யாத் மாலில் உள்ள லூ லூவிற்கும் போட்டி. லூ லூ அமைத்துள்ள அதே கட்டிடத்தில் தான் எத்திஹாத் போன்ற பெரிய கம்பெனி ஆட்களும் தங்கியுள்ள இடம் என்பதால் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்த வரை சூப்பர் மார்க்கெட்டில் மிகப்பெரிய இரண்டு கம்பெனிகளில் ஒன்றான லூ லூ அமைத்துள்ள மஷ்யாத் மால் அழகான விளக்குகளால் அலங்கரிக்க படுவதை மேலேயுள்ள படத்தில் பார்க்கலாம். நேற்று இரவு மஷ்யாத் மால் சென்ற பாத்து நான் எடுத்த படங்கள் இவை.
0 Comments:
Post a Comment