மின்னலே,
காக்க காக்க,
வேட்டையாடு விளையாடு,
பச்சைக்கிளி முத்துசரம்,
வாரணம் ஆயிரம் படங்களை எடுத்த கௌதம் மேனன் இயக்கிய ஆறாவது தமிழ் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.
இது போக இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரு படம் எடுத்து இருந்தார்.
மணி ரத்னத்தின் பல வழிகளை பயன்படுத்தும் கௌதம் மேனன். அவரை போல படங்களில் ரயில் காட்சிகள், ஓரிரு வார்த்தைகளில் வசனங்கள் பேசுவது என நூறு காரனங்கள் சொல்லலாம். அதே போல ஒரே நேரத்தில் ஒரே கதையை இரு மொழிகளில் எடுக்கும் பழக்கத்தையும் தொடங்கிவிட்டார்.
விண்ணைத்தாண்டி வருவாயா எடுத்த அதே நேரத்தில் இதே கதையை தெலுங்கிலும் 'ஏ மாய சீசாவே' ('என்ன மாயம் செய்தாய்' என்று பொருள்)
முதல் முறையாக ஒரு தமிழ் படத்தின் பாடல் வெளியீடு வெளிநாட்டில் வெளியானது இந்த படத்தின் பாடல்களே. ப்ரிடிஷின் மிக உயர்ந்த விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் இசை என்பதால் லண்டனில் வெளியானது.
படத்தில் சிம்பு எடுக்கும் படமான 'ஜெஸ்ஸி'யின் நாயகனாக நடித்த நாக சித்தான்யா தான் இதன் தெலுங்கு பதிப்பின் கதாநாயகன். அதே படத்தில் நாயகியாய் நடித்த சமந்தா ருத் பிரபுவும் தெலுங்கு படத்தின் கதாநாயகி.
ஏ மாய சீசாவே என்கிற தெலுங்கு படத்தில் அந்த கதாநாயகன் எடுக்கும் 'ஜெஸ்ஸி' என்கிற படத்தின் நடிகர்களாக சிம்பு மற்றும் த்ரிஷா நடித்து உள்ளனர்.
ஆனால் தெலுங்கு படத்தில் இருவரும் சேர்ந்து விடுவது போல படத்தின் கிளைமாக்ஸ் அமைத்து உள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் அவர்களே 'ஒமானே பெண்ணே' பாடலின் இடையில் வரும் மலையாள வரிகளை எழுதியுள்ளார்.
22 வருடம் மலையாள சினிமாக்களில் பாடல்கள் எழுதி வந்த கைத்தபுரம் தாமோதரன் இந்த படத்தில் வரும் முழு மலையாள பாடலான 'ஆரோமலே'வின் பாடல் ஆசிரியர். இவருக்கு இசை அமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், நடிகர் என பல முகங்கள் உண்டு. இசைத் துறையில் இவர் எண்ணத்ற்ற விருதுகளையும் குவித்த்துள்ளர்.
இந்த இரண்டு மலையாள பாடல்களும் தெலுங்கு படத்தில் அப்படியே இடம்பெற்று உள்ளது.
இதுவும் கூட மணி ரத்னம் எடுத்த ஹிந்தி படமான 'தில் சே'வில் வரும் பாடலை தமிழில் நெஞ்சினிலே என்று எடுக்கும் பொது அதே மலையாள வரிகளை அப்படியே பயன்படுத்தி இருப்பார். அதே ஸ்டைல், (லொள்)
முதல் மூன்று நாளில் சென்னையில் மட்டும் இதன் வசூல் 64.66 லட்சம் ரூபாய்

முதல் ஐந்து வாரத்தில் சென்னை மற்றும் அதன் சார்ந்த பகுதிகளில் இந்த படத்தின் வசூல் 5.௧௩ கோடி
சிம்பு நடித்த படங்களிலே மிக அதிகமான வசூல் பெற்றுள்ளது
படத்தில் கதாநாயகன் எடுக்கும் படமான 'ஜெஸ்ஸி'யின் நாயகனாகவும் தெலுங்கு பதிப்பான 'ஏ மாய சீசாவே' படத்தின் நாயகருமான 'நாக சித்தான்யா' பிரபல நடிகர் நகர்ஜுனாவின் மகன் (ரட்சகன், இதயத்தை திருடாதே போன்ற படங்களால் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர்)
0 Comments:
Post a Comment