JASH PHOTOGRAPHY

Monday, April 26, 2010

அபு தாபி முசப்பாஹ்வில் எனக்கு பிடித்த பத்து உணவகங்கள் (MY FAVOURITE TEN RESTAURENTS OF MUSSAFAH, ABU DHABI )


ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்த வரையில் முக்கிய நகரங்களான துபாய் மற்றும் அபு தாபியில் உலகத்தின் முக்கியமான எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும் உணவகங்கள் ஏராளம் இருக்கின்றது. அதிலும் துபையில் தமிழ் நாட்டு உணவுகளுக்கென்றே ஒரு ஊரே இருக்கின்றது எனலாம் போல. சரவணா பவன், ஆப்பக்கடை, செட்டிநாடு ஆரம்பித்து மதுரை அப்பு, புஹாரி வரை எல்லா விதமான உணவகங்களும் இங்கு ஒரு கிளை தொடங்கி வைத்திருப்பார்கள். துபாய் அளவு இல்லை என்றாலும் அபு தாபியில் ஓரளவு வகைகள் உண்டு, அதிலும் முசப்பாஹ்வில் இன்னும் கொஞ்சம் கம்மி தான். ஆனால் வெறும் முசப்பாஹ்வை மட்டும் பார்த்தாலே எண்ணற்ற உணவகங்கள். இந்திய, அரபி ஆரம்பித்து பல வைகள் உண்டு, முசப்பாஹ்வில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் உணவகங்கள் இருக்கின்றது. அவை மெரிட், சென்னை, வாபா, சவுத் இந்தியன், டாரின் என்று பெரிய லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். 


கடந்த மூன்று வாரத்திற்கு மேலே இந்த முசப்பாஹ்வில் வசித்து வரும் நான் அதிகம் செல்லும் மற்றும் எனக்கு அதிகம் பிடித்த முதல் பத்து உணவகங்கள் இங்கே உங்களுடன் பகிர்த்து கொள்ள இருக்கிறேன். 

10  அபு நசியாஹ் ரெஸ்டாரெண்ட் 
(ABU NAZIYAH RESTAURENT):
 நான் முசப்பாஹ் வந்த புதிதில் அதிகம் ரசித்த உணவகம் இது. மிஸ்ரிகாரரின் கடை (இங்கே எகிப்து நாட்டவரை இவ்வாறு அழைப்பதே வழக்கம்). மூன்று வருடத்திற்கு முன்பு இந்த கடையை தேடியே முசப்பாஹ் வரும் அளவு இந்த கடையை இஷ்டமா இருந்தது அப்போது. இன்று வரை பிலாபில் (FALAFEL)க்கு சிறந்த கடை இது எனலாம். இங்கு கிடைக்கும் பிலாபில் ஒரு மாதிரி கீரை கலந்த மாதிரி இருக்கும். பிலாபில் பற்றி தெரியாதவர்களுக்கு... பிலாபில் என்பது நம்ம ஊரு வடை மாதிரி, சாதரணமா தெருவில் கிடைக்கும் பொருள். சில கடைகளில் பார்சல் வாங்க வந்தாலே சும்மா வெயிட் பண்ணுற வரை உண்ண தருவார்கள். அரபிக் உணவில் பிரபலமடைத்த இந்த பிலாபில் பின்னர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவிலும் பிரபலம் அடைந்தது. எந்தவித அசைவமும் கலக்காத முழு சைவம் இது.  

9 மெரிட் ரெஸ்டாரெண்ட் 
(MERIT RESTAURENT): 
நான் தங்கி இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் தமிழ் நாட்டு உணவகம் இது. நாகபட்டினத்தை சேர்த்தவர்கள் நடத்தும் இந்த உணவகம் கடந்த சில வருடங்களாக தமிழர்களுக்கு மத்தியில் ரொம்ப பிரபலம். நம்ம ஊரில் கிடைக்கும் சுவையை இங்கு தேடலாம். கொத்து பரோட்டா, ஊத்தப்பம், இட்லி, தோசை, பொங்கல், வடை, இடியாப்பம் என்று எல்லா தமிழக உணவகத்தில் கிடைக்கும் சுவை இங்கே உண்டு. ஆனால் இங்கே மலையாளிகள், வட இந்திர்யர்கள் மற்றுமின்றி மற்ற நாட்டவர்களும் அதிகம் உண்டு. நான் இங்கு அடிக்கடி செல்லவது எதற்கு என்றால், ஊரை போல இங்கு அக்கௌன்ட் (கணக்கு) வைத்து கொண்டு சாப்பிட்டு மொத்தமாக கொடுத்து விடலாம் பில்களை. 

8 . அல் ஷாம் பேலஸ் கபேதேரியா 
(AL SHAAM PALACE CAFETERIA): 
இது ஒரு  சூரி உணவகம். சிரியா நாட்டவர்களை சூரி என்று தான் அரபியர்கள் அழைப்பார்கள். இந்த கடையில் கிடைக்கும் ஷவர்மா(Shawarma) கொஞ்சம் வித்தியாசமான சுவையாக இருக்கும். 


7. ஹாட் ப்ளேட் 
(HOT PLATE):  

அமீரக இந்தியர்களில் மலையாளிகள், தமிழர்களுக்கு போட்டியாக இங்கே மங்களூர்காரர்களும் அதிகம் உண்டு.   இது ஒரு மங்களூர்காரரின் உணவகம் தான். இங்கே அரபிக், சீனா மட்டும் இந்திய உணவகள் கிடைக்கும் என்று எழுதி இருக்கும். ஆனால் இந்திய உணவுகளே அதிகம் விற்பனையாகும். பெரிய கம்பனிகளின் பார்ட்டிகளும் இங்கே அதிகம் நடைபெறும். 

6. மாடர்ன் அபாமியா அல் ஷாம் ரெஸ்டாரென்ட் 
(MODERN AFAMIA AL SHAAM RESTAURENT)

இதுவும் ஒரு சூரி (சிரியா நாட்டவர்) யின் உணவகம். சில வருடங்களுக்கு முன்பு இதே கடையை ஒரு பாலஸ்தானியார் வேறு பெயரில் நடத்தி வந்ததாக ஞாபகம். நான் பல முறை இங்கே சாப்பிட்டு இருக்கேன், ஆனால் சில மாதம் முன்பு இந்த கடை புது மாதிரியாக மாற்றப்பட்டு அழகாக காட்சி அளித்தது. ருசியும் மிகபெரிய மாற்றம், முன்பை விட ரொம்ப நான்றாக இருந்தது. ஷவர்மா புத்தி விதமான ஒரு சுவை. கோழி போன்று பெரிய ஆர்டர் இருந்தால் பிலாபில் இலவசம், இலையேல் ரெண்டு திர்ஹம் முதல் கிடைக்கும். 

5 . புட் லேன்ட் 
(FOOD LAND): 

அமீரகத்தில் புகழ் பெற்ற இந்திய பிசினஸ்மேன்களில் ஒருவரான பி.ஆர்.ஷெட்டி (B.R.Shetty) ஒரு சராசரி மனிதராக  இந்த நாட்டிற்கு வந்து இன்று பல துறைகளில் ஜொலித்தி வருகிறார். யூ.ஏ.ஈ. எக்சேன்ஞ் (UAE Exchange), நியோ பார்மசி (Neo Pharmacy), என்.எம்.சி மருத்துவமனைகள் (MNC Hospitals) இன்னும் பல துறைகளில் கொடிகட்டி வரும் இந்த நிறுவத்தின்   புட் லேன்ட் உணவகலத்தில் எல்லா விதமான  இந்திய உணவுகள் ரொம்ப சுவையுடன், ரொம்ப அழகான சுழலுடன் பரிமாறப்படும். குடும்பத்துடன் போக நினைகிற சிறந்த இந்திய உணவகம் முசப்பாஹ்வில் இது தான். 

4. அல் அக்கவி ப்ளவேர் கிரில் 
(Al Akkawi flower Grills): 
முசப்பாஹ்வில் இரண்டு வருடம் முன்பு இந்த பெயரில் ஒரு உணவகம் கூட கிடையாது. இன்று ஆறு இடங்களில் இருக்கிறது என்றால் இதோட வளர்ச்சி பற்றி சொல்லவேண்டும். எல்லா விதமான அராபிய உணவுகளும் இங்கே கிடைக்கும். 

3. அல் அக்கவி ப்ளவேர் கபேதேரியா  
(Al Akkawi flower Cafeteria): 
அல் அக்கவியின் முதல் கடை முசப்பாஹ்வில் இது தான். ஒன்றரை வருடத்திற்கு முன்பு புதிதாய் ஒரு கடை துவங்கி இருகிறார்கள் என்று இங்கு சென்றால் இதன் சுவை தினமும் எண்ணெய் இழுக்க ஆரம்பித்தது. அப்போது மதியம் கூட இங்கே வந்து சாப்பிடும் அளவு ரொம்ப நன்றாக இருந்தது. பொறித்த உருளை, கத்திரிக்காய், காலிபிளவர், பிலாபில், ஷவர்மா என இங்கே பிரபலமான உணவு வகைகள் ஏராளம். இங்கு வெறும் பார்சல் மட்டுமே கொடுக்க பட்டது. அதன் பின்பு ஒரே ஒரு மேஜையில் இரு நாற்காலிகள் மட்டுமே இருந்தது, பார்சலை மாட்டுமே நம்பி துவங்க பட்டது போல, இங்கே டேபிள் போடா கூட இடம் இல்லை. பக்கத்தில் ரோட்டில் நாற்காலிகள் போடா தனியாக பணம் கேட்ட வேண்டும். ஆனால் மதியம், இரவு என எப்போது வந்தாலும் நிற்க கூட இடமில்லாத அளவு கூட்டம் இருக்கும். அப்புறம் கடைக்கு வெளியே ரெண்டு மேஜைகள் போட்டாங்க, அப்புறம் நாலைந்து ஆச்சு. அப்படியே நெறைய வந்து இப்போ ஆறு கடைகள், எல்லாமே ரொம்ப பெரிய கடையாக வந்துவிட்டது. இருந்தும் இந்த கடை அப்படியே இருந்தாலும் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. 

2. அல் ஷப் ஷப் ரெஸ்ட் ரெஸ்டாரென்ட் 
(AL SAF SAF RESTAURENT): 

முசப்பாஹ்விலேயே எனக்கு ரொம்ப பிடித்த உணவகமாக பல மாதம் இருந்த இந்த உணவகம் கடந்த மாதம் தான் இரண்டாவதாக வந்தது. சிறந்தவற்றிருக்கு தனித்தனி சிறந்த விஷயங்கள் ஏராளம் உண்டு. எல்லா விதத்துலயும் ரொம்ப அழகான இந்த உணவகம் சமீபத்தில் அதிகம் maintenance  இல்லை. ருசியை பற்றி சொல்ல தேவை இல்லை. இங்கு கண்ணை மூடிக்கொண்டு என்ன வேணாலும் ஆர்டர் பண்ணலாம். உங்கள் நாவிற்கு எந்த குறையும் இருக்காது. முக்கியமான ஒரு விஷயம், முசப்பாஹ்விலே காஸ்ட்லியான உணவகம் இது தான். லெபனானி கடை, பொதுவா லெபனானி உணவகளும், பேக்கரிகளும் தான் சிறந்ததாக இருக்கும் எங்கு சென்றாலும், முசப்பாஹ்வில் லெபனானி உணவகங்கள் ஏன் அதிகம் இல்லை என்கிற குறையை இந்த ஒரு கடையே பூர்த்தி செய்திடும் எனலாம். 

1. லயாலி அல் ஷாம் ரெஸ்டாரென்ட் 
(LAYALI AL SHAM RESTAURENT)

இந்த வருடம் பெப்ரவரியில் தான் இந்த கடை துவங்கப்பட்டது என்றாலும் இன்று வரை எல்லா வியாழன் இரவு இங்கு தான் சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது. மற்ற நாட்களிலும் அவ்வபோது வருவது பழக்கம் என்றாலும் இங்கு ஒரு நாள் மதியம் சாப்ட்டு பார்த்தால் மற்ற உணவகத்துக்கு போக மனம் வராது. பிலாபில் (Falafel)  இங்கு ரொம்ப அழகா குறிப்பா எண்ணெய் இல்லாமல் இருக்கும். ஒரு நட்சத்திர உணவகத்தின் தரம் உணவில் இருப்பதை உணரலாம்.  இங்கு தரும் தூம் (Thoom) அதாவது வெள்ளைபூண்டு கூட எந்த வித மனம் இல்லாமல் ரொம்ப அழகா இருக்கும். அராபிய உணவகத்தில் முக்கியான ஷவர்மா இங்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லை என்றாலும் மற்றவை எல்லாம் நன்றாக இருக்கும். சூப், சாலட், துருக்கி காப்பி என நெறைய சொல்லும் படியான உணவு வகைகள். ஹாமூர் மீனின் சுவை இங்கே ரொம்ப ஸ்பெஷல். எல்லா விதத்துலயும் சிறந்த எனக்கு ரொம்ப பிடித்த உணவகம் முசப்பாஹ்வில் இது தான். 


Photographed & Written by Jaffer Shadiq.Z

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

4 Comments:

Anonymous said...

AL SUKARYA RESTAURANT EAN UNGALUKU PIDIKALAI

Anonymous said...

Oru velai mussafah'la 500 restaurent potta athai podalam, lol

Arun said...

சில கடைகளில் பார்சல் வாங்க வந்தாலே சும்மா வெயிட் பண்ணுற வரை உண்ண தருவார்கள்.
இது நல்ல ஐடியா வா இருக்கே.

நான் இங்கு அடிக்கடி செல்லவது எதற்கு என்றால், ஊரை போல இங்கு அக்கௌன்ட் (கணக்கு) வைத்து கொண்டு சாப்பிட்டு மொத்தமாக கொடுத்து விடலாம் பில்களை.
நம்ம ஊரு காரங்க மேல அவளோ நம்பிக்கை....

இதை படிக்கும்போதே எனக்கு பசி எடுப்பது போல ஒரு உணர்வு..... அருமையான ஒரு தகவல் நன்றி ஜாப் அவர்களே....

Flint said...

உங்கள் கமெண்ட்-க்கு நன்றி அருண். இது போன்ற நல்லா ஐடியா-களெல்லாம் நிறைய இருக்கு, தோணறது படிங்க நிறைய சொல்றேன்

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha