நாளை வெளிவர இருக்கும் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணியின் ராவணன் பட பாடல், இதன் ஹிந்தி பதிப்பான ராவண் ஒரு வாரம் முன்பே வெளியான நிலையில் அதே இசைக்கு தமிழ் வரிகள் கொண்ட பாடல் வெளியாவது நாளை தான். முன்பே வா(Munbe Vaa), மன்னிப்பாயா(Mannipaya) என்று பல வெற்றி பாடல்களை தந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்களை பற்றி இதே ப்ளோகில் நெறைய படித்து இருப்பீர்கள். அதே அனுபவத்தை தருகிறது ராவண் பட பாடலான 'கள்வரே', வைரமுத்துவின் வரிகளை சொல்லவா வேண்டும், சிகரங்கள் தொடவிருக்கும் இந்த இனிய பாடல் விடிந்தால் உலகிற்கு வெளிவர இருக்கிறது. இன்றே என் தூக்கத்தை தூங்க வைத்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் பேஸ்புக்-இல் போட்ட அரை மணி நேரத்தில் இந்த பாடலை பற்றி எழுதி உள்ளேன். நன்றி ஏ.ஆர்.ரஹ்மான்!
Browse: Home > கள்வரே.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல்
Tuesday, May 4, 2010
கள்வரே.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல்
Labels: ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ், தமிழ் சினிமா
0 Comments:
Post a Comment