கத்தார் ஏர்வேஸ் பிரபல ஹோட்டல் கம்பெனி ரோடானா குரூப்புடன் இணைந்து நட்சத்திர ஹோட்டல்களை துவங்க இருப்பதாக அதன் தலைமை நிர்வாகி அக்பர் அல் பகீர் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதன் முதல் கட்ட பணியாக கத்தார் தலைநகர் தோஹா விமான நிலையம் அருகே ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை இந்த ஆண்டின் இறுதிக்குள் துவங்க இருகிறார்கள். இதே போல மேலும் நான்கு நாடுகளிலும் இதே பெயரில் இன்னும் சில நட்சத்திர ஹோட்டல்களும் துவங்க இருக்கிறார்கள்.
2011 ஆம் ஆண்டு துவங்க இருக்கும் புது விமான நிலையத்தில் இருந்து இன்னும் நிறைய இடங்களுக்கு விமான போக்குவரத்து விட இருக்கிறது கத்தார் ஏர்வேஸ். இந்த புது கத்தார் விமான நிலையத்தின் மதிப்பு 14.5 பில்லியன் டாலர்கள் (இந்த ரூபாய் 65 ஆயிரம் கோடி). துபாயில் இயங்கும் எமிரேட்ஸ், பிளை துபாய் (fly dubai) என்கிற குறைந்த கட்டண விமான போக்குவரத்தை போல கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும் வேறு பெயரில் குறைந்த கட்டண விமான போக்குவரத்தை வேறு பெயரில் விரைவில் துவங்க இருக்கிறது. இதன் ஒரு கட்டமாக ஈராக் செல்ல அனுமதி பெற்று ஈராக்கின் முக்கிய நகரங்களான பாக்தாத், நஜாப், இர்பில் போன்ற இடங்களிலும் தனது சேவையை துவங்க இருக்கிறது. துபையின் முன்னணி பிசினஸ் மேன் ஜார்ஜ் மௌசா இன்னும் 18 மாதங்களில் லெபனான் நாட்டில் புதிதாக ஒரு விமான செய்வை துவங்க இருக்கிறார். இவர் பிளானெட் குரூப் கம்பெனியின் முதலாளி. இதை போல இன்னும் நிறைய விமான சேவைகள் அதிகரித்துள்ள நிலையில் குறைந்த கட்டணமும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் தாங்கும் ஹோட்டல்களும் அவசியம் தானே.
கத்தார் ஏர்வேஸ் ரோடானா குரூப்புடன் துவங்க இருக்கும் ஹோட்டல்களுக்கு ORYX என்று பெயரிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment