இன்று (மே 29, 2010) சனிக்கிழமை துபாயில் வெளியிட்டுள்ள செய்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் 3.2 சதவீதம் அதிகரித்து உள்ளதாக நாட்டின் நிதி அமைச்சர் சுல்தான் பின் சாயத் அல் மன்சூரி (Sultan bin Saeed Al mansuri) அவர்கள் பத்திரிக்கையாளர்களுடன் தெரிவித்தார். கடந்த ஆண்டு இது 1.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது இருந்தது. இந்த பொருளாதார வளர்ச்சியில் எண்ணெய் இரண்டு முதல் இரண்டரை சதவீதம் உதவியாக இருந்தாக அவர் மேலும் தெரிவித்தார். ஒரு பெரல் 85 அமெரிக்க டாலராக இருந்த எண்ணெயின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 95 அமெரிக்க டாலர் வரை உயர கூடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தில் 29.4 சதவீதம் எண்ணெய் மூலமாகவும், 71.6 சதவீதம் மற்ற துறையின் மூலம் வருமானம் வருவதாக தெரிவித்தார்.
எண்ணெய் இல்லாத மற்ற துறையால் வருமான சதவீதம்:
16.2 சதவீதம் : உற்பத்தி
10.7 சதவீதம் : கட்டிடவியல்
9 சதவீதம் : மொத்த வியாபாரம், வணிகம்
8.2 சதவீதம் : ரியல் எஸ்டேட்
8 சதவீதம் : அரசு துறைகள்
7.1 சதவீதம் : போக்குவரத்து, சேமித்தல் மற்றும் தொலைதொடர்பு
5.8 சதவீதம் : வங்கி மற்றும் மற்ற பொருளாதார துறைகள்
1.8 சதவீதம் : ஹோட்டல் மற்றும் உணவாக துறைகள்
1.7 சதவீதம் : விவசாயம், மீன் பிடித்தல் போன்ற துறைகள்
1.6 சதவீதம் : மின்சாரம், தண்ணீர் போன்ற துறைகள்
0 Comments:
Post a Comment