துபாயிலிருந்து மங்களூர் சென்ற போயிங் 737 என்கிற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை இந்தியா நேரம் 7.30 மணிக்கு மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது தீ பிடித்ததில் விமானம் இரண்டாக உடைந்து 160 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். விமான நிலையத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்தாக கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்தார். விமானம் ரெண்டாக உடைந்து, கடுமையாக தீ பிடித்ததாக விமானத்தில் இருந்து வெளியே குதித்து தப்பித்த 'அப்துல்லா' என்கிற பயணி மருத்துவமனையில் இருந்து TV9 என்கிற தொலைகாட்சிக்கு அளித்த பெட்டியில் தெரிவித்தார். டயரில் இருந்து கடுமான சத்தம் வந்ததாகவும் முன் கதவு தீ பிடித்தால் பின் கதவில் இருந்து தப்பிதாகவும் தெரிவித்தார். மேலும் இருவர் விமானத்தில் இருந்து தப்பித்து வெளியே குதித்தை அவர் பார்த்தாக தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான விமானம் தன் கிராமத்தில் விழுந்து நொறுங்கியதில் தன் கிராமத்தில் இந்த அனைவரும் வெளியே வந்துவிட்டதாகவும், என் கால் பக்கத்தில் விமானத்தின் ரெக்கை தீ பற்றி எரிந்ததாகவும் மொஹிதீன் பாவா என்ற கிராமவாசி CNN -IBN என்கிற தொலைகாட்சியில் தெரிவித்தார்.
விபத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்க படும் என்று இந்தியா பிரதமர் மன்மோகன் சிங்க் அறிவித்து உள்ளார்.
டெல்லி விமான நிலையத்தின் அவசர பிரிவு எண்கள் - 011-2565-6196 & 011-2560-3101
மங்களூர் விமான நிலையத்தின் அவசர பிரிவு எண் - 0824-2220422
0 Comments:
Post a Comment