உலகின் பாதுகாப்பான ரயில் நிலையமாக துபாய் மெட்ரோ ரயில் தேர்வாகியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் பதினொன்றாம் தேதி துவங்கிய வளைகுடாவின் முதல் ரயில் சேவையான துபாய் மெட்ரோ இன்னும் முழுமையாக சில ரயில் நிலையங்கள் துவங்காத நிலையில் தினமும் ஒரு லட்சத்தி பனிரெண்டு ஆயிரம் பயணிகளை சுமந்து இன்னும் சில சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் மிகுந்த குறைவான குற்றங்களை கொண்ட ரயில் நிலையமாக உள்ளதாக துபாய் காவல் துறையின் பாதுகாப்பு மற்றும் அவரசப்பிரிவின் துணை நிர்வாகி கோலாநெல் அப்துல்லாஹ் அல் கைத் (Colanel Abdullah Al Ghaith) நேற்று செய்தியாளர்களுடன் தெரிவித்தார். அதாவது பத்து லட்சம் பயணிகளுக்கு 1.6 பயணிகளே திருட்டுக்கு உள்ளாகப் படுவதாக அவர் தெரிவித்தார். இது மிகுந்த வளர்ச்சியடைந்த மற்ற பெரிய நகரங்களை விட மிகக் குறைவானதாம். அதாவது பத்து லட்சம் பயணிகளில் பிரிட்டனில் பதிமூன்று பேருக்கும், சிகாக்கோவில் 12.3 பேருக்கும், அட்லாண்டாவில் 7.5 பேருக்கும், போஸ்னியாவில் 5.8 பேருக்கும் திருட்டுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
துபாய் மெட்ரோ ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இரண்டு திருட்டுகள் (இரண்டுமே பிக் பாக்கெட்) நடந்து இருக்கிறது. இந்த இரண்டு சம்பவமும் மிகுந்த கூட்ட நெருக்கடியில் மால் ஆஃப் எமிரேட்ஸ் மற்றும் புர்ஜ் கலிஃபா ரயில் நிலையங்களில் நடந்துள்ளது. ஆனால் சமிபத்தில் எந்த ஒரு தவறும் நடைபெறாததால் மக்கள் மிகுந்த பாதுகாப்பாக கருதுகிறார்கள். துபாய் மெட்ரோவில் திருட்டு போன்ற குற்றங்களை தடுக்க மட்டும் மூவாயிரம் காமெராக்கள் பயன்படுத்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment