பிரான்சில் தென் பகுதியில் பெய்ந்த பலத்த மழை மற்றும் புயல் காற்று வீசியதால் பத்தொன்பது பேர் பலியாகி உள்ளதோடு ஏழு பேரை காணவில்லை என்று அந்த நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது. முன்னூற்றி ஐம்பது மில்லி மீட்டர் பெய்த இந்த மழை 1827 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரான்சில் நடக்கும் கடுமையான பாதிப்பு என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஒரு லட்சம் வீடுகள் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் பிரிக் ஹோர்டேபெவ்ஸ் (Brice Hortefeux) செய்தியாளர்களுடன் தெரிவித்தார். இந்த புயல் மழையால் நூற்றுகணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்து, பல வீடுகள் தண்ணீரால் மூழ்கியும் கிடக்கிறது. அங்குள்ள மக்கள் நகரமெங்கும் பாறைகள், கற்கள் மற்றும் சேற்றுகள் நிறைந்துள்ளதாகவும், வாகனங்களால் சாலைகள் அனைத்தும் அடைக்க பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்
Browse: Home > பிரான்சில் கடும் புயல், மழை. 19 பேர் பலி, 7 காணவில்லை
0 Comments:
Post a Comment