காட்டுல நீங்க தனியா போன உங்களை போட்டு தள்ளுறது அதாவது உங்கள அட்டாக் பண்றது சிங்கமோ புலியோ கிடையாது. நம்ம கரடிதான்..! காடுகளில், குகைகளில் முன்பு வசித்த ஆதி மனிதர்களுக்கு குளிர், உணவுக்கு அப்புறம் மிகவும் சவாலாக இருந்த விஷயம் கரடியோட அட்டாக் தான்.. பெரும்பாலும் காட்டுல இருக்குற விலங்குகள் (சிங்கமோ, புலியோ) மனிதனை கண்டால் விலகி செல்லவே விரும்பும் அது எது வரைக்கும் என்றால் நம்ம சேட்டைய அது கிட்ட காட்டாத வரை. ஒரு வேலை நம்ம ஹீரோக்கள் மாதிரி உணர்ச்சிவசப்பட்டு உங்க வீரத்தை அதுகிட்ட காட்டுனீங்கனா அப்புறம் உங்க உசுரு கொசுறு மாதிரி ஆயிடும்.. 
கரடி: 
சரி நம்ம கரடி மேட்டருக்கு வருவோம்.. பொதுவா கரடி மனிதர்களை போல ரெண்டு கால் எழுந்து நிற்க குடியவை.. அதுனால மனிதர்களை கண்டால் யாரோ புது எதிரி என்று நினைத்து கொண்டு போட்டு தாக்கி விடும்.. சில சமயம் சும்மா போகும் மனிதர்களையும் தேடி வந்து போட்டு  தாக்கும்.. இப்படி ஆண்டுதோறும் கரடிகளால் சுமார் 150 பேர் தாக்கப்படுகின்றனர். கரடிகளிடம் இருந்து தப்பிக்க சில வழிகள் உண்டு. பொதுவா கரடிகள் சிங்களா  சிங்கம் மாதிரி போறவங்கள தான் தாக்குமாம், கூட்டமா போறவங்கள ஒன்னும் செய்யதாம், ஒருவேளை கரடியை நீங்க தனியா பார்த்தால்  ஓட அரம்பிக்காதீர்கள், உங்களைவிட அதுக்கு வழி நன்றாகவே தெரியும். கரடி உங்களை பார்க்கும் படி நில்லுங்கள் கைகளை தலைக்கு மேல் வைத்துக்கொள்ளுங்கள், தன்னை விட பெரிய மிருகம் என்று நினைத்து கரடி தானாகவே விலகி விடும்.., எங்காவது காட்டுக்குள் சென்றால் மீதமான உணவு பொருள்களை கூடாரத்திலிருந்து தள்ளி வைத்துவிடுங்கள் ஏனெனில், உணவை தேடி கரடி வரும்.
யானை:
கரடிக்கு அப்புறம் உங்கள தேடி வந்து ஆப்பு வைக்குற விலங்கு குட்டியோடு வரும் யானைகள். பொதுவாக யானைகள் வெள்ளை நிறத்தை தூரத்தில் இருந்தே எளிதாக கண்டுபிடித்துவிடும்,. காட்டுக்கு போகும் போது தப்பி தவறி வெள்ளை உடையை அணியமால் பார்த்துக்கொள்ளுங்கள.
புலி:
புலிகளை தேடி செல்லும் வன ஆராய்சியாளர்கள் மனித முகம் கொண்ட அட்டையை தலைக்கு பின்னல் மாட்டிக் கொள்வார்கள், ஏனென்றால் புலி எப்போதும் பின்னாடி பாய்ந்து பிடரியை அறையுமாம். பின்னாடி அட்டையை மாட்டிக்கொள்வதால் புலி குழம்பி கிளியாகி இடத்தை காலி செய்து விடும்...!