இந்திய பூப்பந்து வீராங்கனை சைனா நேஹ்வால் தொடர்ச்சியாக மூன்றாவது பட்டத்தை வென்றுள்ளார். நேற்று நடந்த இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்று உலகின் பூப்பந்து வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைந்தார். இது சைனா வென்ற மூன்றாவது ஓபன் சீரீஸ் பட்டம் ஆகும். இதற்கு முன்னர் இந்திய ஓபன் கரண்ட் பிரிக்ஸ் மற்றும் சிங்கபூர் ஓபன் சூப்பர் சீரீஸ் இந்த ஆண்டு வென்றுள்ளார்.
சைனா நேஹ்வால் தன்னுடைய தாய்நாட்டிற்காக பல சாதனைகள் படைத்தது வருகிறார். சூப்பர் சீரீஸ் போட்டியை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவருக்கே சேரும். இது டென்னிஸ் விளையாட்டின் கரண்ட் சலம்க்கு ஒப்பானது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் காலிறுதி போட்டிகள் வரை சென்றவர் மற்றும் சிறுவர்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்ணும் இவரே ஆவார்.
சைனா நேஹ்வால் ஹர்யானா மாவட்டத்தில் உள்ள ஹிசார் என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தை டாக்டர்.ஹர்விர் சிங்க் , தாய் உஷா நேஹ்வால் இருவருமே முன்னால் பூப்பந்து வீரர்களே ஆவர்.தன்னுடைய எட்டு வயதில் இருந்து பூப்பந்து பயிற்சி பெற்று வருகிறார்.ஆகஸ்ட் 2009 சைனா நேஹ்வால் அர்ஜுனா விருது பெற்றார். இந்திய அரசு இவருக்கு ஜனவரி 2010 பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது.
சீனியர் பிரிவில் வென்ற பட்டங்கள் :
- 2008 காமனவெல்த் யூத் கேம்ஸ் - தங்க பதக்கம்
- 2009 இந்தோனேசியா சூப்பர் சீரீஸ்
- 2009 ஜெய்பீ கப் செயத் மோடி மெமோரியல் இன்டர்நேஷனல் இந்திய கரண்ட் பிரிக்ஸ்
- 2010 பத்மிட்டியன் ஆசியா சம்பிஒன்ஷிப் - வெங்கல பதக்கம்
- 2010 இந்தியன் ஓபன் கரண்ட் பிரிக்ஸ் கோல்ட்
- 2010 சிங்கபூர் ஓபன் சூப்பர் சீரீஸ்
- 2010 இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரீஸ்.
-ஜாஸிம் புஹாரி
0 Comments:
Post a Comment