என் இனிய தமிழ் மக்களே குரங்களிடம் அடி வாங்கும் ஒரு கிராமத்தின் கதை இது (உண்மையான கதை பா).. ஒரிசாவின் புவனேஸ்வர் அருகே இருக்கிறது பாத்ரா கிராமம். ஒரு நாள் குரங்கு குரூப் ஒன்று அந்த கிராமத்தின் மூன்று இளைஞர்களை தாக்கியது..கடுப்பான கிராம மக்கள் குரங்குகளை துரத்தி அடித்தனர். பல குரங்குகள் படுகாயமடைய, இரக்கப்பட்ட கிராம மக்கள் சிலர் அவற்றை மருத்தவமனையில் சேர்த்தனர். சிகிச்சை காலத்தில் ஆல்கஹால் கலந்த டானிக்கை கொடுத்து குரங்குகளை தொடர் மயக்கத்த்லேயே வைத்திருந்தனர். குணமான பிறகும் குரங்குகளுக்கு அந்த போதை தேவைப்பட்டது. இதனால் கிராமத்தில் இருந்த மதுக்கடைக்குள் புகுந்துவிட்டன அந்த குரங்குகள். ஆரம்பித்தது வினை. தினம் மது கடைக்கு குரங்குகள் படையெடுக்க கடையே மூடிவிட்டார்கள். போதை பழக்கமான குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பாட்டில்களை அள்ளிசெல்ல ஆரம்பித்தன. வீட்டில் பாட்டில் ஏதும் இல்லையென்றால், ஆட்களையும் கோபத்தில் அடி பின்னி எடுகின்றனவாம்.. இதனால் கட்டிங் பிளஸ் மிக்ஸ்சிங்கோடு வீட்டு வாசலில் பாட்டிலை வைத்துவிடுகிறார்கள் பாத்ரா மக்கள். செலவு கட்டுபடியாகதால் அங்கே இப்போது போதை தரக்குடிய பச்சிலை ஒன்றை அரைத்து, தண்ணீர் கலந்து விட்டு முன் வைக்கிறார்கள். இப்போது பச்சிலை சாற்றை சாப்பிட்டு போதையில் குரங்குகள் டான்ஸ் வேற ஆடுகிறதாம் (இந்த கொடுமையை நான் எங்கே பொய் சொல்ல)..
முஹம்மத் சாதிக்
0 Comments:
Post a Comment