163 ஆட்டம் ,1000 புள்ளிகள் , 10 மணிநேரம் கழித்து அமெரிக்காவின் ஜான் இச்நேர் மற்றும் பிரான்சின் மகுட் இருவருக்கு இடையே நடந்த வரலாற்று சிறப்பு மிகுந்த விம்பிள்டென் முதல் சுற்று ஆட்டம் 59-59 என்ற புள்ளிகளில் குறைந்த வெளிச்சம் காரணமாக இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டது. இந்த இருவருக்கும் இடையே ஆன ஆட்டம் செவ்வாய்கிழமை துவங்கியது, தலா இரண்டு செட்கள் என்ற நிலையில் குறைந்த வெளிச்சம் காரணமாக ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது. புதன்கிழமை பகல் பொழுதில் ஆட்டம் மீண்டும் துவங்கியது , ஐந்தாவது செட் ஆடிய அவர்கள் அன்று சூரியன் மறையும் வரை ஆடினார்கள்.ரசிகர்களும் ஆச்சர்யத்துடன் கண்டனர். இச்நீரால் நகல முடியவில்லை, மகுட் மிகுந்த கலைப்படைந்தர் ஆயினும் இருவரும் விட்டுக்கொடுக்காமல் போராடினார்கள். உலகமக்கள் அனைவரும் கால்பந்தின் மோகத்தில் இருக்கும் போது , இந்த ஜோடியின் ஆட்டத்தால் அனைவரின் பார்வையும் விம்பிள்டென் பக்கம் திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
" எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த ஆட்டம்.எனக்கு தெரியும் அவர்களுக்கு இது கஷ்டமாக இருந்திருக்கும்,ஆனால் டென்னிஸ் விளையாட்டில் இது போன்று கேள்விப்பட்டது கிடையாது" என்று முதல் நிலை வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியின் முக்கியமான சாதனைகள் :
-டென்னிஸ் வரலாற்றில் நீண்ட நேரம் ஆடிய ஆட்டம்(10 மணிநேரம்).முந்தைய சாதனை 6 மணிநேரம் மற்றும் 33 நிமிடங்கள்.
-டென்னிஸ் வரலாற்றில் நீண்ட செட் (SET) 118 ஆட்டம்.
-அதிகமான ஆட்டங்கள்(GAME) 163 , முந்தைய சாதனை 112.
-இரு வீரர்களும் ATP ஆட்டத்தின் ACE சாதனையை முறியடித்துள்ளனர்.மொத்தம் 198 ACEகள் முந்தய சாதனை 98 மட்டுமே.
-ஐந்தாவது செட் ஆட்டம் 7 மணிநேரம் 6 நிமிடங்கள் நடந்து இன்னும் முடியவில்லை.
-புள்ளிகள் 47-47 என்ற நிலையில் புள்ளிகள் தெரிவிக்கும் கருவி (SCOREBOARD) செயல் இழந்தது.
இந்த ஆட்டத்தின் மீதி இன்று மதியம் துவங்க உள்ளது. நாளையும் ஒரு ஆடுகளம் தயாராக உள்ளதாக விம்பிள்டென் வட்டாரம் தெரிவிக்கிறது. இருவரில் யார் வெல்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு இருகின்றனர். யார் வென்றாலும் சரி இருவருமே மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்.
-ஜாஸிம் புஹாரி
0 Comments:
Post a Comment