JASH PHOTOGRAPHY

Thursday, June 10, 2010

2010 உலக கோப்பை கால்பந்து போட்டியின் முக்கியமான வீரர்கள்




தென் ஆப்ரிக்காவில் நாளை (ஜூன் 11, 2010) துவங்க இருக்கும் பத்தொன்பதாம் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த ஆர்மமுடன் இருக்கிறார்கள். இந்த முறை கடுமையான போட்டியை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் முக்கியமான எட்டு கால்பந்து வீரர்களை பற்றி இங்கே பார்ப்போம். இவர்கள் மிகுந்த ஆபத்தான வீரர்கள் மட்டுமின்றி கோல் போட அதிகமான தாகம் உள்ளவர்கள்.


லியோநெல் மெச்சி (அர்ஜென்டினா)

           இவர் அர்கேன்டினா நாட்டின் தேசிய டீமில் விளையாடுகிறார். இந்த தலைமுறையின் மிக சிறந்த வீரர்களுள் ஒருவர் என்று சொல்லலாம். இவரின் இடம் ஸ்டிக்கர். கிளப் மேட்சிகளில் இவர் பார்சீலோனா கிளப் டீமிற்காக விளையடுவார். 2009 ஆம் ஆண்டின் கால்பந்தில் சிறந்த வீரராக வென்ற    லியோநெல் மெச்சி இதுவரை விளையாடிய போட்டிகள் 44 , அடித்த கோல்கள் 13. 

கிறிஸ்டினா ரொனால்டோ (போர்சுகள்)
             போர்சுகள்  கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் அந்த அணியின் முக்கியமான ஒரு ஸ்டிக்கரான கிறிஸ்டினா ரொனால்டோ 2009 ஆம் ஆண்டு முன்பு வரை மேன்செஸ்டர் டீமில் விளையாடி வந்த இவர் அந்த ஆண்டு முதல் ரியல் மாட்ரிட் டீமிற்காக விளையாடி வருகிறார். 72  போட்டிகள் விளையாடிய இவர் 22 கோல்களை போட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டின் கால்பந்தில் சிறந்த வீரராக வென்றவர்,


வேன் ரூனே (இங்கிலாந்த்)
                     இங்கிலாந்த் அணிக்காக விளையாடும் ஒரு ஆங்கில வீரர். இவரது இடம்: பீல்ட் மற்றும் பார்வேட். தற்போது மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வருபவர். 60 மேட்ச்களை விளையாடிய இவர் தனது நாட்டிற்க்காக 25 கோல்களை  அடித்து தந்துள்ளார். 

டிடியர் ட்ரோக்ப (கோட் டி ஐவொரி)

                 ஐவோரி கோஸ்ட் தேசிய கால்பந்து அணியில் விளையாடும் இவரது இடம் ஸ்ட்ரிக்கர். தற்போது விளையாடி வரும் கிளப்: செல்சா. 68  போட்டிகள் விளையாடிய இவர் 44 கோல்களை போட்டுள்ளார்.

பெர்னாண்டோ டோர்ரேஸ் (ஸ்பெயின்)
                 ஸ்பெயினின் தேசிய கால்பந்து அணியில் விளையாடும் இவரது இடமும் ஸ்ட்ரிக்கர். தற்போது விளையாடி வரும் கிளப்: லிவெர்பூல். 73 போட்டிகள் விளையாடிய இவர் அடித்த  கோல்களை 24

காகா (பிரேசில்)
                 பிரேசில் நாட்டின் தேசிய அணியில் விளையாடும் காகாவின் இடம் மிட் பீல்டர். இவர் விளையாடும் கிளப்: ரியல் மாட்ரிட். 78  போட்டிகள் விளையாடி27 கோல்களை போட்டுள்ள இவர் 2007 ஆம் ஆண்டின் கால்பந்தின் சிறந்த வீரராக வென்றவர்.

பாபியோ கமவோரா (இத்தாலி)
                 இத்தாலி நாட்டின் தேசிய அணியில் விளையாடும் காகாவின் இடம் மிட் சென்ட் பேக்.  133  போட்டிகள் விளையாடிய இவர் அடித்த கோள்கள் இரண்டு. 2008 கால்பந்து போட்டியில் சிறந்த வீரராக வென்றவர். டிபாண்டர் ஒருவர் சிறந்த வீரராக வென்றது இவர் மட்டுமே. இவர் இந்த உலக கோப்பைக்கு பிறகு துபையின் அல் அஹ்லி கிளப்பிற்காக விளையாட இருக்கிறார்.

லுகாஸ் போடோயச்கி (ஜெர்மனி)
                 ஜெர்மனி அணிக்காக விளையாடும் லுகாஸ் போடோயச்கியின் கிளப் கோலன். இவரது இடம் பார்வேட் மற்றும் வியர். 73 போட்டிகள் விளையாடிய இவர் அடித்த  கோல்களை 38
ஜாஸிம் புஹாரி, ஜாஃபர் ஷாதிக் 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha