உலக கோப்பை கால்பந்து போட்டியில் நிலவும் சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் : எப்போதும் போல் இந்த ஆண்டு உலக கோப்பையும் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே அமெரிக்க நாட்டில் இருந்து பல ஆயிரக்கனக்கான விலைமாந்தர்கள் கால்பந்து ரசிகர்களை மகிழ்விக்க தென் ஆப்ரிக்கவிற்கு சென்றனர். இது மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது.
தற்போது உலக கோப்பை போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலைமையில் போட்டி மைதானத்தில் நிலவும் ஹாரன் சத்தம் தொலைகாட்சியில் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் விளையாடும் வீரர்களுக்கும் தொந்தரவாக உள்ளது. இந்த சத்தம் தொந்தரவாக உள்ளதாக வீரர்கள் பலர் கூறியுள்ளனர். கால்பந்து விளையாட்டுகளில் இந்த ஹாரன் சத்தம் தடைசெயயபட்டுளது என்பது குறிப்பிடப்பட்டது.
மற்றொரு சர்ச்சை விளையாட்டில் உபயோகிக்கும் அடிடாஸ் (addidas) நிறுவனத்தின் ஜபுழனி(jabulani) என்னும் பந்து. இந்த பந்து அடிடாஸ் நிறுவனத்தால் ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பந்தின் வடிவமைப்பில் தவறு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் இதை மறுத்துள்ளது. அந்த நிறுவனம் தெரிவிப்பதாவது இது மிகவும் துல்லியமாக தயாரிக்கப்பட்ட பந்து என்று அறிவித்துள்ளனர். ஆனால் எப்பொழுதும் இல்லாமல் இந்த உலக கோப்பை போட்டியில் பந்து தடுப்பவர்கள் (goal keeper) பலர் சிரமப்பட்டு வருகின்றனர். அல்ஜீரியா (algeria) , இங்கிலாந்த் (england) அணியின் தடுப்பாளர்கள் மிகவும் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு என்ன முடிவு என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
0 Comments:
Post a Comment