கால்பந்து உலக கோப்பை தென் ஆப்ரிக்க நாட்டில் துவங்கி உள்ளத்தால் உலகம் முழுவதில் உள்ள கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் . உலக அளவு கால்பந்து போட்டிகளில் நமது தாய்நாட்டின் நிலைமை என்ன ?
1948 ஆம் ஆண்டு இந்திய தேசிய அணி FIFA வில் ஒரு அங்கத்தினராக சேர்ந்தது . அன்று முதல் இன்று வரை இந்திய தேசிய அணி ஒரே ஒரு முறை உலக கோப்பை போட்டிகளில் விளையாட தகுதி பெற்றது. 1950 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஆசியா கண்டம் பிரிவில் பங்கேற்ற அணிகள் அனைத்தும் நீக்க பட்டன இதனால் இந்திய அணி விளையாட தகுதிபெற்றது . ஆனால் FIFA அமைப்பின் விதிப்படி பூட்ஸ் காலணி இல்லாமல் விளையாட முடியாது . இந்திய வீரர்களோ வெறும் காலில் விளையாடுபவர்கள் என்று அறியப்பட்டு வந்தனர் , இதனால் இந்திய வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர் .
அன்று முதல் இந்திய தேசிய அணி FIFA உலக கோப்பையில் விளையாட தகுதி பெறவே இல்லை. 1954 - 1982 ஆம் ஆண்டுகள் இந்திய அணி தகுதி போட்டியில் பங்கேற்கவே இல்லை. 1986 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்திய அணி பங்கேற்கிறது ஆனால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற முடிய வில்லை . இந்த ஆண்டு உலக கோப்பை தகுதிக்காக இந்திய அணி லெபனான் அணியுடன் இரண்டு முறை மோதியது , ஒரு முறை தோல்வியும் ஒரு முறை சமம் (DRAW) ஆனது . இதை அடுத்து லெபனான் அணி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய அணி வெளியேறியது .
இந்திய அணி FIFA உலக தர வரிசை பட்டியலில் 133 ஆம் இடத்தில உள்ளது. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில இருக்கும் நம்மால் மிக சிறிய நாடுகளை குடு வெல்ல முடியவில்லை காரணம் இந்தியாவில் கால்பந்தைவிட கிரிக்கெட் ஆட்டத்தை மக்கள் விரும்புகின்றனர். இந்திய அரசாங்கமும் இந்த விளையாட்டிற்கு பெரும் பங்கு அளிக்க வில்லை . கோவா , கேரளா , வேச்ட்பேங்கால் , மணிப்பூர் , மிசாரம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் கால்பந்து மிகவும் ப்றேசுட்தி பெற்ற விளையாட்டு . மற்ற மாநிலங்களில் மிகவும் குறைவாகவே விளங்குகிறது . நம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டிற்கு குடுக்கும் சலுகைகளும் வசதிகளும் கால்பந்து விளையாட்டிற்கும் கிடைத்தால் நிச்சயமாக நமது நாடு உலக அளவில் சிறந்து விளங்கும் .
ஜாஸிம் புஹாரி
0 Comments:
Post a Comment