மூன்று வருடம் முன்பு நடைபெற்ற தேர்தலில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சியை சேர்ந்த கெவின் ரூட் என்பவரே இதுவரை ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்து வந்தார். ஆனால் அவர் மீது அந்த கட்சியினரின் நம்பிக்கையின்மை அதிகரிக்கவே அவர் பதவி விலக நேரிட்டது. இதனை அடுத்து ஜூலியா கிலர்ட் போட்டியின்றி பிரதமராக தேர்வு செய்யபட்டார். இவரே ஆஸ்திரேலியா வரலாற்றில் முதல் பெண் பிரதமர்.
தனது கேபினெட் அமைச்சர்களை இன்னும் தேர்வு செய்யாத நிலையில் வருகிற வெள்ளி அன்று கனடாவில் ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ளவும் இருக்கிறார். பதினொன்று வருடம் எதிர் கட்சியாக இருந்த இந்த ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி
2007 ஆம் ஆண்டே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. அதிலும் இப்போது பிரதமர் மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜூலியா கிலர்டின் கணவர் டிம் மத்திஷன் ஒரு முடி திருத்துபவர்.
0 Comments:
Post a Comment