JASH PHOTOGRAPHY

Monday, June 28, 2010

வருடம் ஐம்பது மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் நாவல் ஆசிரியர்


மனிதர்களை கொன்று வாம்பைராக்கும்  வாம்பைர் கதைகள் அமெரிக்காவில் எப்போதும் பிரபலம். ஜெ.கே.ரௌலிங் எழுதிய ஹாரி போட்டர் என்கிற கற்பனை கதை எத்தனை பிரபலம் என்பது உலக குழந்தைகள் அனைவரும் அறிந்ததே.

நாவல்
அமெரிக்க நாவல் ஆசிரியர் ஸ்டெப்னி மேயர் எழுதிய ட்வளைட்  என்கிற நாவல் அமெரிக்க மற்றும் இன்று உலகெங்கும் பிரபலமானது. வாம்பைரான நாயகன் ஒரு மனிதகுலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பது போன்ற ஒரு கதை, அதனால் அவர்கள் சமாளிக்கும் பிரச்சனைகள் பற்றிய கதையான இந்த நாவல் 2008 ஆம் ஆண்டு வெளியானது. இருபத்தி ஏழு மில்லியன் பிரதிகளை விற்ற இந்த நாவல் அந்த ஆண்டின் அதிகம் விற்பனையான புத்தகமாக தேர்வானது. அதனை அடுத்து 2009 ஆம் ஆண்டும் 26 .5 மில்லியன் புத்தகங்கள் விற்று பல சாதனைகளை முறியடித்தது. இதை எழுதிய ஸ்டெப்னி மேயர, டைம் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்கக நூறு நபர்களில் ஒருவராக 2008 ஆம் ஆண்டில் தேர்வு செய்தது.அதே போல போர்பஸ் பத்திரிக்கை, 2009 ஆம் ஆண்டில் உலகின் பிரபலமான நூறு நபர்களில் இவரின் பெயரும் வெளியிட்டது. இவரின் ஆண்டு வருமானம் ஐம்பது மில்லியன் டாலர்கள்.  இவரது நாவல் உலகெங்கும் முப்பத்தி ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திரைப்படம்
நான்கு பாகங்கள் கொண்ட இந்த நாவல் இதுவரை இரண்டு பாகங்களே திரைப்படமாக வெளியாகி உள்ளது. முதல் படம் நவம்பர் 2008 லும், இரண்டாம் பாகம் நவம்பர் 2009 லும் வெளியாகி உலகெங்கும் 1.1  பில்லியன் டாலர்களை சம்பாதித்தது. மூன்றாவது பாகமான எக்லிப்ஸ் நேற்று பிரீவ்யூ ஷோ நடந்தது. வருகிற முப்பதாம் தேதி வெளிவர இருக்கிறது.

படத்தின் நாயகன் ராபர்ட் பட்டிசன்
இந்த படங்களின் நகயன் ராபர்ட் பட்டிசன் பற்றி நம் வாசகர்கள் அறிந்ததே. பார்க்க ஃபிளின்ட் ஜனவரி இதழில். இருபத்தி நான்கு வயதான இவர் இங்கிலாந்த் இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியாமிர்க்கு தூரத்து சொந்தமாம். 1500 களில்  இங்கிலாந்தில் வசித்து வந்த இவரது தந்தை வழியால் இவர் சொந்தம் என்கிற செய்தி சமீபத்தில் ancesty.com செய்தி வெளியிட்டது.
ட்வளைட் திரைபடத்தின் மூன்றாவது பாகமான எக்லிப்ஸ் திரைப்படத்தை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது இந்த நாவலின் ரசிகர்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha