JASH PHOTOGRAPHY

Thursday, July 1, 2010

சபிக்கப்பட்ட விளம்பரம்?


"write the future" என்னும் நைக் நிறுவனத்தின் கால்பந்து விளம்பரம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விளம்பரத்தில் வந்த காலபந்து நட்சத்திர வீரர்கள் அனைவரும் சபிக்கப்பட்டுவிட்டனர் என்று பத்திரிகைகள் தெரிவிகின்றன. இந்த விளம்பரத்தில் வந்த அனைத்து வீரர்களும் உலக கோப்பையில் சரியாக விளையாடாமல் வெளியேறி உள்ளனர்.



இந்த விளம்பரத்தில் உள்ள வீரர்கள்:
-ரொனால்டினோ (பிரேசில்)
-ரிபரி (பிரான்ஸ்)
-துரோக்பா (ஐவோறி கோஸ்ட்)
-ரூனி (இங்கிலாந்த்)
-கேன்னவேரோ (இத்தாலி)
-ரொனால்டோ (போர்துகள்)
-பெடரர் (டென்னிஸ்)
-கோபே பிரயன் ( கூடைபந்து)


உண்மையே , பிரேசில் அணியை சேர்ந்த ரொனால்டினோவை உலக கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்படவே இல்லை.பிரான்க் ரிபரி மற்றும் பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு  கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இங்கிலாந்த் அணி மிகவும் நம்பி இருந்த ரூனி , தன்னுடைய மோசமான ஆட்டத்தால் இங்கிலாந்த் அணி வெளியேறியது. செல்சே அணியின் சிறந்த வீரரான துரோக்பா தன்னுடைய தாய்நாட்டை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்ல  முடியவில்லை.தற்போதைய உலக சாம்பியன் இத்தாலி அணியின் வீரர் கேன்னவேரோ தன்னுடைய மோசமான தடுப்பு ஆட்டம் காரணமாக வெளியேறினர் (இவர் உலகின் மிகச்சிறந்த தடுப்பு ஆட்டகரர்களில் ஒருவர் ஆவார்).
மற்றும் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பற்ற கிறிஸ்டினா ரொனால்டோ ஸ்பெயின் உடனான ஆட்டத்தின்மூலம் உலக கோப்பையில் இருந்து வெளியேறி உள்ளார்.

அது மட்டும் அல்லாது விளம்பரத்தில் பங்கு பெற்ற டென்னிஸ் வீரர் ரோகேர் பெடரர் தற்போது நடைபெறும் விம்ப்ளேடன் போட்டியில் தோல்வி அடைந்துள்ளார். கூடைபந்து வீரர் கோபே பிரயன் மோசமான  உடல்நிலை காரணமாக தற்போது போட்டிகளில் பங்கேற்க வில்லை.ஏதாவது ஒரு ரூபத்தில் இந்த விளம்பரத்தில் பங்கேற்ற வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த விளம்பரத்தை சபிக்கப்பட்ட (curesed ad) விளம்பரம் என்று அனைவரும் விமர்சிக்கின்றனர்.
-ஜாஸிம் புஹாரி


Thursday, June 24, 2010

டென்னிஸ் வரலாற்றின் நீண்ட நேர ஆட்டம், மூன்றாவது நாளாய் தொடர்கிறது


163 ஆட்டம் ,1000 புள்ளிகள் , 10 மணிநேரம் கழித்து அமெரிக்காவின் ஜான் இச்நேர் மற்றும் பிரான்சின் மகுட் இருவருக்கு இடையே நடந்த வரலாற்று சிறப்பு மிகுந்த விம்பிள்டென் முதல் சுற்று ஆட்டம் 59-59 என்ற புள்ளிகளில் குறைந்த வெளிச்சம் காரணமாக இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டது. இந்த இருவருக்கும் இடையே ஆன ஆட்டம் செவ்வாய்கிழமை துவங்கியது, தலா இரண்டு செட்கள் என்ற நிலையில் குறைந்த வெளிச்சம் காரணமாக ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது. புதன்கிழமை பகல் பொழுதில் ஆட்டம் மீண்டும் துவங்கியது , ஐந்தாவது செட் ஆடிய அவர்கள் அன்று சூரியன் மறையும் வரை ஆடினார்கள்.ரசிகர்களும் ஆச்சர்யத்துடன் கண்டனர். இச்நீரால் நகல முடியவில்லை, மகுட் மிகுந்த கலைப்படைந்தர் ஆயினும் இருவரும் விட்டுக்கொடுக்காமல் போராடினார்கள். உலகமக்கள் அனைவரும் கால்பந்தின் மோகத்தில் இருக்கும் போது , இந்த ஜோடியின்  ஆட்டத்தால் அனைவரின் பார்வையும் விம்பிள்டென் பக்கம் திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

" எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த ஆட்டம்.எனக்கு தெரியும் அவர்களுக்கு இது கஷ்டமாக இருந்திருக்கும்,ஆனால் டென்னிஸ் விளையாட்டில் இது போன்று கேள்விப்பட்டது கிடையாது"  என்று முதல் நிலை வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.  

இந்த போட்டியின் முக்கியமான சாதனைகள் :
-டென்னிஸ் வரலாற்றில் நீண்ட நேரம் ஆடிய ஆட்டம்(10 மணிநேரம்).முந்தைய சாதனை 6 மணிநேரம் மற்றும் 33 நிமிடங்கள்.
-டென்னிஸ் வரலாற்றில் நீண்ட செட் (SET) 118 ஆட்டம்.
-அதிகமான ஆட்டங்கள்(GAME) 163 , முந்தைய சாதனை 112.
-இரு வீரர்களும் ATP ஆட்டத்தின் ACE சாதனையை முறியடித்துள்ளனர்.மொத்தம் 198 ACEகள் முந்தய சாதனை 98 மட்டுமே.
-ஐந்தாவது செட் ஆட்டம் 7 மணிநேரம் 6 நிமிடங்கள் நடந்து இன்னும் முடியவில்லை.
-புள்ளிகள் 47-47 என்ற நிலையில் புள்ளிகள் தெரிவிக்கும் கருவி (SCOREBOARD) செயல் இழந்தது.


இந்த ஆட்டத்தின் மீதி இன்று மதியம் துவங்க உள்ளது. நாளையும் ஒரு ஆடுகளம் தயாராக உள்ளதாக விம்பிள்டென் வட்டாரம் தெரிவிக்கிறது. இருவரில் யார் வெல்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு இருகின்றனர். யார் வென்றாலும் சரி இருவருமே மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்.
-ஜாஸிம் புஹாரி 


Monday, June 21, 2010

விம்பிள்டென் டென்னிஸ் போட்டி


கால்பந்துக்கு உலக கோப்பை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் டென்னிஸ் விளையாட்டிற்கு விம்பிள்டென்(WIMBLEDON) போட்டி. விம்பிள்டென் போட்டி மிகவும் பழமை வாய்ந்த, மிகவும் புகழ்பெற்ற புல் டென்னிஸ் போட்டி ஆகும். விம்பிள்டென் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் உள்ள விம்பிள்டென் என்னும் இடத்தில் இன்று துவங்க உள்ளது. இது அடுத்த மதம் நான்காம் தேதி வரை நடைபெறவுள்ளது. விம்பிள்டென் போட்டியில் வெற்றி பெறுபவறுக்கு  பரிசு தொகை 153 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணிக்கப்பட்டுள்ளது. இதன் இந்தியா மதிப்பு 700 கோடிகள்.   விம்பிள்டென் டென்னிஸ் போட்டியில் பல பிரிவுகள் உள்ளது ஆடவர் ஒற்றையர் பிரிவு (MENS SINGLES) , மகளிர் ஒற்றையர் பிரிவு (WOMENS SINGLES) , ஆடவர் ரெட்டையர் பிரிவு (MENS DOUBLES) , மகளிர் ரெட்டையர் பிரிவு (WOMENS DOUBLES) மற்றும் கலப்பு ரெட்டையர் பிரிவு ( MIXED DOUBLES) . டென்னிஸ் விளையாட்டில் உள்ள நான்கு கிரான்ட் ஸ்லாம் (GRANDSLAM) போட்டிகளில் ஒன்று. பீட் சாம்ப்ராஸ் (PETE SAMPRAS) என்னும் அமெரிக்க வீரர் அதிகபட்சமாக ஏழு முறை விம்பிள்டென் பட்டதை வாங்கி உள்ளார். இவரை அடுத்து ரோகர் பெடேரர்   (ROGER FEDERER) என்னும் சுவிட்சர்லாந்து வீரர் ஆறு முறை வாங்கி உள்ளார். மேலும் பெடேரர்  (FEDERER) இந்த ஆண்டும் வெற்றி பெற்றால் சாம்ப்ராஸ் உடைய சாதனையை சமன் செய்வார்.
- ஜாஸிம் புஹாரி


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha