JASH PHOTOGRAPHY

Wednesday, June 23, 2010

பதினேழு ஆயிரம் கிலோமீட்டர் மிதிவண்டியில் சென்று கால்பந்தை பார்த்த ரசிகர்


சுற்றுச்சுழல் பாதுகாப்பாளர்  மற்றும் புகைப்பட கலைஞருமான  பெடல் ஜோ (PEDAL JOE) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து தென் ஆப்ரிக்கா வரை குழந்தைகளுக்கான மிதியுந்து (GO-KART) மூலம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

52 வயதான ஜோவின்  தாயகம் பிரேசில். இவர் பிரேசில் கால்பந்து அணியின் ரசிகர். தற்போது நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண வேண்டும் என்ற ஆவலுக்குள்ளானார். இவர் இதற்கு முன்னர் இரண்டு உலக கோப்பை போட்டியை மிதிவண்டிமூலம், 56 நாடுகளுக்கு மேல் கடந்து சென்று கண்டவர்.  ஜோ  ஜனவரி 2008 ஆம் ஆண்டு மிதியுந்து மூலம் தென் ஆப்ரிக்கா செல்லும் தன்னுடைய திட்டத்தை தெரிவித்தார். இதற்காக பேர்க் டயஸ் (BERG TOYS) என்னும் டச்சு  நாட்டு  நிறுவனம் பிரத்யேகமாக  வண்டி ஒன்றை தயாரித்து கொடுத்தது. இந்த வண்டி நீண்டு உழைக்கும் சக்கரங்களும், முகப்பு விளக்குகளும், பல அதிநவீன வசதிகளும் கொண்டது. மேலும் சூரிய-மின் தகடு (சோலார் பேணல்) மற்றும் திருட்டு தடுப்பு தொழில்நுட்பங்களும் உள்ளது.

பெடல் ஜோ  10 மே 2008 அன்று பாரிஸ் நகர்  ஈபில் கோபுரம்  முன்பிருந்து தன் பயணத்தை  தொடங்கிய இவர் முறையே போர்த்துகல், ஸ்பெயின், மொரோக்கோ, மேற்கு சஹாரா, மௌரிடானியா, செனகல், மாலி, புர்கினா பாசோ, ஐவரி கோஸ்ட், காணா, டோகோ, பெனிம், நைஜீரியா, கேமரூன், கபொன், கோங்கலீசு குடியரசு, காங்கோ குடியரசு, அங்கோலா, நமிபியா நாடுகளை  கடந்து 1 ஜூன் 2010 அன்று ௦ தென் ஆப்ரிக்காவின்  ஜோஹன்னேச்புர்க்(johannesburg) நகர் சென்றடைந்தார். அங்கு அவர்  பேர்க் டயஸ் நிறுவன மற்றும் பன்னாட்டு அரிமா சங்க (Lions Club) பிரேதிநிதிகளால் வரவேற்கப்பட்டார், பொது மக்களும் அரவரமிட்டு அவரை உற்சாக படுத்தினர்.  இப்பயண தொலைவு 17350 கி.மி , இதனை 752  நாட்களில் கடந்து சாதனை படைத்த இவர் பயணத்தில் இரண்டு முறை மலேரியாவையும் ருசித்தார். மேலும் ஒரு முறை திருட்டுக்கும், இரண்டு முறை கொலை முயற்சிக்கும் உட்படுத்தப்பட்டார்
பல சோதனைகளை கடந்து சாதனை படைத்த ஜோ, தற்போது உலக கோப்பை போட்டிகளை கண்டு மகிழ்கிறார். போட்டிகள் முடியும் வரை தென் ஆப்ரிக்காவில்  தங்கி இருப்பார்.  ஜூலை பிற்பாதியில் தாயகம் திரும்புவார். இடைப்பட்ட காலத்தில் இவர் லெசோதோ, தென் ஆப்ரிக்கா, சுவாசிலாந்து  மற்றும் மொசாம்பிக் நாட்டு  அரிமா சங்க சேவை நடவடிக்கைகளை பார்வையிட திட்டமிட்டுள்ளார். 

பிரேசிலின் சினிமா இயக்குனர்களான ப்ருனோ லிமோ மற்றும் பாப்ரிசியோ, சினிமா தயாரிப்பு நிறுவனமான "அப்பாஸ் பிலிம்ஸ்" உடன் சேர்த்து இந்த பயணத்தை ஒரு குறும் படமாக எடுத்துள்ளனர். பெடல் ஜோவின் இந்த பயணத்தின் குறும் படம் பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு திரையிடப்படும்.
ஜாஸிம் புஹாரி | ஹாஃபில்


Wednesday, June 16, 2010

பிரான்சில் கடும் புயல், மழை. 19 பேர் பலி, 7 காணவில்லை


பிரான்சில் தென் பகுதியில் பெய்ந்த பலத்த மழை மற்றும் புயல் காற்று வீசியதால் பத்தொன்பது பேர் பலியாகி உள்ளதோடு ஏழு பேரை காணவில்லை என்று அந்த நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது. முன்னூற்றி ஐம்பது மில்லி மீட்டர் பெய்த இந்த மழை 1827 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரான்சில் நடக்கும் கடுமையான பாதிப்பு என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஒரு லட்சம் வீடுகள் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் பிரிக் ஹோர்டேபெவ்ஸ் (Brice Hortefeux)   செய்தியாளர்களுடன்    தெரிவித்தார்.  இந்த புயல் மழையால் நூற்றுகணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்து, பல வீடுகள் தண்ணீரால் மூழ்கியும் கிடக்கிறது. அங்குள்ள மக்கள் நகரமெங்கும் பாறைகள், கற்கள் மற்றும் சேற்றுகள் நிறைந்துள்ளதாகவும், வாகனங்களால் சாலைகள் அனைத்தும் அடைக்க பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்


Monday, June 14, 2010

காற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்


முன்னால் ஏரோனாடிக் மற்றும் போர்முல ஒன் பொறியாளரும் ஆனா GUY NEGRE என்பவர் அழுத்தமான காற்றினால் இயங்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். மோட்டார் டேவலாப்மென்ட்  இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) என்னும் கம்பெனியை பிரான்ஸ் நாட்டில் லக்சம்பெர்க் (LUXEMBERG) என்னும் ஊரில் உருவாகினார். அதில் இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியை மேம்படுத்தி வந்தனர். இவர்களுடைய படைப்புகளில் ஒன்று ஏர்பாட் (AIRPOD) என்று அழைக்கப்படும் நான்கு சக்கர வாகனம்.

இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடுப்பு ஆகும் . இதில் வாகனத்தை செயல்படுத்த  அழுத்தமான காற்றை கொண்டு பிஸ்டனை (PISTON) செயல் படுத்துகின்றனர். 5.45 HP வேகத்தில் கம்புச்தியன் என்ஜின் (COMBUSTION ENGINE) செயல் படுத்த முடிகிறது. இதில் ஒரு சிலிண்டரில் காற்று அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் , மேலும் ஒரு சிறிய மோட்டார் வெளியில் உள்ள காற்றை அழுத்தி டேங்கை எப்போதும் முழுமையாக வைத்துகொள்ள உதவும். இதனுடைய கம்ப்றேச்சொர் (COMPRESSOR) டீஸல் , எதனால் (ETHANOL) , என்னை மற்றும் மின்சாரம் போன்ற வற்றல் இயங்கும் ஆற்றல் உடையது . மேலும் 200 KM தொலைவு செல்ல வெறும் 0.5 EURO செலவாகிறது.
 ஏற்பாட் (AIRPOD) வாகனத்தில் மூன்று நபர்கள் செல்ல முடியும். இது குறைந்த விளையும், எந்த ஒரு தீங்கும் இல்லா வாகனமாகும் .

இது தற்போது பாரிஸ் விமானநிலையத்தில் உபயோக படுத்தபடுகிறது.
மோட்டார் தேவேலோப்மேன்ட் இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) நிறுவனம் ஆனது இந்திய நாட்டின் டாட்டா நிறுவனத்துடன் ஒபந்தம் செய்துள்ளது. இந்தியாவில் டாட்டா ஒனேகாட் (TATA ONECAT) என்னும் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
ஜாஸிம் புஹாரி


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha