JASH PHOTOGRAPHY

Wednesday, April 28, 2010

சர்க்கரை வியாதி தடுக்கஅமீரக பிரதமர் ஆலோசனை


ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேய்க் மொஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் சர்க்கரை வியாதி நாட்டில் தினமும் அதிகரித்து வருவதாகவும் அதை தடுக்க விளையாட்டு ஒன்றே சரியான தீர்வு என்று கூறுகிறார். இதனால் நாட்டில் இன்னும் அதிகமான விளையாட்டுகளை ஊக்குவிற்க்க வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொரு முறையும் உலகளாவிய விளையாட்டு போட்டிகள் அமீரகத்தில் அதிகம் நடததப்படுவதகவும் இதனால் நாட்டின் பெயர் மற்றும் பொருளாதரத்தில் நல்லா முன்னேற்றம் இருப்பதாக குறிப்பிடுகிறார்.  ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கில் ஒரு நபருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக என்பது குறிப்பிடத்தக்கது.  


Monday, April 26, 2010

அபு தாபி முசப்பாஹ்வில் எனக்கு பிடித்த பத்து உணவகங்கள் (MY FAVOURITE TEN RESTAURENTS OF MUSSAFAH, ABU DHABI )


ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்த வரையில் முக்கிய நகரங்களான துபாய் மற்றும் அபு தாபியில் உலகத்தின் முக்கியமான எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும் உணவகங்கள் ஏராளம் இருக்கின்றது. அதிலும் துபையில் தமிழ் நாட்டு உணவுகளுக்கென்றே ஒரு ஊரே இருக்கின்றது எனலாம் போல. சரவணா பவன், ஆப்பக்கடை, செட்டிநாடு ஆரம்பித்து மதுரை அப்பு, புஹாரி வரை எல்லா விதமான உணவகங்களும் இங்கு ஒரு கிளை தொடங்கி வைத்திருப்பார்கள். துபாய் அளவு இல்லை என்றாலும் அபு தாபியில் ஓரளவு வகைகள் உண்டு, அதிலும் முசப்பாஹ்வில் இன்னும் கொஞ்சம் கம்மி தான். ஆனால் வெறும் முசப்பாஹ்வை மட்டும் பார்த்தாலே எண்ணற்ற உணவகங்கள். இந்திய, அரபி ஆரம்பித்து பல வைகள் உண்டு, முசப்பாஹ்வில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் உணவகங்கள் இருக்கின்றது. அவை மெரிட், சென்னை, வாபா, சவுத் இந்தியன், டாரின் என்று பெரிய லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். 

கடந்த மூன்று வாரத்திற்கு மேலே இந்த முசப்பாஹ்வில் வசித்து வரும் நான் அதிகம் செல்லும் மற்றும் எனக்கு அதிகம் பிடித்த முதல் பத்து உணவகங்கள் இங்கே உங்களுடன் பகிர்த்து கொள்ள இருக்கிறேன். 

10  அபு நசியாஹ் ரெஸ்டாரெண்ட் 
(ABU NAZIYAH RESTAURENT):
 நான் முசப்பாஹ் வந்த புதிதில் அதிகம் ரசித்த உணவகம் இது. மிஸ்ரிகாரரின் கடை (இங்கே எகிப்து நாட்டவரை இவ்வாறு அழைப்பதே வழக்கம்). மூன்று வருடத்திற்கு முன்பு இந்த கடையை தேடியே முசப்பாஹ் வரும் அளவு இந்த கடையை இஷ்டமா இருந்தது அப்போது. இன்று வரை பிலாபில் (FALAFEL)க்கு சிறந்த கடை இது எனலாம். இங்கு கிடைக்கும் பிலாபில் ஒரு மாதிரி கீரை கலந்த மாதிரி இருக்கும். பிலாபில் பற்றி தெரியாதவர்களுக்கு... பிலாபில் என்பது நம்ம ஊரு வடை மாதிரி, சாதரணமா தெருவில் கிடைக்கும் பொருள். சில கடைகளில் பார்சல் வாங்க வந்தாலே சும்மா வெயிட் பண்ணுற வரை உண்ண தருவார்கள். அரபிக் உணவில் பிரபலமடைத்த இந்த பிலாபில் பின்னர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவிலும் பிரபலம் அடைந்தது. எந்தவித அசைவமும் கலக்காத முழு சைவம் இது.  

9 மெரிட் ரெஸ்டாரெண்ட் 
(MERIT RESTAURENT): 
நான் தங்கி இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் தமிழ் நாட்டு உணவகம் இது. நாகபட்டினத்தை சேர்த்தவர்கள் நடத்தும் இந்த உணவகம் கடந்த சில வருடங்களாக தமிழர்களுக்கு மத்தியில் ரொம்ப பிரபலம். நம்ம ஊரில் கிடைக்கும் சுவையை இங்கு தேடலாம். கொத்து பரோட்டா, ஊத்தப்பம், இட்லி, தோசை, பொங்கல், வடை, இடியாப்பம் என்று எல்லா தமிழக உணவகத்தில் கிடைக்கும் சுவை இங்கே உண்டு. ஆனால் இங்கே மலையாளிகள், வட இந்திர்யர்கள் மற்றுமின்றி மற்ற நாட்டவர்களும் அதிகம் உண்டு. நான் இங்கு அடிக்கடி செல்லவது எதற்கு என்றால், ஊரை போல இங்கு அக்கௌன்ட் (கணக்கு) வைத்து கொண்டு சாப்பிட்டு மொத்தமாக கொடுத்து விடலாம் பில்களை. 

8 . அல் ஷாம் பேலஸ் கபேதேரியா 
(AL SHAAM PALACE CAFETERIA): 
இது ஒரு  சூரி உணவகம். சிரியா நாட்டவர்களை சூரி என்று தான் அரபியர்கள் அழைப்பார்கள். இந்த கடையில் கிடைக்கும் ஷவர்மா(Shawarma) கொஞ்சம் வித்தியாசமான சுவையாக இருக்கும். 


7. ஹாட் ப்ளேட் 
(HOT PLATE):  

அமீரக இந்தியர்களில் மலையாளிகள், தமிழர்களுக்கு போட்டியாக இங்கே மங்களூர்காரர்களும் அதிகம் உண்டு.   இது ஒரு மங்களூர்காரரின் உணவகம் தான். இங்கே அரபிக், சீனா மட்டும் இந்திய உணவகள் கிடைக்கும் என்று எழுதி இருக்கும். ஆனால் இந்திய உணவுகளே அதிகம் விற்பனையாகும். பெரிய கம்பனிகளின் பார்ட்டிகளும் இங்கே அதிகம் நடைபெறும். 

6. மாடர்ன் அபாமியா அல் ஷாம் ரெஸ்டாரென்ட் 
(MODERN AFAMIA AL SHAAM RESTAURENT)

இதுவும் ஒரு சூரி (சிரியா நாட்டவர்) யின் உணவகம். சில வருடங்களுக்கு முன்பு இதே கடையை ஒரு பாலஸ்தானியார் வேறு பெயரில் நடத்தி வந்ததாக ஞாபகம். நான் பல முறை இங்கே சாப்பிட்டு இருக்கேன், ஆனால் சில மாதம் முன்பு இந்த கடை புது மாதிரியாக மாற்றப்பட்டு அழகாக காட்சி அளித்தது. ருசியும் மிகபெரிய மாற்றம், முன்பை விட ரொம்ப நான்றாக இருந்தது. ஷவர்மா புத்தி விதமான ஒரு சுவை. கோழி போன்று பெரிய ஆர்டர் இருந்தால் பிலாபில் இலவசம், இலையேல் ரெண்டு திர்ஹம் முதல் கிடைக்கும். 

5 . புட் லேன்ட் 
(FOOD LAND): 

அமீரகத்தில் புகழ் பெற்ற இந்திய பிசினஸ்மேன்களில் ஒருவரான பி.ஆர்.ஷெட்டி (B.R.Shetty) ஒரு சராசரி மனிதராக  இந்த நாட்டிற்கு வந்து இன்று பல துறைகளில் ஜொலித்தி வருகிறார். யூ.ஏ.ஈ. எக்சேன்ஞ் (UAE Exchange), நியோ பார்மசி (Neo Pharmacy), என்.எம்.சி மருத்துவமனைகள் (MNC Hospitals) இன்னும் பல துறைகளில் கொடிகட்டி வரும் இந்த நிறுவத்தின்   புட் லேன்ட் உணவகலத்தில் எல்லா விதமான  இந்திய உணவுகள் ரொம்ப சுவையுடன், ரொம்ப அழகான சுழலுடன் பரிமாறப்படும். குடும்பத்துடன் போக நினைகிற சிறந்த இந்திய உணவகம் முசப்பாஹ்வில் இது தான். 

4. அல் அக்கவி ப்ளவேர் கிரில் 
(Al Akkawi flower Grills): 
முசப்பாஹ்வில் இரண்டு வருடம் முன்பு இந்த பெயரில் ஒரு உணவகம் கூட கிடையாது. இன்று ஆறு இடங்களில் இருக்கிறது என்றால் இதோட வளர்ச்சி பற்றி சொல்லவேண்டும். எல்லா விதமான அராபிய உணவுகளும் இங்கே கிடைக்கும். 

3. அல் அக்கவி ப்ளவேர் கபேதேரியா  
(Al Akkawi flower Cafeteria): 
அல் அக்கவியின் முதல் கடை முசப்பாஹ்வில் இது தான். ஒன்றரை வருடத்திற்கு முன்பு புதிதாய் ஒரு கடை துவங்கி இருகிறார்கள் என்று இங்கு சென்றால் இதன் சுவை தினமும் எண்ணெய் இழுக்க ஆரம்பித்தது. அப்போது மதியம் கூட இங்கே வந்து சாப்பிடும் அளவு ரொம்ப நன்றாக இருந்தது. பொறித்த உருளை, கத்திரிக்காய், காலிபிளவர், பிலாபில், ஷவர்மா என இங்கே பிரபலமான உணவு வகைகள் ஏராளம். இங்கு வெறும் பார்சல் மட்டுமே கொடுக்க பட்டது. அதன் பின்பு ஒரே ஒரு மேஜையில் இரு நாற்காலிகள் மட்டுமே இருந்தது, பார்சலை மாட்டுமே நம்பி துவங்க பட்டது போல, இங்கே டேபிள் போடா கூட இடம் இல்லை. பக்கத்தில் ரோட்டில் நாற்காலிகள் போடா தனியாக பணம் கேட்ட வேண்டும். ஆனால் மதியம், இரவு என எப்போது வந்தாலும் நிற்க கூட இடமில்லாத அளவு கூட்டம் இருக்கும். அப்புறம் கடைக்கு வெளியே ரெண்டு மேஜைகள் போட்டாங்க, அப்புறம் நாலைந்து ஆச்சு. அப்படியே நெறைய வந்து இப்போ ஆறு கடைகள், எல்லாமே ரொம்ப பெரிய கடையாக வந்துவிட்டது. இருந்தும் இந்த கடை அப்படியே இருந்தாலும் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. 

2. அல் ஷப் ஷப் ரெஸ்ட் ரெஸ்டாரென்ட் 
(AL SAF SAF RESTAURENT): 

முசப்பாஹ்விலேயே எனக்கு ரொம்ப பிடித்த உணவகமாக பல மாதம் இருந்த இந்த உணவகம் கடந்த மாதம் தான் இரண்டாவதாக வந்தது. சிறந்தவற்றிருக்கு தனித்தனி சிறந்த விஷயங்கள் ஏராளம் உண்டு. எல்லா விதத்துலயும் ரொம்ப அழகான இந்த உணவகம் சமீபத்தில் அதிகம் maintenance  இல்லை. ருசியை பற்றி சொல்ல தேவை இல்லை. இங்கு கண்ணை மூடிக்கொண்டு என்ன வேணாலும் ஆர்டர் பண்ணலாம். உங்கள் நாவிற்கு எந்த குறையும் இருக்காது. முக்கியமான ஒரு விஷயம், முசப்பாஹ்விலே காஸ்ட்லியான உணவகம் இது தான். லெபனானி கடை, பொதுவா லெபனானி உணவகளும், பேக்கரிகளும் தான் சிறந்ததாக இருக்கும் எங்கு சென்றாலும், முசப்பாஹ்வில் லெபனானி உணவகங்கள் ஏன் அதிகம் இல்லை என்கிற குறையை இந்த ஒரு கடையே பூர்த்தி செய்திடும் எனலாம். 

1. லயாலி அல் ஷாம் ரெஸ்டாரென்ட் 
(LAYALI AL SHAM RESTAURENT)

இந்த வருடம் பெப்ரவரியில் தான் இந்த கடை துவங்கப்பட்டது என்றாலும் இன்று வரை எல்லா வியாழன் இரவு இங்கு தான் சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது. மற்ற நாட்களிலும் அவ்வபோது வருவது பழக்கம் என்றாலும் இங்கு ஒரு நாள் மதியம் சாப்ட்டு பார்த்தால் மற்ற உணவகத்துக்கு போக மனம் வராது. பிலாபில் (Falafel)  இங்கு ரொம்ப அழகா குறிப்பா எண்ணெய் இல்லாமல் இருக்கும். ஒரு நட்சத்திர உணவகத்தின் தரம் உணவில் இருப்பதை உணரலாம்.  இங்கு தரும் தூம் (Thoom) அதாவது வெள்ளைபூண்டு கூட எந்த வித மனம் இல்லாமல் ரொம்ப அழகா இருக்கும். அராபிய உணவகத்தில் முக்கியான ஷவர்மா இங்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லை என்றாலும் மற்றவை எல்லாம் நன்றாக இருக்கும். சூப், சாலட், துருக்கி காப்பி என நெறைய சொல்லும் படியான உணவு வகைகள். ஹாமூர் மீனின் சுவை இங்கே ரொம்ப ஸ்பெஷல். எல்லா விதத்துலயும் சிறந்த எனக்கு ரொம்ப பிடித்த உணவகம் முசப்பாஹ்வில் இது தான். 


Photographed & Written by Jaffer Shadiq.Z


ஒன்பது வயதில் நான்கு மைக்ரோசாப்ட் சான்றிதழ் வென்று சாதனை


இந்த தலைமுறையின் மிகப்பெரிய வளர்ச்சி கணிபொறியும், மொபைல் போன்களும். இந்த இரண்டும் இன்றைய மக்களின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் பேஸ்புக் கூட இந்த இந்த இடத்திற்கு வந்துவிடும் போல, லொள். மீட் மார்கோ கலாசன் (Meet Marko Calason) என்கிற ஒன்பது வயது சிறுவன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நான்கு சான்றிதழ் வாங்கி உள்ளார். வெறும் ஏழு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான மாசேடோனியா (Mocedonia) என்கிற நாட்டை சேர்ந்தவரான  இந்த சிறுவன் தனது ஆறாவது வயதில் முதல் மைக்ரோசாப்ட் சான்றிதழை வென்று உலகின் சிறிய வயதில் இந்த சான்றிதழ் வாங்கிய சிறுவன் என்கிற பெருமையை பெற்றார். இப்போது நான்கு முறை வென்று இருக்கிறார் தனது ஒன்பது வயதில் என்பது குறிப்பிடதக்கது. இந்த சிறுவன் தனது மூன்றாவது வயதிலேயே கணிப்பொறியில் சின்ன சின்ன வேலைகள் செய்ய துவங்கினாராம். அதாவது விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது, ரிமோட் டெஸ்க்டாப் போன்றவை பல முறை உபயோக்கிக்க ஆரம்பித்தாராம். இன்றைய சிறு குழந்தைகள் கணிபொறி என்றால் கேம்ஸ் விளையாடுவதும், பேஸ்புக் போன்ற வெப்சைட்களும் தான் அதிகம் பயன்படுத்துவர். ஆனால் இவர் ஈமெயில் பண்ணுவது, பைல்களை ஷேர் பண்ணுவது இன்னும் ரோபோட் தயாரிப்பது போன்றவற்றிலே ஆர்வமாக இருந்தார் என்று சொல்கிறார். MCP, MCDST, MCSA மற்றும் MCSE போன்ற சான்றிதழ் வென்றுள்ள இந்த சிறுவன் தினமும் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் வரை கூட கணிப்பொறியை பயன்படுத்துகிறாராம். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த சிறுவன் இன்று நூற்றுகணக்கானவர்களுக்கு கண்ணிபொறி சொல்லியும் கொடுக்கிறார். 


Saturday, April 24, 2010

இந்த வருடத்தில் அதிகம் முன்னேறிய விமான நிலையமாக அபு தாபி வெற்றி



ஸ்கைட்ரக்ஸ்(SKYTRAX )  - உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் சிறந்து விழங்கும் விமான நிலையங்களில் பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் சுத்தம், மக்கள் அதிகம் வருவது, பாதுகாப்பு, ட்ரான்சிட், உணவு என பல துறைகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த விமான நிலையங்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். இது இன்னும் ஒவ்வொரு நாட்டின், கண்டத்தின் சிறந்த விமான நிலைத்திருக்கும் விருதளித்து வருகிறது. இந்த வருடமான 2010 இல் உலகிலேயே அதிகம் முன்னேறிய, அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக பல வழிகளில் முன்னேறிய சிறந்த மூன்று இடத்தில அபு தாபி முதல் இடத்திற்கான விருதை வென்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 47 புதிய இடங்களுக்கு சேவைகளை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வளைகுடாவில் உள்ள பல்வேறு விமானங்களில் இரண்டாவது  சிறந்த விமான நிலையமான அபு தாபியின் இந்த விருதை அபு தாபி விமான நிலையத்தின் Chairman H.E.கலிபா அல் மஸ்ரூயி (H.E.KALIFA AL MAZROUEI) வாங்கினார். 

வளைகுடாவின் சிறந்த விமான நிலையங்கள்(2010):
முதலிடத்தில்... பஹ்ரைன் விமான நிலையம் 
இரண்டாவது இடத்தில... அபு தாபி விமான நிலையம் 
மூன்றாவது இடத்தில... துபாய் விமான நிலையம் 

2010இல் அதிகம் முன்னேறிய விமான நிலையங்கள்:
முதலிடத்தில்... அபு தாபி விமான நிலையம் 
இரண்டாவது இடத்தில... ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையம் 
மூன்றாவது இடத்தில... கைரோ விமான நிலையம் 


Thursday, April 22, 2010

ஐ.பி.எல் இறுதி போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்



உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய விருந்தான ஐ.பி.எல் வருகிற ஏப்ரல் இருபத்தைந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. இறுதி போட்டியின் முடிவில் இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்க இருக்கிறார். ஏற்கனவே அறிவித்த படி மணிரத்னம் இயக்கிய ராவண் படத்தின் இசை ஏப்ரல் இருபத்தி நாலாம் தேதி நவி மும்பையிலுள்ள பட்டில் மைதானத்தில் வெளிவர இருக்கிற நிலையில், அதற்கு மறுநாள்   ஐ.பி.எல்  நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறார். ஏப்ரல் இருபத்தி நாலாம் தேதி நடக்கவிருக்கும் பாடல் வெளியீட்டு விழாவில் ராவண் பட குழுவினர்களும், மொத்த பச்சன் குடும்பமும் கலந்து கொள்ள இருக்கிறது. கடந்த வருடம் ஆஸ்கார் வென்றபின் மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் முதல் நேரடி ஒளிபரப்பு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது இதுவும் ஆஸ்கார் விருதை போல ஒரே நேரத்தில் இரண்டு விருதுகள் அவரின் மும்பை ரசிகர்களுக்கு.


Tuesday, April 20, 2010

ஐ-பேடில் பயன்படுத்தும் லாக் மீ இன்


ஆப்பிள்-இன் ஐ-பேட் வெளியான சில வாரங்களிலேயே விற்பனையில் சாதனைகளை படைத்தது வந்தாலும் முதலில் வெறும் சதாரண ஐ-பேட், அடுத்து சில தினங்களில் வை-பைவ் கொண்ட ஐ-பேட் என்று வெளிவந்த நிலையில் இப்போது ஐ-பேட்-இன் 3G மாடல் விரைவில் வர இருக்கும் தேதியும் அறிவிக்கப்பட்டது. வருகிற மே மாதம் ஏழாம் தேதி 3G மாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  இதற்காக ஒரு லட்சத்தி ஐம்பத்தயிரம் அப்ளிகேஷன்கள் ஐ-பேட் வெளிவரும் முன்பே பிரபலபடுத்தபபட்டது. 

இப்போது நாம் லாக் மீ இன் என்கிற மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம். லாக் மீ இன் என்கிற இந்த நிறுவனம் 2003 ஆம் ஆண்டு முதல் ரிமோட் மூலம் எங்கிருந்தாலும் நம் கணினியை உபயோகிக்கும் வழியை கொஞ்சம் சுலபமாக இருக்க அறிமுகம் செய்தது. இப்போது இந்த நிறுவனம் ஐ-பேடிற்கென்றே ஒரு எளிய வழியை அறிமுகப்படுத்தி   உள்ளது.  LogMeIn Ignition  என்கிற இந்த மென்பொருளின், Version: 1.1.138


 


Monday, April 19, 2010

மஷ்யாத் மால்




ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபி மாநிலம் தான் அந்த  நாட்டின் 86 .7 சதவீதம் நிலபரப்பை கொண்டு இருந்தாலும் அபு தாபி நகர் துபாய் அளவு பெரியது அல்ல. அபு தாபியை தவிர்த்த மற்ற பகுதிகள், ஏன் 95 % பாலைவனமாகத் தான் இன்னும் உள்ளது. ஆனால் இப்போது யாஸ், சாதியத், பூ தினா, சமாலியா, அல் ரீம் என பல ஐலாண்டுகள் வருகின்றது. ஆனால் இப்பொது அபு தாபியை அடுத்து கொஞ்சம் பிரபலம் (அதாவது மக்கள் அதிகம் புழங்கும் இடம்) என்றால் முச்சப்பாஹ் தான். இதை ஓட்டியுள்ள மதினாத் சய்யத், கலிபா சிட்டி போன்றவை மிக வேகமா பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஷாப்பிங் மால்கள் வருவதில் போட்டி இல்லாமல் இருக்குமா? 'மஷ்யாத் மால்' என்கிற பெயரில் முச்சபாஹ் லேபர் கேம்ப் பக்கமான பாத்திமா சூப்பர் மார்க்கெட் மட்டுமே அறிந்திருந்த இடத்தில இப்போது ஒரு நட்சத்திர ஹோட்டல், மால் என்று பல கட்டிடங்கள் வந்துகொண்டே இருக்கிறது. முன்பு சபீர் மால் மட்டுமே அறிந்திருந்த முச்சப்பாஹ் அதை சுற்றி இப்போது கட்டிடங்கள்  சூழ்ந்து உள்ள நிலையில் டெல்மா மால் என்று புதிதாய் ஒரு மால் கேர்ரிபோர் உடன் சேர்த்து வருவதால் மஷ்யாத் மாலில் உள்ள லூ லூவிற்கும் போட்டி. லூ லூ அமைத்துள்ள அதே கட்டிடத்தில் தான் எத்திஹாத் போன்ற பெரிய கம்பெனி ஆட்களும் தங்கியுள்ள இடம் என்பதால் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்த வரை சூப்பர் மார்க்கெட்டில் மிகப்பெரிய இரண்டு கம்பெனிகளில் ஒன்றான லூ லூ அமைத்துள்ள மஷ்யாத் மால் அழகான விளக்குகளால் அலங்கரிக்க படுவதை மேலேயுள்ள படத்தில் பார்க்கலாம். நேற்று இரவு மஷ்யாத் மால் சென்ற பாத்து நான் எடுத்த படங்கள் இவை.


Saturday, April 17, 2010

Singers of RAAVAN - Combination of Mani Ratnam and A.R.Rahman


India's best film maker Mani Ratnam's new movie RAAVAN starring Abhishek Bachchan & Aishwarya Rai is set to release on June 18, 2010. Academy award 


winner Music Maestro A.R.Rahman's favourite director Mani Ratnam once again joined each other for 12 times. Audio was planned to release on April 24, 


2010 (Saturday). But the first Short trailer of the film, Music Launch Teaser launched on YouTube yesterday (April 16, 2010 - Friday). Audio rights by 


T-series, But the movie produced by Reliance's Big Pictures. 


There are 8 Sound Tracks in the Film Album which listed below (Hope this is not a officially confirmed list)




Beera Beera.. sung by Vijay Prakash
Behne De... sung by Karthik
Kata Kata... sung by Ila Arun, Sapna Awasthi, Kunal Ganjawala
Khilli Re... sung by Reena Bhardwaj
Madhuban Chor... sung by Asha Bhonsle, Chitra Sivaraman
Ranjha Ranjha... sung by Rekha Bhardwaj, Javed Ali
Thok De Killi... sung by Sukhwinder Singh
Pairon Pe Jannat Hai... sung by Lucky Ali  


About the Singers:


Vijay Prakash: 
* He is a Kanada Singer from Mysore, Karnataka.
* His first Song from Swades, Music by A.R.Rahman
* He was participated in Zee TV's SA RE GA MA hosted by singer Sonu Nigam
* One of the singer of Academy award winning Song 'Jai Ho' (Slumdog Millionaire)
* Recent hit song 'Hosanna' from Vinnaithandi Varuvaya, latest Tamil movie composed by A.R.Rahman, Lyrics-Thamarai
* Sanskrit song 'Om Shivoham' from the Tamil movie 'Naan Kadavul', Composed by Illayaraja, Lyrics-Vaali


Karthik:
* Famous Tamil Singer from Chennai
* His first movie song was Nendikiren from the Tamil movie STAR. Music-A.R.Rahman, Lyics-Pazhani Bharathi
* He won 3 filmfare awards as a Best Singer for the films Ghajini(Tamil), Happy Days (Telugu) & Kotha Bengaru Lokam(Telugu)
* He sung so many famous songs like Maddy(Minnale), Oliyile (Azhagi), Baba, Delhi6, Boys, Yuvvraj, Ayan, Happy days, Autograph, vinnaithandi Varuvaya, Ye Maaya Chesaave, Sainikudu, Okkadu, Varanam Aayiram etc.
* He was introduced by A.R.Rahman, but by the help of Singer Srinivas


Ila Arun
* She is a  Rajastani pop singer
* Her famous song 'Chooli Ke Peeche..' from Kalnayak won Best Female Singer (Filmfare) in 1994 (Music by Laxmikant-Pyarelal)
* Other famous songs 'Ringa Ringa' from slumdog Millionaire
* Muthu mazhai from Mr.Romero (Tamil song by A.R.Rahman) in 1996


Sapna Awasthi
* Bihari singer from Bollywood
* Famous by the song 'Chaiyaa chaiya' from Dil Se (Music by A.R.Rahman) with Sukhwinder Singh in 1998 (Mani Ratnam film)
* Other famous songs from Raja Hindustani, Company, Hum Tumhare hain sanam etc.


Kunal Ganjawala:
* Famous singer in Bollyowood, also in Marathi & Kanada.
* Bheegey Hont (Murder) won Zee Cine Award for Best Playback Singer
* He was participant of Zee TV's SA RE GA MA once, later he was also appeared as a Judge
* He participated in a concert in North America 'The Incredible' with Asha Bhosle, Sonu Nigam and Kailash Kher
* Famous songs in Krish, Salaam Namaste, Saathiya, Sawariya, Kaaminey, Pokkiri(telugu)
* Also sung a song in Ilayaraja's Tamil movie 'Naan Kadavul'


Reena Bharadwaj:
* London born Indian Singer
* Nominated in MTV Immies Award for Best New Film Talent of 2004
* Sung with A.R.Rahamn musical films like  Mangal Pandey: The Rising, Sakkarakatti, Baba etc.


Asha Bhosle: LEGEND in MUSIC


Rekha Bhardwaj: 
* Wife of Director Vishan Bharadwaj
* Her song 'Genda Phool' of Delhi 6 won Filmfare Award for Best Female Playback Singer 2010 (Music-A.R.Rahman)
* Famous songs in Ishqia, Omkara,  Kaaminey, Delhi 6, No smoking etc.


Javed Ali:
* Very famous by Jashn-E-Bahra from Jodha Akbar (Music-A.R.Rahman, Lyrics-Javed Akhtar)
* Other songs with A.R.Rahman with Delhi6, Yuvvraj, Ghajini
* Punjabi track 'Nagaada Nagaada' from the movie 'JAB WE MET' with Sonu Nigam (Music-Pritam, Lyrics- Irshad Kamil)
* Other famous Tamil songs from Yuvan Shankar Raja in the tamil films like  Kunguma Poovum Konjum Puravum, Sarvam, Vaamanan, Mutthirai
* Latest hit song from the movie, Tum Mile: 'Tu Hi Haqeeqa' Music-Pritam, Lyrics-Sayeed Qadri
* Debut film 'Beti No.1'


Chita Shivaraman:
* Bangalore based Tamil singer
* Famous songs like Thozha Thozha (Pandavar Bhoomi)
* Tamil songs in A.R.Rahman music like Thenali, Enaku 20 Unaku 18, Kangalal Kaithu Sei etc


Sukhwinder Singh:
* So many HIT songs by sukhwinder Singh in Bollywood like Dil Se, Om shanti Om, Rab Ne Bana Di Jodi 
* Perfomed at his age-8 in ZEE TV's SA RE GA MA
* He won Filmfare Best Male Playback Award for the song 'Chaiyya Chaiyya' Dil Se (Music-A.R.Rahman, Lyrics-Gulzar)
* Academy award Winning Song 'Jai Ho' Singer (Music-A.R.Rahman, Lyrics-Gulzar)
* Filmfare Best Male Playback Award for the song 'Haule Haule', Rab Ne Bana Di Jodi (Music-Salim-Sulaiman, Lyrics-Jaideep Sahni)
* Other famous songs with A.R.Rahman like Nahin Samne(Taal), Lucky Lucky(Ratchagan), Jaane Tu Ya Jaane Na (JTYJN), Piya Ho (Water), Chinnama Chilakamma (Meenaxi), Woh Kisna Hai (Kisna), Aaj Dil Gustakh Hai (BLUE), Mitwa (LAGAAN) etc.
* Other films like Tere Naam, Fashion, Garam Masala, Yaadein, AKS, Kurbaan etc


Lucky Ali:
* US borned Inadian Singer
* Won International awards for his album- Best Pop Male Vocalist at the 1996 Screen Awards and the Channel V Viewers Choice Award in 1997
* Famous songs in films like Kaho Naa Pyaar hai, AKS, Bachna Ae Haseeno , Yuva etc.
* He also Sung famous tamil songs like Secret of Sucess(Boys), (Hey Goodbye Nanba)Aayitha Ezhuthu etc


Thursday, April 15, 2010

சாஹிப் ஷாசத் கான் நினைவுகள்


நிந்தவூர் ஷிப்ல்யின் பெயர் இடப்படாத ஒரு கவிதை தொகுப்பு நூலை பிளின்ட் பதிப்பகத்தில் வெளியிடுவதற்கு இருந்த ஒரு காலகட்டத்தில் நான் தொடர்பு கொண்ட நபர்களில் ஒருவர் 'சாஹிப் ஷாசத் கான் (Zohaib Shahzad khan) பாகிஸ்தானியர். இலங்கையை சேர்த்த நிந்தவூர் ஷிப்லியின் எழுத்துக்கு ஜெர்மனியின் பாலினோ தோரோபீவ் தான் எல்லா படங்களும் வரைவதாக இருந்து பின்னர் சில படங்கள் மட்டுமே வரைய முடிந்த நிலையில் சாஹிப்பை முன் அட்டையை வடிவமைக்க தொடர்பு கொண்டு இருந்தேன். அவரும் என்னை போல அபு தாபியில் தான் வசித்து வந்தாலும் நாங்கள் சந்தித்தது இல்லை. எப்படி அவர் பழக்கம் கிடைத்தது என்று சரியாய் ஞாபகம் இல்லை. நாங்களும் பெயரை சரியாய் முடிவு பண்ணாத காலம் என்பதால் எழுத்தாளர் பெயரான நிந்தவூர் ஷிப்ல்யின் பிளின்ட் புக் என்றே சொல்வர் அவர். சில முறை தொலைபேசியில் பேசி இருப்போம், மற்றதெல்லாம் இமெயிலில் தான் பேசி கொள்வோம். கடைசில் அவர் வெறும் முன் அட்டைக்கு மட்டும் வடிவமைக்க பெரிய தொகை கேட்டதால் அவரை நானும் ஷிப்ல்யும் இந்த புத்தகத்திற்கு வேண்டாம் என்று விட்டு விட்டோம். ஆனாலும் அவர் வரும்காலங்களில் வரும் புத்தகமோ  அல்லது ஒரு குறும்படத்திருக்கோ சேர்த்து பனி செய்யலாம் என்று இருந்து விட்டார். பிறகு நங்கள் ஷிப்ல்யின் அந்த தொகுப்புக்கு தற்கொலை குறிப்பு என்று பெயர் இட்டு இன்றுவரையும் வெளிவராமல் விரைவில் வெளியிட ஏற்படுள்ள இந்த நிலையும் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் விண்டோஸ் லைவ் மெசன்ஜெரில் தொடர்பு கொண்டார். ஷிப்லியின் பிளின்ட் புக் என்ன ஆச்சு? நன்றாக வெளியானதா என்றார், எனக்கு சரியாக நினைவிற்கு வரவில்லை அவர் யார் என்று. அவரை சுத்தமாக மறந்து விட்டேன். ஏனென்றால் இரு வருடம் நிறைவடைந்து விட்டது இந்த புத்தகம் வெளியிடும் வேலை தொடங்கி. அதுவும் புத்தகத்தின் எல்லா பணிகளும் முடிந்தும் கூட வெளியிடாமல் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. கொஞ்ச நேரத்திற்கு பிறகே கண்டுபிடித்தேன் அவரும் கூட நாம் அதிகம் பேசியதில்லை உங்களுக்கு உடனே தெரிஞ்சிருக்க வாய்ப்பும் இல்லை என்றார். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு இனிமே உங்களை ஞாபகம் இருக்கும் கண்டுபிடித்து விடலாம் என்றேன். சில உரையாடல்களில் பெரிதாக பேசாமல் சென்று விட்டேன் எதோ ஒரு வேலையால். சரி என்று சில நாள் கழித்து பேஸ்புக் சென்று அவர் ப்ரோபைல் சென்று  'உங்கள் வடிவைக்கும் பனி எப்படி போகுது என்று மெசேஜ் அனுப்பினேன். ஏதோ ஒரு உறுத்தல் மறுபடியும் அவர் ப்ரோபைல் சென்றேன், நெறைய வால் வந்து குமிந்து இருந்தது, அதிலெல்லாம் ஒரே அதிர்ச்சி எல்லாரும் 'நீ என் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்", "உன் சிரிப்பை மிஸ் பண்றோம்", "உனக்கு அமைதி நிலவட்டும்", "மறுபடியும் வா, வந்து என்ன அச்சுன்னு சொல்லு", "உன்னை என்றும் மறக்க முடியாது" இவ்வாறு நிறைய மெசேஜ். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது. ஒருவர் "உன் திடீர் மரணத்தை நாங்கள் எதிர் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் பதில் சாஹைபிடம் இருந்து வந்து இருந்தது, அவரின் நெருங்கியவர யாரும் இருந்து இருப்பாங்களா இல்லை இவருக்கே ஏதும் ஆனதா, ஒன்றும் புரியவில்லை. 




ஏன்னா சிலவற்றிருக்கு அவரிடமே பதிலும் வந்து இருந்த்தது. நான் மறுபடியும் அவருக்கு என்ன அச்சு என்று மெசேஜ் அனுப்பினேன். யாரவது பதில் சொல்வார்கள் என்று. மறுநாள் பதில் வந்தது அவர் கடந்த மாதம் இறந்துவிட்டார், ஹார்ட் அட்டாக் என்று. அதிர்ச்சி அடைந்த நான் சொன்னேன் அவர் கூட சமீபத்தில் பேசினேன் என்று, அதற்கும் பதில் வந்தது மறுநாள் என் வாலில் 'மார்ச் 7 , 2010  இல் அவர் இறந்து விட்டார், நான் அவர் மனைவி என்று. இன்று வரை அவர் வாலில் அடிக்கடி நெறைய மெசேஜ் வருது "என் வாழ்வில் வந்தமைக்கு நன்றி" என்று. அவர் திருமணம் முடிந்து வாழ்த்த ஒரே வருடத்தில் அவருக்கு ஒரு குழதையும் பிறந்து இருக்கிறது, அதற்கு அங்கே மெசேஜ் இருந்தது, "என் வாழ்வில் வந்தமைக்கும், அதற்கு பரிசு தந்து விட்டு போனதற்கும்" என்று. இது தான் உண்மையான காதல். அவரிடம் மேலும் விசாரிக்க மனம் இல்லை எனக்கு. ஆனால் சென்று விட்ட அன்பை நினைத்து வாழும் அவருக்கு இறைவன் வாழ்கையில் அமைதியும் சந்தோசமும் தருவான் என்று பிராத்தனை செய்வோம். சாஹைபிற்காகவும் பிராத்தனை செய்வோம். 
-ஜாஃபர் ஷாதிக்  



Wednesday, April 14, 2010

சீனாவில் பயங்கர பூகங்கம்


சீனாவில் இன்று காலையில் நடந்த பயங்கர பூகம்பத்தில் தற்போதைய (இதை எழுதும் போது) செய்தியின் படி 300 பேர் பலியாகி உள்ளனர் என்றும் 8000  (எட்டாயிரம்) பேர் காயம் பட்டிருக்க கூடும் என்று உலகின் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவிகின்றன. ஹைத்தி, சிலி, துருக்கி என சமீபத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் பூகங்கள் எப்போதையும் விட மிக அதிகமாக நடந்து வருகிறது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களுக்காக பிராத்தனை செய்து கொள்வோம். (தற்போதைய தகவல்: இறப்பு: 400௦௦, காயம்: 10,000 க்கு மேல்௦௦. இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டில் இதே சீனாவில் நடந்த பூகம்பத்தில் 90,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நான் தங்கி  இருக்கும் அபு தாபியிலும் இன்று காலை அதிகமான காற்றோடு சிறு மழையும் பெய்தது. புகைப்படங்கள் பார்க்க 




Saturday, April 10, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா


மின்னலே, 
காக்க காக்க, 
வேட்டையாடு விளையாடு, 
பச்சைக்கிளி முத்துசரம், 
வாரணம் ஆயிரம் படங்களை எடுத்த கௌதம் மேனன் இயக்கிய ஆறாவது தமிழ் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. 
இது போக இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரு படம் எடுத்து இருந்தார். 

மணி ரத்னத்தின் பல வழிகளை பயன்படுத்தும் கௌதம் மேனன். அவரை போல படங்களில் ரயில் காட்சிகள், ஓரிரு வார்த்தைகளில் வசனங்கள் பேசுவது என நூறு காரனங்கள் சொல்லலாம். அதே போல ஒரே நேரத்தில் ஒரே கதையை இரு மொழிகளில் எடுக்கும் பழக்கத்தையும் தொடங்கிவிட்டார். 

விண்ணைத்தாண்டி வருவாயா எடுத்த அதே நேரத்தில் இதே கதையை தெலுங்கிலும் 'ஏ மாய சீசாவே' ('என்ன மாயம் செய்தாய்' என்று பொருள்)

முதல் முறையாக ஒரு தமிழ் படத்தின் பாடல் வெளியீடு வெளிநாட்டில் வெளியானது இந்த படத்தின் பாடல்களே. ப்ரிடிஷின் மிக உயர்ந்த விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் இசை என்பதால் லண்டனில் வெளியானது.

படத்தில் சிம்பு எடுக்கும் படமான 'ஜெஸ்ஸி'யின் நாயகனாக நடித்த நாக சித்தான்யா தான் இதன் தெலுங்கு பதிப்பின் கதாநாயகன். அதே படத்தில் நாயகியாய் நடித்த சமந்தா ருத் பிரபுவும் தெலுங்கு படத்தின் கதாநாயகி. 

ஏ மாய சீசாவே என்கிற தெலுங்கு படத்தில் அந்த கதாநாயகன் எடுக்கும்  'ஜெஸ்ஸி' என்கிற படத்தின் நடிகர்களாக சிம்பு மற்றும் த்ரிஷா நடித்து உள்ளனர்.

ஆனால் தெலுங்கு படத்தில் இருவரும் சேர்ந்து விடுவது போல படத்தின் கிளைமாக்ஸ் அமைத்து உள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

ராஜீவ் மேனனுடன் உதவி இயக்குனராக திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பனி புரிந்த கௌதம் அவர் படமான 'மின்சார கனவு' படத்திலும் பணியாற்றி இருக்கிறார். அந்த படத்தின் பாடல் வரிகளான 'விண்ணைத்தாண்டி வருவாயா' வே இந்த படத்தின் தலைப்பிற்கு காரணம். 

ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் அவர்களே 'ஒமானே பெண்ணே' பாடலின் இடையில் வரும் மலையாள வரிகளை எழுதியுள்ளார். 

22 வருடம் மலையாள சினிமாக்களில் பாடல்கள் எழுதி வந்த கைத்தபுரம் தாமோதரன் இந்த படத்தில் வரும் முழு மலையாள பாடலான 'ஆரோமலே'வின் பாடல் ஆசிரியர். இவருக்கு இசை அமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், நடிகர்  என பல முகங்கள் உண்டு. இசைத் துறையில் இவர் எண்ணத்ற்ற விருதுகளையும் குவித்த்துள்ளர்.

இந்த இரண்டு மலையாள பாடல்களும் தெலுங்கு படத்தில் அப்படியே இடம்பெற்று உள்ளது. 

இதுவும் கூட மணி ரத்னம் எடுத்த ஹிந்தி படமான 'தில் சே'வில் வரும் பாடலை தமிழில் நெஞ்சினிலே என்று எடுக்கும் பொது அதே மலையாள வரிகளை அப்படியே பயன்படுத்தி இருப்பார். அதே ஸ்டைல், (லொள்)

முதல் மூன்று நாளில் சென்னையில் மட்டும் இதன் வசூல் 64.66 லட்சம் ரூபாய்  

லண்டனில் இசை வெளியானது டிசம்பர் 19இல், ஆனால் இந்தியாவில் இருபத்தைந்து நாள் கழித்து ஜனவரி பன்னிரெண்டில் வெளியானது 

முதல் ஐந்து வாரத்தில் சென்னை மற்றும் அதன் சார்ந்த பகுதிகளில் இந்த படத்தின் வசூல் 5.௧௩ கோடி

சிம்பு நடித்த படங்களிலே மிக அதிகமான வசூல் பெற்றுள்ளது

படத்தில் கதாநாயகன் எடுக்கும் படமான 'ஜெஸ்ஸி'யின் நாயகனாகவும் தெலுங்கு பதிப்பான 'ஏ மாய சீசாவே' படத்தின் நாயகருமான 'நாக சித்தான்யா' பிரபல நடிகர் நகர்ஜுனாவின் மகன் (ரட்சகன், இதயத்தை திருடாதே போன்ற படங்களால் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர்) 


Wednesday, April 7, 2010

Clash of Titans, Box Office record


Remake of an 1981 film, Clash of Titans was directed by Louis Leterrier. He was the director of Transporter 2, Unleashed (2005) and The Incredible Hulk (2008).  English born Austalian Actor, Sam Worthington starred in this film. He was well known as an 'Avatar' actor. This movie leads the last week Box Office Collections as 61 million US dollars, which breaks the reord of Scary Move 4's record in box office as a highest Easter movie debut, 40.2 million US dollars. This movie was produced by Basil Iwanyk, Kevin De La Noy and Richard D. Zanuck. Written by Lawrence Kasdan, Travis Beacham, Phil Hay and Matt Manfredi. Music composed by Ramin Djawadi. He is a famous Iranian composer who worked as a assistant composer in Batman Begins, Pirates of Carribean etc. 

The following Graph shows the highest of Weekend Box Office Collections and its earnings in the first 14 weeks of 2010


Tuesday, April 6, 2010

அபு தாபியில் எர்த் ஹவர்



கடந்த மார்ச் இருபத்தி ஏழாம் தேதி அனுசரிகப்பட்ட எர்த் ஹவர்-இல் அபு தாபியில் உள்ள அறுபத்தி ஆறு ஹோட்டல்களில்   விளக்கை அணைத்து 8,601 KW/Hr மின்சாரத்தை சேமித்து உள்ளனர். உலகமெங்கும் பல லட்சகணக்கான மக்கள் வெவ்வேறு நேரத்தை கொண்டவர்கள் அதே சமயத்தில் தேவையற்ற விளக்குகளை எல்லாம் அணைத்து இந்த மூன்றாவது எர்த் ஹவர்-இல் கலந்து கொண்டனர்.


அபு தாபியில் டாக்சியின் வேகத்தை குறைக்க ஒரு புது யுக்தி


கடுமையான வேகத்தில் செல்வதால் அதிகமான விபத்துக்கள் நடப்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக நடக்கும் ஒன்றாகி விட்டதால் எத்தனையோ தடுப்பு நடவடிக்கைகள் இந்த நாடு எடுத்து வருகிறது. துபையை போல அபு தாபியிலும் மிக அதிகமான கேமராக்கள் இந்த அந்த ஆண்டில் புதிதாக சாலைகளில் பொறுத்த பட்டு உள்ளது. இன்னும் நெறைய வரவும் உள்ள நிலையில் நேற்று அபு தாபி சென்றிந்த பொது ஒரு டாக்சியில் 'வேக தடை எச்சரிக்கை' பார்க்க முடிந்தது, அதாவது அந்தந்த சாலைகளுக்கு ஏற்ப வேகம் அதிகமானல் வேக தடை எச்சரிக்கை அந்த டாக்சியின் ஸ்க்ரீனில் எச்சரிக்கும். இது போன்ற பல நல்ல விஷயங்கள் இங்கு பார்க்க முடிந்தாலும் நாம் தான் கவனமாக செல்ல வேண்டும் சாலைகளில்.


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha