JASH PHOTOGRAPHY

Saturday, June 12, 2010

உலக கால்பந்து போட்டியில் இந்தியாவின் பங்கு


                       கால்பந்து உலக கோப்பை தென் ஆப்ரிக்க நாட்டில் துவங்கி உள்ளத்தால் உலகம் முழுவதில் உள்ள கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .  உலக அளவு கால்பந்து போட்டிகளில் நமது தாய்நாட்டின் நிலைமை என்ன ?
                       1948 ஆம் ஆண்டு இந்திய தேசிய அணி FIFA வில் ஒரு அங்கத்தினராக சேர்ந்தது . அன்று முதல் இன்று வரை இந்திய தேசிய அணி ஒரே ஒரு முறை உலக கோப்பை போட்டிகளில் விளையாட தகுதி பெற்றது. 1950 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஆசியா கண்டம் பிரிவில் பங்கேற்ற அணிகள் அனைத்தும் நீக்க பட்டன இதனால் இந்திய அணி விளையாட தகுதிபெற்றது . ஆனால் FIFA அமைப்பின் விதிப்படி பூட்ஸ் காலணி இல்லாமல் விளையாட முடியாது . இந்திய வீரர்களோ வெறும் காலில் விளையாடுபவர்கள் என்று அறியப்பட்டு வந்தனர் , இதனால் இந்திய வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர் .
              அன்று முதல் இந்திய தேசிய அணி FIFA உலக கோப்பையில் விளையாட தகுதி பெறவே இல்லை. 1954 - 1982 ஆம் ஆண்டுகள் இந்திய அணி தகுதி போட்டியில் பங்கேற்கவே இல்லை. 1986 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்திய அணி பங்கேற்கிறது ஆனால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற முடிய வில்லை . இந்த ஆண்டு உலக கோப்பை தகுதிக்காக இந்திய அணி லெபனான் அணியுடன் இரண்டு முறை மோதியது , ஒரு முறை தோல்வியும் ஒரு முறை சமம் (DRAW) ஆனது . இதை அடுத்து லெபனான் அணி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய அணி வெளியேறியது .
         இந்திய அணி FIFA உலக தர வரிசை பட்டியலில் 133 ஆம் இடத்தில உள்ளது. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில இருக்கும் நம்மால் மிக சிறிய நாடுகளை குடு வெல்ல முடியவில்லை காரணம் இந்தியாவில் கால்பந்தைவிட கிரிக்கெட் ஆட்டத்தை மக்கள் விரும்புகின்றனர். இந்திய அரசாங்கமும் இந்த விளையாட்டிற்கு பெரும் பங்கு அளிக்க  வில்லை . கோவா , கேரளா , வேச்ட்பேங்கால் , மணிப்பூர் , மிசாரம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் கால்பந்து மிகவும் ப்றேசுட்தி பெற்ற விளையாட்டு . மற்ற மாநிலங்களில் மிகவும் குறைவாகவே விளங்குகிறது . நம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டிற்கு குடுக்கும் சலுகைகளும் வசதிகளும் கால்பந்து விளையாட்டிற்கும் கிடைத்தால் நிச்சயமாக நமது நாடு உலக அளவில் சிறந்து விளங்கும் .
ஜாஸிம் புஹாரி  


Thursday, June 10, 2010

2010 உலக கோப்பை கால்பந்து போட்டியின் முக்கியமான வீரர்கள்




தென் ஆப்ரிக்காவில் நாளை (ஜூன் 11, 2010) துவங்க இருக்கும் பத்தொன்பதாம் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த ஆர்மமுடன் இருக்கிறார்கள். இந்த முறை கடுமையான போட்டியை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் முக்கியமான எட்டு கால்பந்து வீரர்களை பற்றி இங்கே பார்ப்போம். இவர்கள் மிகுந்த ஆபத்தான வீரர்கள் மட்டுமின்றி கோல் போட அதிகமான தாகம் உள்ளவர்கள்.


லியோநெல் மெச்சி (அர்ஜென்டினா)

           இவர் அர்கேன்டினா நாட்டின் தேசிய டீமில் விளையாடுகிறார். இந்த தலைமுறையின் மிக சிறந்த வீரர்களுள் ஒருவர் என்று சொல்லலாம். இவரின் இடம் ஸ்டிக்கர். கிளப் மேட்சிகளில் இவர் பார்சீலோனா கிளப் டீமிற்காக விளையடுவார். 2009 ஆம் ஆண்டின் கால்பந்தில் சிறந்த வீரராக வென்ற    லியோநெல் மெச்சி இதுவரை விளையாடிய போட்டிகள் 44 , அடித்த கோல்கள் 13. 

கிறிஸ்டினா ரொனால்டோ (போர்சுகள்)
             போர்சுகள்  கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் அந்த அணியின் முக்கியமான ஒரு ஸ்டிக்கரான கிறிஸ்டினா ரொனால்டோ 2009 ஆம் ஆண்டு முன்பு வரை மேன்செஸ்டர் டீமில் விளையாடி வந்த இவர் அந்த ஆண்டு முதல் ரியல் மாட்ரிட் டீமிற்காக விளையாடி வருகிறார். 72  போட்டிகள் விளையாடிய இவர் 22 கோல்களை போட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டின் கால்பந்தில் சிறந்த வீரராக வென்றவர்,


வேன் ரூனே (இங்கிலாந்த்)
                     இங்கிலாந்த் அணிக்காக விளையாடும் ஒரு ஆங்கில வீரர். இவரது இடம்: பீல்ட் மற்றும் பார்வேட். தற்போது மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வருபவர். 60 மேட்ச்களை விளையாடிய இவர் தனது நாட்டிற்க்காக 25 கோல்களை  அடித்து தந்துள்ளார். 

டிடியர் ட்ரோக்ப (கோட் டி ஐவொரி)

                 ஐவோரி கோஸ்ட் தேசிய கால்பந்து அணியில் விளையாடும் இவரது இடம் ஸ்ட்ரிக்கர். தற்போது விளையாடி வரும் கிளப்: செல்சா. 68  போட்டிகள் விளையாடிய இவர் 44 கோல்களை போட்டுள்ளார்.

பெர்னாண்டோ டோர்ரேஸ் (ஸ்பெயின்)
                 ஸ்பெயினின் தேசிய கால்பந்து அணியில் விளையாடும் இவரது இடமும் ஸ்ட்ரிக்கர். தற்போது விளையாடி வரும் கிளப்: லிவெர்பூல். 73 போட்டிகள் விளையாடிய இவர் அடித்த  கோல்களை 24

காகா (பிரேசில்)
                 பிரேசில் நாட்டின் தேசிய அணியில் விளையாடும் காகாவின் இடம் மிட் பீல்டர். இவர் விளையாடும் கிளப்: ரியல் மாட்ரிட். 78  போட்டிகள் விளையாடி27 கோல்களை போட்டுள்ள இவர் 2007 ஆம் ஆண்டின் கால்பந்தின் சிறந்த வீரராக வென்றவர்.

பாபியோ கமவோரா (இத்தாலி)
                 இத்தாலி நாட்டின் தேசிய அணியில் விளையாடும் காகாவின் இடம் மிட் சென்ட் பேக்.  133  போட்டிகள் விளையாடிய இவர் அடித்த கோள்கள் இரண்டு. 2008 கால்பந்து போட்டியில் சிறந்த வீரராக வென்றவர். டிபாண்டர் ஒருவர் சிறந்த வீரராக வென்றது இவர் மட்டுமே. இவர் இந்த உலக கோப்பைக்கு பிறகு துபையின் அல் அஹ்லி கிளப்பிற்காக விளையாட இருக்கிறார்.

லுகாஸ் போடோயச்கி (ஜெர்மனி)
                 ஜெர்மனி அணிக்காக விளையாடும் லுகாஸ் போடோயச்கியின் கிளப் கோலன். இவரது இடம் பார்வேட் மற்றும் வியர். 73 போட்டிகள் விளையாடிய இவர் அடித்த  கோல்களை 38
ஜாஸிம் புஹாரி, ஜாஃபர் ஷாதிக் 


Tuesday, June 8, 2010

ஆப்பிளின் புதிய மொபைல், ஐ-போன் 4


அமெரிகாக்கவில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான ஆப்பிள் கம்பெனியின் மாநாட்டில் ஆப்பிளின் புதிய மாடலான ஐ-போன் 4 என்கிற புதிய மாடலை ஆப்பிளின் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் அறிமுக படுத்தி வைத்தார். இந்த மாநாடு ஜூன் ஏழு முதல் ஜூன் பதினொன்றாம் தேதி வரை நடக்கிறது. அனைவரும் எதிர் பார்த்தது போல் 4G என்கிற நான்காம் தலைமுறை போனாக இல்லாமல் 3G என்கிற மூன்றாம் தலைமுறையிலே ஐ-போன் 4 என்கிற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த மாடலில் பல புதிய வசதிகளுடன் மார்க்கெட்டில் இருக்கும் மற்ற மொபைல் போன்களுக்கு கடுமையான போட்டியாக அமையும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது.
 

இதன் மற்ற சிறப்பு அம்சங்கள்  
கேமரா (பேஸ் டைம்)
பார்த்து கொண்டே பேசுவது போன்ற இரண்டு கேமரா வசதி கொண்ட முதல் மொபைலில், இருவரும் ஐ-போன் 4 மற்றும் WIFI வசதி இருந்தால் எந்த ஒரு கட்டனும் இன்று பார்த்து கொண்டே இருக்கலாம்.

டிஸ்ப்ளே
மிகவும் துல்லியமான, அதிநுட்ப வண்ணங்கள் கொண்ட இந்த டிஸ்ப்ளே 960X640 resolution களை கொண்டது. 3.5" கொண்ட இந்த டிஸ்ப்ளேவில் புகைப்படங்கள், காட்சிகள் மற்றும் எழுத்துக்களை மற்ற எந்த மொபைல்களை விட மிக தெளிவாக பார்க்கலாம். இதை பார்க்கலாம். இதை retine display என்று அழைக்கிறார்கள்.

Multi Tasking (மல்டி டாஸ்கிங்)
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான applications-ஐ பயன்படுத்தும் வசதி தற்போதுள்ள ஐ-போனில் இல்லை. ஆனால் இதில் நான்கு, ஐந்து அப்ளிகேஷன்ஸ் பயன்படுத்தி கொண்டிருந்தால் கூட வேகம் குறையாமலும், பேட்டரியின் ஆயுள் குறையாமலும் பயன்படுத்த முடியும். ஆனால் மென்பொருளை மாற்றி கொண்டால் தற்போதுள்ள 3ஜி மாடலில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

கேமரா
LED ஃப்ளாஷ் வெளிச்ச வசதிக் கொண்ட 5 மெகா பிக்ஷல் கேமரா வசதி இருப்பதால் ர்னு வீடியோ ரெகார்டிங் செய்து கொள்ளலாம். இந்த வீடியோ காட்சிகளை உடனுக்குடன் படத்தொகுப்பு செய்துக் கொள்ள முடிவதுடன் சுலபமாக மற்றவர்களுக்கு பகிர்ந்தும் கொள்ளலாம்.

மற்ற வசதிகள்
இதில் பொருத்தப்பட்டுள்ள ஆப்பிள் 4ஜி ப்ராசஸர; ஐபோன்களிலே மிக வேகமாக செயல்படக்கூடியது. இது ஆப்பிளின் முந்தைய வெளியீடான ஐபேடிலும் உபயோகிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி
Builtin Rechargable Lithium Ion பேட்டரி வசதிக் கொண்ட இது மற்ற ஐபேன் பேட்டரிகளை விட சிறந்தது.

பேசுவதற்கு   2ஜி: 14 மணி நேரங்கள்
                         3ஜி:   7 மணி நேரங்கள்

ஓலி கேட்டபதற்கு: 40 மணி நேரங்கள்

காட்சிகளுக்கு 10 மணி நேரங்கள்

இன்டர்நெட் பயன்படுத்த.. 3ஜி: 6 மணி நேரங்கள்
WIFI பயன்படுத்த:  10 மணி நேரங்கள்

கலர் :
இது கருப்பு மற்றும் வௌ;ளை நிறங்களில் கிடைக்கிறது.

Capacity: 16GB/32GB

OS:  I OS4

இதில் முக்கியமான ஒன்று மற்ற ஆப்பிள் மொபைல்களை விட வடிவத்தில் முற்றிலும் மாறுபட்டு தட்டையாக அமைந்துள்ளது.

-ஜாஸிம் புஹாரி, ஜாஃபர் ஷாதிக்


Sunday, June 6, 2010

பெர்முடா முக்கோணம்



பெர்முடா முக்கோணம் : இது சைத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது, பெர்முடா முக்கோணம் என்பது வட அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பிராந்தியமாகும், இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும்,கடற்கொள்ளை, எந்திர கோளாறு, அல்லது இயற்கை சீற்றங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த மறைதல்களுக்கு அமானுட சக்தி, அதாவது இயற்பியல் விதியை உடைத்து, பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஜீவன்களின் நடவடிக்கையை காரணமாக பொதுமக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்

முக்கோணப் பகுதி: இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.பல எழுத்து படைப்புகளில் மிகவும் பிரபலமான முக்கோண எல்லைகளாக இருப்பது, புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒரு இடம்; சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு, விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா ஜலசந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது. இந்த பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது, இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன.சொகுசுக் கப்பல்கள் ஏராளமாய் உள்ளன, பொழுதுபொக்கு விமானங்கள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஏராளமான வர்த்தக மற்றும் தனியார் விமானங்கள் செல்கின்றன.






இம்முக்கோண பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேர் எழிலுடன் காணப்பட்டாலும் நீரின் அடிபகுதி ஒரு சுழல் போல் உள்ளது.,இது வரைக்கும் 40 க்கும் மேற்பட்ட விமானகள் கப்பல்கள் பாய் மாற படகுகள் மாயமாய் மறைந்துள்ளன.,விஞ்ஞானிகளின் kutru படி இப்படி மறைந்த கப்பல்கள் யாவும் வேறு ஒரு பரினமாதில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். வேறு சில ஆய்வாளர்கள் இது வேற்று கிரத்தின் வாழும் aliens எனப்படும் உயிரினத்தின் மாயா வேலை என்று கூறுகிறார்கள். வேறு சில அறிவியல் ஆய்வாளர்களோ படிகம்ளிருந்து உருவாகும் காந்த இருப்பு விசை(due to ultra maganetic force) காரணமாக தான் விமானகளும் கப்பல்களும் ஈர்க்கபடுகிறது என்று கூறுகிறார்கள்.



பெர்முடா முக்கோணத்தின் மறு பகுதியில் உள்ள (பூமி உருண்டையில் மறுமுனை பகுதி) ஜப்பான் நாட்டு கிழக்கு கடற்கரை பகுதி பிசாசு கடல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது இங்கயும் பல கப்பல்கள் மயமாய் மறைந்துள்ளன., இந்த இரண்டு முனைகளிலும் காந்த ஈர்ப்பு விசையானது அதிகமாக இருக்கிறது ஆய்வாளர்களின் கருது படி இந்த இரண்டு கடல் பகுதிக்கும் எதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள்.,



அண்மைய கால ஆய்வின் படி எல்லா திட பொருள்களும் தமகுள்ளடகிய சக்தியை பெற்றிருக்கும், திட பொருள்கள் யாவும் இந்த சக்தியின் மறுவடிவம். (congealed energy)., எல்லா அணு முலக்குருகளும் இந்த சக்தியை பெற்றிருக்கும். எல்லா அணு முலக்குருகளுகுள்ளும் ஏலேக்ட்ரோன் ப்ரோடான் neutron இருக்கும் இதில் ஏலேக்ட்ரோன் என்ற முலக்குரனாது முந்திய நிலைக்கு செல்வதாக வைத்து கொண்டால் அது முலக்குரனாது காற்றில் கலந்து விடும்., நம்ம scintist thalayan என்ன சொல்ல வரான கப்பல் விமானம் எல்லாத்திலும் அலுமினியம் இரும்புனு நெறய முலகுருகளால்

1872-ஆம் ஆண்டு செசல்டி என்னும் பெயருடய பாய்மற கப்பல் மறைந்த நிகழ்ச்சியே முதல் முதலில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும்..
                                                      -முஹம்மத் சாதிக்



'ஓடுற பாம்பை கைல பிடிக்கிற வயசு'ன்னு சொல்லுவாங்க  ஊரு பெருசுங்க. ஆனா பாம்புன்னு பெயர கேட்டாலே அந்த இடத்தை விட்டு ஓடுற முதல் ஆளு நம்மாளா தான்  இருப்போம். இப்படி பயம் நம்மளை  ஆட்டிபடச்சுட்டுருக்கு., நமக்கு மட்டும் தான் இந்த பயம் இருக்குனு நினைக்காதீங்க,  பெரிய ஜாம்பவான்கள் கூட ஒரு சில சின்ன விசயங்களுக்கு பயப்படுவார்கள். அப்படி சிலரை பற்றி இங்கே பார்க்கலாம் ..

ஜானி  தேப்  
Pirates of the Carribean படத்துல நடிச்ச ஹீரோ ஜானி தேப்பிற்கு   சிலந்தி என்றால் அலறி அடிச்சுட்டு ஒடுவிடுவார் மனுஷன், ஒரு முறை los vegasla ஹோட்டல் ரூம்ல ஒரு சின்ன சிலந்தி பார்த்துட்டு ரூம்ல கத்தி பரதநாட்டியம் ஆடி ஹோட்டலே ஒரு வலி படித்திட்டாராம்..,

ராபர்ட் நீ ரோ
ஆஸ்கார் விருது வாங்கிய விண்ணேர் ராபர்ட் நீ ரோவுக்கு பல் மருத்துவர் என்றால் பயமாம், காரணம் ஒரு முறை லேசான பல் வலி காரணம். பல் மருத்துவரிடம் சென்றிக்குறார் அந்த டாக்டர் பல்ல பிரிச்சு மேன்சுட்டார் போல லேசான வலிய நிரந்தர வலியாக ஆகிட்டார்..,

முஹம்மது அலி
பிரபல குத்து சண்டை வீரர் முஹம்மது அலிக்கு விமானத்தில் ஏறுவது என்றால் பயமாம் (இந்த வியாதிக்கு ஏரோ போபிக் என்று பெயர்) இதனால் எந்த அவசரம் என்றாலும் விமானத்தில் செல்ல மாட்டார் ரயிலில் தான் செல்வார்..

மாவீரன் நெப்போலியன்
(he stands in the dessert )மாவீரன் நெப்போலியன் பத்தி கேள்வி பட்டுருபிக சும்மா எதிரி நாட்டு படைகளை துவம்சம் செஞ்சு சிதறடித்தவர் (நம்ம கேப்டன் விஜயகாந்த் மாதிரி இல்ல உண்மையலே) தனது பதினாலு வயதுலே ராணுவத்துல சேர்ந்த மனுஷனுக்கு புனை என்றால் அப்படியே one step back தானம்..,

ஜாக்கி ஜான்
நம்ம kunfu கராத்தே மாஸ்டர் ஜாக்கிசானுக்கு பாலத்துக்கு கிழே வண்டிய பார்க் பன்னுருது ரொம்ப பயமாம் ஒரு வேல பாலம் இடிஞ்சி வண்டியோட சேர்ந்து நசுங்கி இறந்து விடுவோம் என்ற பயமாம்., பாருடா police story படத்துல சும்மா பலத்துக்கு தண்டுவர் அப்போலாம் அவருக்கு இல்லாத  பயம் பலத்துக்கு கிலே park பண்ணும் போது தெரிது

- முஹம்மத் சாதிக் (கடுமையான எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்)


Sunday, May 30, 2010

அமீரகத்தில் உடம்பை குறைக்கும் கிரீன் டீ, காபிகளுக்கு தடை


ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுசூழல் மற்றும் சுகாதார அமைச்சவையில் உடம்பை குறைக்கும் கிரீன் டீ மற்றும் காபிகளுக்கு இன்று (மே 30, 2010) முதல் தடை விதித்து உள்ளது. லிப்டன் கம்பனின் இவ்வகை டீ, அதன் லேபிளில் குறிப்பிடாத பொருட்கள் அதில் சேர்க்க பட்டுள்ளது என்று இந்த தடையை விதித்து உள்ளது. லாபில் சோதனை செய்து கண்டிபித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 ஓபைத் ஜுமா அல் மற்றௌஷி (Obaid Juma Al Matroushi) , தற்காலிக சுற்றுசூழல் மற்றும் சுகாதார அமைச்சர் இந்த தடையை வெளியிட்டு இதை ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள எல்லா கடைகளிலும் விற்க தடை விதித்து உள்ளார். லேபிளில் குறிப்பிடாத Sibutramine என்கிற கலவையால் உடல் சீக்கிரம் குறைவதோடு பலவிதமான cardiovascular நோய்கள் வர அதிகமாக வாய்ப்புள்ளதாம். அமெரிக்கா லிப்டன் நிறுவனத்தில் தாரிக்கபடும் இந்த வகை டீ, கடந்த வாரம் சவுதி அரேபியாவிலும் இதே போன்று லேபிலில் இல்லாதவைகள் இருந்ததாக தடை விதிக்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அமீரகத்தில் தடை விதித்துள்ள இரு பொருட்கள்: 
லிப்டன் காபி 800

லிப்டன் ஸ்லிம்மிங் பாக் கிரீன் டீ 


Saturday, May 29, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் அதிகரிப்பு




இன்று (மே 29, 2010) சனிக்கிழமை துபாயில் வெளியிட்டுள்ள செய்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் 3.2 சதவீதம் அதிகரித்து உள்ளதாக நாட்டின் நிதி அமைச்சர் சுல்தான் பின் சாயத் அல் மன்சூரி (Sultan bin Saeed Al mansuri) அவர்கள் பத்திரிக்கையாளர்களுடன் தெரிவித்தார். கடந்த ஆண்டு இது 1.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது இருந்தது. இந்த பொருளாதார வளர்ச்சியில் எண்ணெய் இரண்டு முதல் இரண்டரை சதவீதம் உதவியாக இருந்தாக அவர் மேலும் தெரிவித்தார். ஒரு பெரல் 85 அமெரிக்க டாலராக இருந்த எண்ணெயின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 95 அமெரிக்க டாலர் வரை உயர கூடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தில் 29.4 சதவீதம் எண்ணெய் மூலமாகவும்,  71.6 சதவீதம் மற்ற துறையின் மூலம் வருமானம் வருவதாக தெரிவித்தார். 

எண்ணெய் இல்லாத மற்ற துறையால் வருமான சதவீதம்:
16.2 சதவீதம் : உற்பத்தி 
10.7 சதவீதம் : கட்டிடவியல் 
9 சதவீதம் :  மொத்த வியாபாரம், வணிகம்           
8.2 சதவீதம் : ரியல் எஸ்டேட்     
8 சதவீதம் : அரசு  துறைகள்  
7.1 சதவீதம் : போக்குவரத்து, சேமித்தல் மற்றும் தொலைதொடர்பு 
5.8 சதவீதம் : வங்கி மற்றும் மற்ற பொருளாதார துறைகள்   
1.8 சதவீதம் : ஹோட்டல் மற்றும் உணவாக துறைகள் 
1.7 சதவீதம் : விவசாயம், மீன் பிடித்தல் போன்ற துறைகள்  
1.6 சதவீதம் : மின்சாரம், தண்ணீர் போன்ற துறைகள்  


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha