JASH PHOTOGRAPHY

Sunday, May 9, 2010

லண்டனின் ஹர்ரோட்ஸ் நிறுவனத்தை கத்தார் ஹோல்டிங் வாங்கியது


லண்டனின் புகழ் பெற்ற ஹர்ரோட்ஸ் (Harrods)  நிறுவனத்தை கத்தார் ஹோல்டிங் வாங்கியது. லண்டனில் புகழ் பெற்ற டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஹர்ரோட்ஸ்-ஐ 2.2 பில்லியன் டாலர்களுக்கு விற்றுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் இந்தியா மதிப்பு சுமார் பத்தாயிரம் கோடி. இதை லண்டனில் வெளிவரும் பி.பி.சி மற்றும் ஸ்கை நியூஸ் வெளியிட்டது. 1834 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹர்ரோட்ஸ் இதுவரை ஐந்து பேருக்கு கைமாறி உள்ளது. இப்போது வாங்கியுள்ள கத்தார் ஹோல்டிங், கத்தார் நாட்டுக்கு சொந்தமானது. அந்த நாட்டின் பிரதமர் ஷேய்க் ஹமத் பின் ஜாஸ்சிம் அல்-தானி (Sheikh Hamad Bin Jassim Al-Thani) தான் இதன் சார்மேன். 1986 ஆம் ஆண்டு மொஹம்மத் அல் பாயீத் (Mohamed Al-fayed) வாங்கிய இந்த கம்பெனியை 24 வருடம் கழித்து இப்போது விற்று  இருக்கிறார். இவர் தனது குழந்தைகள் மற்றும் பேரக  குழந்தைகளுடன் நேரம் செலவிட இருப்பதால் இதை விற்பதாக தெரிவிக்கிறார். 77 வயது வயதாகும் மொஹம்மத் அல் பாயீத் எகிப்து நாட்டில் பிறந்தவர் என்றாலும் லண்டனின் புகழ் பெற்ற கோடீஸ்வரர். இவர் புல்ஹாம் கால்பந்து கிளப் (Fulham Soccer Club) மற்றும் ரிட்ஸ் ஹோட்டல் (Ritz Hotel) வைத்துள்ளார். இவரின் ஐந்தாவது பையன் டோடி பாயீத் (Dodi Fayed ) இங்கிலாந்த் இளவரசி டயானாவுடன் மிக நெருக்கமா இருந்து அதே சாலை விபத்தில் இளவரிசியுடன் பலியானார்.  இவர் ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரும் கூட. 

ஹர்ரோட்ஸ் நிறுவனம் அதே பெயரில் பல பிசினஸ்கள் செய்து வருகின்றது. ஹர்ரோட்ஸ் வங்கி, ஹர்ரோட்ஸ் எஸ்டேட், ஹர்ரோட்ஸ் aviation, ஏர் ஹர்ரோட்ஸ். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வரு விதத்தில் சிறந்தது.  ஹெலிகாப்ட்டர் நிறுவனமா ஏர் ஹர்ரோட்சில் தான் இங்கிலாந்த் பிரதமர் டோனி ப்ளைர் ஜி8 மாநாட்டிற்கு செல்வாராம். மொஹம்மத் அல் பாயீத் இதை விற்க போகிறார் என்று அறிவித்ததும் கத்தார் ஹோல்டிங் இதை உடனே வாங்கிவிட்டது. 

கத்தார் ஹோல்டிங் சில குறிப்புகள்
அக்டோபர் 2008 : 
     இங்கிலாந்தின் பர்ச்லிஸ் வங்கி (Barclays Bank) மற்றும் சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சுசி குரூப்(Credit Susie Group) யின்  அதிகமான பங்குகளை வாங்கியது. 
ஜூன் 2009 : 
     நியூ யார்க் பண்டு நிரவனமான NYSE யுடன் ஒரு ஒப்பந்தம் செய்தது. 
ஆகஸ்ட் 2009 :  
     உலக புகழ் கார் நிறுவங்கள் போர்ச்சே (Porsche) மற்றும் வோல்க்ஸ்வாகன்(Volkswagen) நிறுவனத்தின் அதிகமான பங்குகளை வாங்கியது. 
* அக்டோபர் 2009 : 
      சொன்க்ப்ரிட் எஸ்டேட்ஸ் (Sangbird Estates) நிறுவனத்தின் அதிகமான பங்குகளை வாங்கியது.  
* மே 2010 : 
      இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஹர்ரோட்ஸ் நிறுவனத்தை வாங்கியது 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

1 Comment:

Arun said...

கத்தார ஹோல்டிங்ஸ்,மூளைகரனாக இருப்பாங்க போல.

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha