வடிவேலு ஒரு படத்தில் "நானும் ரவுடி.. ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்னு" சொல்லிடு போவாரு, அதை மாதிரி நானும் ஒரு இணயத்தளம் வைத்து இருக்கிறேன் என்று பெருமை அடித்து கொள்ள மட்டுமே பயன்பட்டது இந்த ஊடகம்.
ரௌடிக்கு உரிய எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் வடிவேலு அவ்வாறு சொல்வதை போல் இணையதளத்திற்கு உரிய பெரிய அடையாளங்கள் எதுவும் இன்றி இதை துவங்கி நடத்தி வருகிறேன்.
என்ன அப்டேட் பண்ணுவது, யாரு இதை படிக்கிறார்கள் என்றும் எந்த ஒரு அனலிசிஸ்சும் இல்லை, திட்டமும் இல்லை. கடல் மணலில் சிறு குழந்தை கட்டிய வீட்டை போன்று சில கண்களுக்கு மட்டும் அழகாக தெரியலாம்.
ஊடகத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று ஒரு சிறு யோசனை இந்த பதிவு.
0 Comments:
Post a Comment